HERO XOOM: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் XOOM ஸ்கூட்டர்.. வெறும் ரூ.8000 இருந்தால் போதும்..
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் XOOM ஸ்கூட்டருக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் XOOM ஸ்கூட்டர் கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. LX, VX மற்றும் ZX என மூன்று விதமான வேரியண்ட்களில் இந்த மாடல் ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. XOOM ஸ்கூட்டரின் அடிப்படை விலையாக LX வேரியண்டின் விலை ரூ. 68 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக அறிமுகத்தின் போதே தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், XOOM ஸ்கூட்டருக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. விரைவில் இதற்கான விநியோகமும் நாடு முழுவதும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை விவரங்கள்:
வெறும் எட்டாயிரம் ரூபாயை செலுத்தி XOOM ஸ்கூட்டரை முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. LX வேரிய்ண்ட் விலை ரூ. 68 ஆயிரத்து 999 ஆகவும், VX வேரியண்ட் விலை ரூ. 71 ஆயிரத்து 799 ஆகவும், ZX வேரியண்ட் ரூ. 76 ஆயிரத்து 699 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அதன் ஆன் ரோட் விலை மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Own every road with the new Hero XOOM. Loaded with industry and segment 1st features, it will make your game bigger. #GoBIG#GoXOOM pic.twitter.com/s27mgeclDE
— Hero MotoCorp (@HeroMotoCorp) January 30, 2023
இன்ஜின் விவரங்கள்:
புதிய ஹீரோ Xoom 110 மாடலில் 110.9சிசி இன்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 8.15 பிஎஸ் பவர், 8.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் ஹீரோ i3S தொழில்நுட்பம், ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் உள்ளது. இந்த வாகனத்தின் ஸ்டைலிங் ஆப்ஷன்கள் சில, ஹீரோ நிறுவனத்தின் முதல் மின்சார ஸ்கூட்டரான விடா-வி1 மாடலில் இருந்து பெறப்பட்டுள்ளது. ஹீரோ Xoom 110 மாடல் ஹோண்டா ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஜூப்பிட்டர் SmartXonnect ஆகிய வேரியண்டிற்கு இந்திய சந்தையில் நேரடி போட்டியாக அமைகிறது.
சிறப்பம்சங்கள்:
முற்றிலும் புது டிசைன் கொண்டிருக்கும் ஹீரோ Xoom 110 மாடலில் முன்புறம் எல்.ஈ.டி புரோஜெக்டர் முகப்பு விளக்கு, H வடிவம் கொண்ட எல்.ஈ.டி டிஆர்எல், H வடிவ எல்.ஈ.டி டெயில் லைட் உள்ளிட்டவை இடம்பெற்று உள்ளன. இவைதவிர புது ஹீரோ Xoom 110 ஸ்கூட்டர் ஐந்து விதமான வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், ஒற்றை ரியர் ஷாக், 12 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் உள்ள அலாய் வீல் டிசைன் விடா V1 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இதன் LX வேரியண்ட் டிரம் பிரேக்குகளையும், VX மற்றும் ZX வேரியண்ட்களில் முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் பைபிர் கேலிப்பர் வழங்கப்பட்டு உள்ளது.