மேலும் அறிய

Hyundai SUV 2024: ஹுண்டாயின் 2024 கணக்கு.. தாறுமாறாக களமிறங்க உள்ள 4 புதிய எஸ்யுவிக்கள், விவரங்கள் உள்ளே..!

hyundai suvs 2024: ஹுண்டாய் நிறுவனம் 2024ம் ஆண்டில் அதிரடியாக நான்கு புதிய எஸ்யுவிக்களை களமிறக்க திட்டமிட்டுள்ளது.

hyundai suvs 2024: ஹுண்டாய் நிறுவனம் 2024ம் ஆண்டில் ஒரு மின்சார வாகனம் மற்றும் 3 ஃபேஸ்லிப்ட்கள் என மொத்தம் நான்கு புதிய எஸ்யுவிக்களை களமிறக்க உள்ளது.

ஹுண்டாய் எஸ்யுவி:

Hyundai நிறுவனம் நடப்பாண்டில் அதன் பெரும்பாலான சிறிய கார்களை மிட்-லைஃப்சைக்கிள் ஃபேஸ்லிஃப்ட்களுடன் புதுப்பித்தோடு, Ioniq 5, Exter மற்றும் Verna ஆகிய கார்களை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து 2024 ஆம் ஆண்டில், இந்தியாவில் தனது SUV வரிசையை முழுமையாக மறுசீரமைக்க அந்நிறுவனம் விரும்புகிறது. அதன்படி  க்ரெட்டா, அல்காசார், டக்சன் மட்டுமின்றி புதிய க்ரெட்டா மின்சார வாகனத்திற்கும் அப்டேட் வழங்கப்பட உள்ளது. அதொடர்பான விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

Hyundai Creta facelift:

 Creta மாடலில் வெகுவிரைவாகவே அதன் முதல் மிட்-லைஃப்சைக்கிள் அப்டேட்டை பெற உள்ளது. இதன்மூலம் உள்ளேயும் வெளியேயும் விரிவான மாற்றங்களை பெற உள்ளது. சோதனை ஓட்ட புகைப்படத்தின் அடிப்படையில் புதிய ஃபேஸ்லிப்டில், உலகளாவிய ஃபிளாக்ஷிப் மாடலான தி பாலிசேட்ட்ல் இருக்கும் சாதனங்கள் சில கிரேட்டாவில் இடம்பெறலாம். மறுவடிவமைக்கப்பட்ட கிரில், செங்குத்தாக பொருத்தப்பட்ட ஸ்பிலிட் புரொஜெக்ட்  முகப்பு விளக்குகள், பகலில் எரியக்கூடும் ஹாரிஜாண்டல் எல்.ஈ.டி விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. உட்புறத்தில் லேசான மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. அதில் குறிப்பிடத்தக்கதாக ADAS, 360-டிகிரி கேமரா மற்றும் மேம்படுத்தப்பட்ட 10.25-inch இன்ஃபோடெயின்மெண்ட் தொடுதிரை ஆகிய சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷனானது மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் என இரண்டு வகையான கியர்பாக்ஸிலும் வழங்கப்படுகிறது. இதோடு, 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் கிடைக்கிறது. 

Hyundai Alcazar facelift:

க்ரெட்டாவை தொடர்ந்து  மூன்று இருக்கை வரிசை கொண்ட Alcazar மாடலும், அதன் முதல் பெரிய மிட்-லைஃப்சைக்கிள் ஃபேஸ்லிஃப்டை எதிர்கொள்ள உள்ளது. இதன் மூலம் விரிவான வெளிப்புற மற்றும் உட்புற புதுப்பிப்புகள் வழங்கப்பட உள்ளது. உட்புறத்திலும், புதிய அப்ஹோல்ஸ்டரி மற்றும் டிரிம் விருப்பங்களுடன், க்ரெட்டா மாடலில் வழங்கப்பட்டதை போல அல்காசரிலும் சில உபகரண சேர்ப்பை எதிர்பார்க்கலாம். க்ரெட்டாவைப் போலல்லாமல், அல்காசர் ஏற்கனவே இன்ஜின் ஆப்ஷன்களில் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, புதிய ஃபேஸ்லிப்ட் மாடலானது 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. டிரான்ஸ்மிஷனில் எந்த புதிய மாற்றங்களும் இருக்காது என கூறப்படுகிறது.

Hyundai Tucson facelift:

ஹூண்டாய் டக்சன் ஃபேஸ்லிப்ட் மாடலில் வெளிப்புற புதுப்பிப்புகள் மிகக் குறைவாகவே உள்ளது. அதன்படி, சற்று மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கிரில், பகல் நேரத்திலும் எரியும் LED விளக்குகள் மற்றும் பம்ப்பர்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம்,  உட்புறத்தில் ஒரு விரிவான மேக்ஓவரைப் பெறுகிறது. டேஷ்போர்டு வடிவமைப்பு முற்றிலும் புதியது. இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆனது மென்மையாய், வளைந்த ஒரு துண்டு பேனலில் இடம்பெற்றுள்ளது.  சென்டர் கன்சோல் பகுதி மிகவும் சிறிய அமைப்பைக் கொண்டுள்ளது.ஒரு புதிய ஸ்டீயரிங் உள்ளது. HVAC அமைப்பிற்கான புதிய உடல் டயல்களும் உள்ளன. இந்தியா-ஸ்பெக் மாடல் ஹூட்டின் கீழ் மாறாமல் இருக்கும். அதாவது தற்போதுள்ள 2.0-லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0-லிட்டர் டீசல் இன்ஜின்கள் முறையே 6-ஸ்பீடு மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும். இரண்டாவது இன்ஜின் ஆப்ஷன் விருப்ப AWD அமைப்பையும் பெறுகிறது.

Hyundai Creta EV:

ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் மின்சார வாகனமானது அதன் சிறந்த எஸ்யுவி ஆன கிரேட்டா அடிப்படையில் அறிமுகமாக உள்ளது. இதற்கான பிளாட்ஃபார்ம் சில மாற்றங்களுடன் இருந்தாலும். வழக்கமான க்ரெட்டாவின் பாடிஷெல் தான் இதிலும் இடம்பெறுகிறது.  அதன் ஸ்டைலிங் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். உட்புறம் மற்றும் உபகரணப் பட்டியல் ICE பதிப்பைப் போலவே இருக்கக்கூடும். LG Chem ஆல் வழங்கப்படும்  45kWh பேட்டரி பேக் Creta EV-ல் பயன்படுத்தப்படுகிறது.  எலக்ட்ரிக் மோட்டார் சமீபத்திய தலைமுறையை சேர்ந்ததாக இருக்கும். அதாவது முன் அச்சில் உள்ள ஒற்றை மோட்டார் மூலம் இது 138hp ஆற்றலையும் 255Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும்.  MG ZS EV மாடலானது கிரேட்டா மின்சார வாகனத்தின் நேரடி போட்டியாளராக இருக்கும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
Delhi Railway Station Stampede: டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.