Electric Car Charge Price: எலெக்ட்ரிக் கார் வாங்கினால் போதுமா.... சார்ஜ் செய்ய எவ்வளவு ஆகும்? ஒரு யூனிட்டுக்கு இவ்வளவு சார்ஜா?
சமீபகாலமாக அரசாங்கம் எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவித்து வருவதால் மக்களும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
![Electric Car Charge Price: எலெக்ட்ரிக் கார் வாங்கினால் போதுமா.... சார்ஜ் செய்ய எவ்வளவு ஆகும்? ஒரு யூனிட்டுக்கு இவ்வளவு சார்ஜா? How Much Does It Take To Fully Charge An Electric Car? Know The Rate Per Unit Electric Car Charge Price: எலெக்ட்ரிக் கார் வாங்கினால் போதுமா.... சார்ஜ் செய்ய எவ்வளவு ஆகும்? ஒரு யூனிட்டுக்கு இவ்வளவு சார்ஜா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/22/f228546fed3d9e547b8e92a4d018d952_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சமீபகாலமாக அரசாங்கம் எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவித்து வருவதால் மக்களும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், மக்களிடம் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் மக்களுக்கு ஒரு சிறு தயக்கம் இருக்கக் காரணம் அதனை சார்ஜ் செய்வதில் இருக்கும் சந்தேகங்கள். அரசாங்கமும் பெட்ரோல் பங்குகள் போல் எலெக்ட்ரிக் ஸ்டேஷன்கள் அமைப்பதையும் ஊக்குவித்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுடன் ஒப்பிடும்போது எலெக்ட்ரிக் கார்களை பராமரிக்க ஆகும் செலவு மிகவும் குறைவாகதான் இருக்கும். இதன் காரணமாகவும் வாடிக்கையாளர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் கார்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. பெட்ரோல், டீசல் விலை அதிகமாகிவரும் சூழலில் மக்கள் கவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் திரும்பியுள்ளது.
அந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்வோம் வாருங்கள்.
சார்ஜ் செய்ய செலவு எவ்வளவு?
எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதைப் பொறுத்தவரையில், டெல்லியில் இதற்கான கட்டணம் மும்பை மெட்ரோவை ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. ஒரு யூனிட் சார்ஜ் செய்ய மும்பையில் ரூ.15 செலவாகும். டெலியில் லோ டென்ஷன் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்ய ஒரு யூனிட்டுக்கு ரூ.4.50 காசுகள் வசூலிக்கப்படுகிறது. அதே ஹை டென்ஷன் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்ய ஒரு யூனிட்டுக்கு ரூ.5 வசூலிக்கப்படுகிறது. ஒரு காரை முழுமையாக சார்ஜ் செய்ய 20ல் இருந்து 30 நிமிடங்கள் வரை செலவாகும். ரூ.120 முதல் ரூ.150 வரை செலவு செய்தால் முழு காரையும் சார்ஜ் செய்துவிடலாம். மும்பையில் காரை சார்ஜ் செய்ய ரூ.200 முதல் ரூ.400 வரை செலவாகும்.
சார்ஜ் செய்ய நேரம் எவ்வளவாகும்?
எலெக்ட்ரிக் வாகங்களை இரு வகைகளில் சார்ஜ் செய்யலாம். ஃபாஸ்ட் சார்ஜிங், ஸ்லோ சார்ஜிங் இரு வாய்ப்புகள் உள்ளன. 60 முதல் 110 நிமிடங்கள் ஆகும். ஸ்லோ சார்ஜிங் 6 முதல் 7 மணி நேரம் பிடிக்கும்.
சார்ஜ் செய்த கால் எவ்வளவு மைலேஜ் கொடுக்கும்?
ஒரு கார் சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் எவ்வளவு நாள் அது ஓடும் என்ற கேள்வி வாடிக்கையாளர்களுக்கு இருக்கும். இது ஒவ்வொரு காரின் என்ஜின் திறன் பொறுத்தது. மணிக்கு 15 கிமீ வேகத்திறன் கொண்ட ஒரு கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கி.மீ வரை செல்லமாம். இருப்பினும் டெஸ்லா கார்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ வரை செல்லக்கூடும்.
மாறிவரும் கால சூழலில், உலக நாடுகள் அனைத்துமே பருவநிலை மாற்றத்தால் பெரிதாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்துவது நாம் பூமிக்கு செய்யும் நன்மையும் கூட.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)