Hyundai i20: நம்பி வாங்கிய ஹேட்ச்பேக் - ஹுண்டாய் i20-யின் உண்மையான மைலேஜ் நிலவரம், கம்மி விலைக்கு வொர்த்தா?
Hyundai i20 Mileage: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹுண்டாயின் ஐ20 கார் மாடலின், மைலேஜ் விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Hyundai i20 Mileage: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹுண்டாயின் ஐ20 கார் மாடல், இரண்டு ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ஹுண்டாய் i20 ஹேட்ச்பேக்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிடைக்கும் பிரபலமான ஹேட்ச்பேக்குகளில் ஹுண்டாயின் i20 கார் மாடலும் ஒன்று. 5 பேர் அமரும் வகையிலான இடவசதியை கொண்ட இந்த காரானது, எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஸ்டா ஆகிய வேரியண்ட்களில் கிடைக்கப்பெறுகிறது. இது போக N-லைனில் N6 மற்றும் N8 என இரண்டு வேரியண்ட்களும் சந்தையில் கிடைக்கின்றன. i20 காரானது நகர்ப்புறங்களுக்கும், தினசரி பயணங்களுக்கும், தனிநபர் மற்றும் சிறிய குடும்பங்கள் வசதியாக பயணிக்கவும் நல்ல தேர்வாக உள்ளது.
ஹுண்டாய் i20 - விலை:
ஹேட்ச்பேக்கின் விலையானது ரூ.7.02 லட்சத்தில் தொடங்கி, ரூ.12.37 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. அதேநேரம், 13 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் ஆன் ரோட் விலையானது சென்னையில் ரூ.8.99 லட்சத்தில் தொடங்கி ரூ.13.98 லட்சம் வரை நீள்கிறது. உள்நாட்டு சந்தையில் மாருதி சுசூகி பலேனோ, டாடா ஆல்ட்ரோஸ் மற்றும் டொயோட்டா கிளான்ஸா ஆகிய கார் மாடல்களுடன் போட்டியிடுகிறது.
ஹுண்டாய் i20 - தொழில்நுட்ப அம்சங்கள்
பவர் ஸ்டியரிங், பவர் விண்டோஸ், ஏசி, கிளைமேட் கண்ட்ரோல், அலாய் வீல்கள், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி உடன் கூடிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட், குறிப்பிட்ட வேரியண்ட்களில் சன்ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜிங் மற்றும் போஸ் பிரீமியம் 7 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஆகிய அம்சங்களை பெற்றுள்ளது. ஸ்டார்ரி நைட் மற்றும் டைடன் கிரே உள்ளிட்ட 8 வண்ணங்களில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. பாதுகாப்பிற்காக இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், குறிப்பிட்ட வேரியண்ட்களில் ADAS தொழில்நுட்பம் ஆகியவற்றை கொண்டுள்ளது. கூடுதலாக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் ஸ்டேண்டர்டாக வழங்கப்பட்டுள்ளன.
ஹுண்டாய் i20 - இன்ஜின் விவரங்கள்:
i20-யில் இடம்பெற்றுள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆனது 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேடிக் ட்ராஸ்மிஷன் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. மேனுவல் எடிஷன் லிட்டருக்கு 16 கிலோ மீட்டர் மைலேஜும், ஆட்டோமேடிக் எடிஷன் லிட்டருக்கு 20 கிலோ மீட்டர் மைலேஜும் வழங்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நிஜ உலகில் குறிப்பிட்ட மைலேஜை வழங்குகிறதா? என்றால் இல்லை என்பதே பதிலாக உள்ளது.
ஹுண்டாய் i20 - உண்மையான மைலேஜ்?
