மேலும் அறிய

Activa 6G: கீ லெஸ் மாடலுக்கு கிடைத்த அமோக வரவேற்பு.. ஆக்டிவா 6ஜிக்கு கூடுதல் அப்டேட்களை வாரி வழங்கும் ஹோண்டா

கீ லெஸ் ஆக்டிவா ஸ்கூட்டருக்கு எதிர்பார்த்ததை விட கூடுதல் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, 6ஜி மாடல் ஸ்கூட்டரில் பல்வேறு புதிய அம்சங்களை சேர்க்க ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கீ லெஸ் ஆக்டிவா ஸ்கூட்டருக்கு எதிர்பார்த்ததை விட கூடுதல் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, 6ஜி மாடல் ஸ்கூட்டரில் பல்வேறு புதிய அம்சங்களை சேர்க்க ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆக்டிவா ஸ்கூட்டர்:

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடல்களில் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்த பயனாளர்களின் அனுபத்தையும் மேம்படுத்தும் நோக்கில், ஆக்டிவா ஸ்கூட்டரில் தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் H-ஸ்மார்ட் டெக்னாலஜி கொண்ட ஸ்மார்ட் கீ வசதி கொண்ட ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. அது கார்களில் இருப்பதை போன்ற ஆட்டோ லாக்/அன்லாக், பார்க் செய்த இடத்தை கண்டறிவது மற்றும் கீ லெஸ் ஸ்டார்ட் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. அந்த ஸ்கூட்டருக்கு எதிர்பார்த்தை காட்டிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் பல்வேறு கூடுதல் அம்சங்களை வழங்க ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய அப்டேட்கள் என்ன?

ஹோண்டா ஷைன் 100 மோட்டார்சைக்கிள்  வெளியீட்டு நிகழ்ச்சியின்போது புதிய அப்டேட் பற்றிய தகவல்களை ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா தலைவர், தலைமை செயல் அதிகாரி அடுஷி ஒகாடா வெளியிட்டார். அதன்படி ஆக்டிவா 6ஜி மாடலில், டிஜிட்டல் டிஸ்பிளே, ப்ளூடூத் மற்றும் H ஸ்மார்ட் கீ லெஸ் வசதி ஆகியவை அடங்கும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய மாடலில்  ஸ்பீடோமீட்டர், அனலாக் மீட்டர் மற்றும் இண்டிகேட்டர் ஆகியவற்றை பிரதிபலிக்கும் அனலாக் டிஸ்பிளே இருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய அப்டேட் மூலம், நேரடி போட்டியாளரான TVS ZX SmartXonnect ஸ்கூட்டருக்கு இணையாக ஆக்டிவா 6ஜி மேம்படுத்தப்பட உள்ளது.

விலை விவரம்:

புதிய ஆக்டிவா 6ஜி வேரியண்டின் விலை ரூ.85 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த வேரியண்ட் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, Activa 6G ஆனது ஸ்டாண்டர்ட், DLX மற்றும் H-Smart வகைகளில் வழங்கப்படுகிறது. அவற்றின் விலைகள் முறையே ரூ.74,536, ரூ.77,036 மற்றும் ரூ.80,537 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மெக்கானிக்கல் மாற்றங்கள்:

வெளிப்புற அமைப்புகளை தவிர வேறு எந்தவித மெக்கானிக்கல் மாற்றங்களும் புதிய வேரியண்டில் மேற்கொள்ளப்படவில்லை.  6G வேரியண்ட் தொடர்ந்து 109.51 cc, 4-ஸ்ட்ரோக் SI இன்ஜின் மூலம் இயக்கப்படும். இது அதிகபட்சமாக 7.8 பிஎஸ் பவரையும், 8.90 என்எம் பீக் டார்க் திறனையும் வழங்கும். இது CVT தானியங்கி பரிமாற்றத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆக்டிவாவில் டெலஸ்கோபிக் முன் ஃபோர்க்குகள் மற்றும்  இரு முனைகளிலும் டிரம் பிரேக் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

தெறிக்க விடும் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் வாங்கக்கூடிய டாப் 5 ஸ்கூட்டர்கள்!
தெறிக்க விடும் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் வாங்கக்கூடிய டாப் 5 ஸ்கூட்டர்கள்!
முழு டேங்க் பெட்ரோலில் 1400 கி,மீ., போகும் Renault Duster Hybrid காரின் விலை எவ்வளவு தெரியுமா?
முழு டேங்க் பெட்ரோலில் 1400 கி,மீ., போகும் Renault Duster Hybrid காரின் விலை எவ்வளவு தெரியுமா?
Hyundai Neira: 4 பவர்ட்ரெயின்களில் கெத்தா வரும் ஹுண்டாயின் 7 சீட்டர் - லாஞ்ச் எப்போது? வசதி, விலை எப்படி?
4 பவர்ட்ரெயின்களில் கெத்தா வரும் ஹுண்டாயின் 7 சீட்டர் - லாஞ்ச் எப்போது? வசதி, விலை எப்படி?
பந்தயத்துக்கு நாங்களும் வரலாமா? இந்தியாவில் ஹேட்ச்பேக், SUV, MPV கார்களை இறக்கப்போகும் Citroen!
பந்தயத்துக்கு நாங்களும் வரலாமா? இந்தியாவில் ஹேட்ச்பேக், SUV, MPV கார்களை இறக்கப்போகும் Citroen!

வீடியோ

MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
Chennai Cooum: துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
Trichy TVK Conference : ‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
New Secretariat: சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Hyundai Neira: 4 பவர்ட்ரெயின்களில் கெத்தா வரும் ஹுண்டாயின் 7 சீட்டர் - லாஞ்ச் எப்போது? வசதி, விலை எப்படி?
4 பவர்ட்ரெயின்களில் கெத்தா வரும் ஹுண்டாயின் 7 சீட்டர் - லாஞ்ச் எப்போது? வசதி, விலை எப்படி?
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
Embed widget