KTM BIKE: அட்டகாசமான அப்டேட்களுடன் அறிமுகமான 2023 கேடிஎம் 890 அட்வென்ச்சர்.. ஆனால் இந்தியாவில்?
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கேடிஎம் நிறுவனம் தனது புதிய 890 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.
கேடிஎம் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் தனது 890 அட்வென்ச்சர் R மோட்டர்சைக்கிளை மேம்படுத்தியது. அதைதொடர்ந்து தற்போது 2023ம் ஆண்டிற்கான புதிய வெர்ஷன் 890 அட்வென்ச்சர் மாடலை கேடிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள மோட்டார்சைக்கிளில் இருந்த அம்சங்கள் மற்றும் மெக்கானிக்கல் பாகங்கள், புதிய மாடலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய வாகனத்தில் வாடிக்கையாளர்கள் கஷ்டமைசேஷன் செய்வதற்கான, அதிக வாய்ப்புகளை வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது. அதேநேரம், அட்வென்ச்சர் ஸ்டைலிங் மற்றும் உயரமான ஸ்டான்ஸ் 2023 மாடலிலும் பின்பற்றப்பட்டு உள்ளது.
இன்ஜின் விவரம்:
புதிய 2023 கேடிஎம் 890 அட்வென்ச்சர் மாடலில் 889சிசி, LC8c பேரலல் ட்வின் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 103 குதிரைகளின் சக்தி, 100 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ்ம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்டீல் டியூப் ஆல்டர் செய்யப்படாமல், ரிவேம்ப்டு 43mm WP அபெக்ஸ் USD ஃபோர்க்குகளை கொண்டுள்ளது. பின்புறம் WP அபெக்ஸ் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.
New bike news: @KTM_UK reveal tweaked 890 Adventure for 2023 with new looks and fresh tech.
— Motor Cycle News (@MCNnews) November 30, 2022
More here 👉 https://t.co/pgOH7DaxG3 pic.twitter.com/U2YGrs5xXN
வாகனத்தின் இதர சிறப்பம்சங்கள்:
புதிய 2023 கேடிஎம் 890 அட்வென்ச்சர் மாடலில் மேம்பட்ட 5-இன்ச் TFT ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, குயிக்ஷிஃப்டர், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் செட்டிங்ஸ் உள்ளது. இதன் பிரேக்கிங் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு உள்ளது. புதிய மோட்டார்சைக்கிளில் முகப்பு விளக்கு ம்ற்றும் ஸ்கிரீன் டிசைன் ஆல்டர் செய்யப்பட்டுள்ளது. முன்புறம் மற்றும் பக்கவாட்டு ஃபேரிங் அதிகளவு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்த மாடலில் செங்குத்தாக பொருத்தப்பட்ட எல்.ஈ.டி முகப்பு விளக்குகள் உள்ளன. அதோடு புதிய விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது. என்ஜின் மற்றும் ஃபியூவல் டேன்க் உள்ளிட்டவைகளை பாதுகாக்க புதியதாக, அலாய் GUARD பொருத்தப்பட்டுள்ளது.
விலை விவரம்:
கேடிஎம் நிறுவனம் 2023 மாடலின் விலை விவரங்களை இதுவரை அறிவிக்கவில்லை. எனினும், முந்தைய மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ. 10 லட்சத்து 19 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அந்த வகையில் புது மாடலின் விலை இதைவிட சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் ஐரோப்பாவில் மட்டுமே 2023 கேடிஎம் 890 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதிய பைக்கை தற்போதைக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை என, கேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.