ஹேட்ச்பேக்கை பயன்படுத்துவோரின் கருத்தின்படி, இது லிட்டருக்கு சராசரியாக 15.6 முதல் 17.37 கிலோ மீட்டர் மைலேஜையே வழங்குகிறது. கார் உரிமையாளர்கள் மற்றும் வாடகை ஓட்டுனர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, நகர்ப்புறத்தில் ஓட்டும்போது லிட்டருக்கு 14 முதல் 16 கிலோ மீட்டரும், நெடுஞ்சாலைகளில் ஓட்டும்போது 19 முதல் 22 கிலோ மீட்டரும் i20-யில் மைலேஜ் கிடைப்பதாக கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால், நகர்ப்புறங்களை காட்டிலும், நெடுஞ்சாலைகளில் இது சராசரியாக கூடுதல் மைலேஜ் வழங்குகிறது.
வேரியண்ட் அடிப்படையில் மைலேஜ்:
ட்ரான்ஸ்மிஷன், பவர் மற்றும் டார்க் ஆகியவற்றின் அடிப்படையில், ஒவ்வொரு i20 வேரியண்டின் மைலேஜும் மாறுபடுகிறது.
| வேரியண்ட் | ட்ரான்ஸ்மிஷன் | டார்க் | பயனாளர் அடிப்படையிலான மைலேஜ் |
| i20 எரா | மேனுவல் | 114.7Nm @ 4200 rpm | 19 கிமீ/லி |
| i20 மேக்னா | ஆட்டோமேடிக் | 114.7Nm @ 4200 rpm | 15 கிமீ/லி |
| i20 ஸ்போர்ட்ஸ் | மேனுவல் | 114.7Nm @ 4200 rpm | 17 கிமீ/லி |
| i20 ஆஸ்டா (O) | மேனுவல் | 114.7Nm @ 4200 rpm | 17.65 கிமீ/லி |
i20 - தினசரி பயன்பாட்டில் மைலேஜில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள்:
போக்குவரத்து நிலை: கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆக்சிலரேட்டரையும், பிரேக்கையும் மாற்றி மாற்றி பயன்படுத்த வேண்டி இருக்கும். மீண்டும் மீண்டும் நிறுத்துவது மற்றும் தொடங்குவது ஆகிய இந்த செயல்முறையானது, இன்ஜினின் பணியை அதிகரித்து எரிபொருள் திறனை பாதிக்கும்.
அக்ரெசிவ் ட்ரைவிங்: வாகனம் ஒட்டும் ஒருவது பழக்க வழக்கமும் மைலேஜில் தாக்கத்தை ஏற்படுத்தும். தீவிரமான வேகம், திடீரென வேகத்தை கூட்டுவது, திடீரென பிரேக் போடுவது ஆகியவை மைலேஜை குறைக்கும். இதன் காரணமாகவே நெடுஞ்சாலைகளை காட்டிலும், நகர்ப்புறத்தில் மைலேஜ் குறைவாக உள்ளது.
சாலையின் தரம்: சாலையின் பரப்பில் உள்ள மேடுகளும், பள்ளங்களும் கூட வாகனத்தின் எரிபொருள் செயல்திறனை பாதிக்கிறது. உயரமான சாலைகள் இன்ஜினின் தீவிர செயல்பாட்டை எதிர்பார்த்து அதிக எரிபொருளை எடுத்துக்கொள்கிறது. அதேநேரம், தீவிர சாய்வான சாலையில் இன்ஜின் மீதான அழுத்தம் அதிகளவில் குறைகிறது.
இதுபோக ஏசி பயன்பாடு, சீரான் இடைவெளியில் முறையான பராமரிப்பு ஆகியவையும் மைலேஜில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
i20 - மைலேஜை மேம்படுத்த ஆலோசனைகள்
- ஆண்டிற்கு ஒருமுறையும், 10 ஆயிரம் கிலோ மீட்டர் பயணத்தை பூர்த்தி செய்யும் ஒவ்வொரு முறையும் வாகனத்தை சர்வீஸ் செய்ய தவறாதீர்கள்
- டயர்களின் நிலையை சீராக ஆராய்ந்து அதிக தேய்மானம் கண்டிருந்தால் உடனடியாக மாற்றுங்கள்
- பிரேக் மற்றும் ஆக்சிலரேட்டை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்த்து வாகனத்தை சீராக செலுத்துங்கள்
- அதிகப்படியான எடையை ஏற்றுவதை தவிருங்கள்





















