Mahindra BE 05: ஏ.ஆர். ரஹ்மான் டச் - வருகிறது மஹிந்த்ராவின் புதிய BE 05 கார் மாடல் - ரேஞ்ச் வேற மாதிரி..!
Mahindra BE 05: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்த்ரா நிறுவனத்தின், BE 05 கார் மாடல் விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Mahindra BE 05: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்த்ரா நிறுவனத்தின், BE 05 கார் மாடல் விலை குறைந்தது ரூ.20 லட்சம் என நிர்ணயிக்கப்பட உள்ளது.
மஹிந்த்ரா BE 05 கார்:
மஹிந்திரா கார் உற்பத்தி நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், எஸ்யுவி பிரிவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த சூழலில் எதிர்கால சந்தை வளர்ச்சியை கருத்தில் கொண்டு, மின்சார கார் உற்பத்தியிலும் தடம் பதிக்க மஹிந்த்ரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், மஹிந்த்ரா தனது புதிய மின்சார கார் மாடலை சந்தைப்படுத்த தயாராகி வருகிறது. அதன்படி, மஹிந்திராவின் சப்ராண்டான BE அதன் முதல் மின்சார வாகனமாக, BE 05 கார் மாடலை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இது ஒரு ஸ்போர்ட்டி கூபே ஸ்டைல் SUV ஆகும்.
மஹிந்த்ரா BE 05 வெளிப்புற வடிவமைப்பு:
புதிய காரானது ஸ்டைலிங் போன்ற அம்சங்களில் அதன் கான்செப்ட் விவரங்களை தக்கவைத்துக் கொள்ளும்.அதாவது இந்த கார் மாடலின் வடிவமைப்பு தற்போது சந்தையில் உள்ள வேறு எந்த காரையும் போன்று இருக்காது. எனவே, விகிதாச்சாரங்கள் மற்றும் பெரிய ஏரோ திறமையான சக்கரங்கள் மற்றும் எட்ஜி ஸ்டைலிங் போன்ற கூர்மையான கான்செப்டை எதிர்பார்க்கலாம். BE 05 அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் கூடுதல் விவரங்கள் வெளியாகலாம் என கூறப்படுகிறது. BE 05 ஆனது 4 மீ பிளஸ் எஸ்யூவியாக இருக்கும். சாய்வான கூரையுடன் கூடிய ஃப்ளஷ் கதவு கைப்பிடிகள் மற்றும் பல விவரங்கள் இருக்கும். பிரதாப் போஸின் வடிவமைப்பில் இருந்ததை போன்ற பெரும்பாலான கான்செப்ட்களை இந்த கார் தக்க வைத்துக் கொள்ளும் என நம்பப்படுகிறது.
ஏ.ஆர். ரஹ்மான் டச்:
ஏற்கனவே கூறியதன்படி, இவை புதிய ரேஞ்சிலான எலக்ட்ரிக் EVக ஆகும். இதற்கான ஒலியை பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உருவாக்கியுள்ளார். அதன்படி, வாகனத்தை ஓட்டும்போது வெளிப்படும் ஒலி மற்றும் எக்ஸ்பீரியன்ஸ் மோட்கள் ஆகியவற்றிற்கு ரஹ்மான் ஒலிகளை வடிவமைத்துள்ளார். இதில் டால்பி அட்மோஸ் ஆடியோவும் வழங்கப்படும்.
உட்புற வடிவமைப்பு விவரங்கள்:
காரின் உட்புற வடிவமைப்பு எதிர்காலத்திற்கு ஏற்றதாக இருக்கும் மற்றும் குறைந்தபட்ச பிசிகல் பொத்தான்கள் கொண்ட இரண்டு திரைகளைப் பெறும். வித்தியாசமான BE ஸ்டீயரிங் வீல் இருக்கும் மற்றும் ஐந்து பயணிகளுக்கு போதுமான இடவசதி வழங்கப்படும். BE 05 ஆனது INGLO மின்சார பவர் ட்ரெயின்களையும் கொண்டிருக்கும்.
பேட்டரி, விலை விவரங்கள்:
ஏற்கனவே சந்தையில் இருக்கும் Curvv மற்றும் வரவிருக்கும் eVX & Creta EV ஆகியவற்றுற்கு போட்டியாக திகழக்கூடிய வகையில், 79kwh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், BE 05 கார் மாடலானது 500 கி.மீ.,தூரம் இடைநிற்றலின்றி பயணிக்கும் என கூறப்படுகிறது. இது ரீஜென் பிரேக்கிங்கிற்கான ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட துடுப்புகள் மற்றும் ஒற்றை ர்யர் வீல் மோட்டாரை கொண்டிருக்கும். ஜனவரி மாதத்திற்குள் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் சுமார் 20-25 லட்சம் விலை வரம்பில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. BE 05 அதன் சிறப்பம்சங்களில் ஒன்றாக அதன் குறிப்பிடத்தக்க தோற்றத்தைக் கொண்டிருக்கும் என்பது மிக தெளிவாக உள்ளது.