Mahindra XUV700 Recall For Diesel AWD: மஹிந்திரா XUV700-க்கு முதல் ரீகால் அழைப்பு..
ப்ரோப்பல்லர் ஷாஃப்ட்டில் உள்ள சிக்கல்கள் காரணமாக விற்பனையான XUV700 கார்களை மஹிந்த்ரா ரீகால் செய்துள்ளது.
ப்ரொப்பல்லர் ஷாஃப்ட்டில் உள்ள சிக்கல்கள் காரணமாக விற்பனையான XUV700 கார்களை மஹிந்த்ரா ரீகால் செய்துள்ளது.
ப்ரொப்பல்லர் ஷாஃப்ட்டில் உள்ள சில கோளாறு:
சென்ற வருடம் அறிமுகமான இந்த எஸ்யூவியின் ஆல் வீல் டிரைவ் வேரியண்ட்களில் மட்டும் ப்ரொப்பல்லர் ஷாஃப்ட்டில் உள்ள சில கோளாறுகளை சரிசெய்து தர மஹிந்திரா இந்த ரீகால் அழைப்பை வெளியிட்டுள்ளது. எத்தனை கார்களில் இந்த சிக்கல்கள் உள்ளன அதில் எத்தனை விற்பனையாகி உள்ளன என்ற எண்ணிக்கை இன்னும் சரியாக தெரியவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மஹிந்த்ரா இதை மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது.
மஹிந்திரா XUV700க்கு முதல் ரீகால் அழைப்பு:
ரீகால் செய்யப்பட்ட அனைத்து ஆல் வீல் டிரைவ் எஸ்யூவிக்களின் ப்ரொப்பல்லர் ஷாஃப்ட் போல்ட்களை பரிசோதித்து ஏதேனும் சிக்கல்கள் இருக்கிறதா என்று ஆய்வு செய்யப்படும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து XUV700க்கு மஹிந்திரா வழங்கிய முதல் ரீகால் இது.
ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் மற்றும் வேரியண்ட்கள்:
XUV700-ன் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் 2 வேரியண்ட்களில் வருகிறது.
ஒன்று டாப் வேரியண்ட் 'AX7 Diesel AT Luxury Pack AWD'
மற்றொன்று இதற்கடுத்த வேரியண்ட் 'AX7 AWD Diesel AT'.
இந்த இரண்டு வேரியண்ட்களும் 2.2 லிட்டர் mHawk டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகின்றன, இது 182 hp ஆற்றலையும் 420 nm டார்க்கையும் வெளிப்படுத்தும். இதனுடன் 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி XUV700-க்கு 23 மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியட் உள்ள நிலையில் XUV700-ன் டெலிவரி இந்தியா முழுவதும் 70,000 நிலுவையில் உள்ளன. இதனால் மஹிந்த்ரா புதிதாக அறிமுகப்படுத்திய Scarpio N-ன் டெலிவரி காலமும் தள்ளிப்போகிறது.
கார்களில் பயன்படுத்தப்படும் சிப் உற்பத்தியில் ஏற்பட்ட தட்டுப்பாடும், டெலிவரியில் உள்ள சிக்கலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. Global NCAP 'பாதுகாப்பான கார்' என்ற விருதை XUV700-க்கு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற க்ராஷ் டெஸ்ட்களில் 5-ஸ்டார் ரேட்டிங்க் வாங்கிய ஒரே கார் XUV700 என்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் இதற்கு பெரிய அளவில் வரவேற்பு இருந்துவருகிறது.