Hero Karizma XMR 210: புத்தம் புதுப்பொலிவுடன் களமிறங்கிய ஹீரோ கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் 210.. விவரங்கள் உள்ளே..!
2023 Karizma XMR 210: ஹீரோ நிறுவனத்தின் புதிய கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 மோட்டார் சைக்கிள் இந்தியா சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2023 Karizma XMR 210: ஹீரோ நிறுவனத்தின் புதிய கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 மோட்டார் சைக்கிள் இந்தியா சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப்:
இந்தியாவில் எண்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் மோட்டார் சைக்கிள் செக்மெண்டில் உள்ள கடும் போட்டி காரணமாக, 2003ம் ஆண்டு முதல்முறையாக கரிஸ்மா அறிமுகபடுத்தப்பட்டபோது மிகச்சிறந்த செயல்பாட்டுடன் அதனை ஹீரோ நிறுவனம் வடிவமைத்து இருந்தது. இந்நிலையில் தான், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மீண்டும் தனது புதிய கரிஸ்மா மோட்டர்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த பைக் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு டீசர்களை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்ஜின் விவரங்கள்:
கரிஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 புதிய 210சிசி, சிங்கிள் சிலிண்டர் நான்கு வால்வுகள் கொண்ட இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் லிக்விட்-கூல்டு ஆகும். இது 25.15 Bhp மற்றும் 20.4 Nm daark ஆற்றலை வெளிப்படுத்தும் திறனை கொண்டுள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. இது சிக்ஸ் ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் அம்சம்:
எல்சிடி அமைப்பில் முழு டிஜிட்டல் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீனிங் வழங்கப்பட்டுள்ளது. இதில், எரிபொருள் நிலை, இன்ஜின் வெப்பநிலை, சராசரி வேகம், எரிபொருள் திறன் வாசிப்பு, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, நேவிகேஷன், வேகமானி மற்றும் டேகோமீட்டர் அளவீடுகள் உட்பட பல தகவல்களை வழங்கும் என கூறப்படுகிறது.
சிறப்பம்சங்கள்:
புதிய கரிஸ்மா XMR 210 மாடலில் இளைஞர்களை கவரும் வகையிலான டிசைன், தனித்துவம் மிக்க கூர்மையான முகப்பு விளக்குகள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட்-ஸ்கிரீன் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் பாடிவொர்க்-இல் மெல்லிய சைடு ஃபேரிங்குகள் உள்ளன.
இவை இன்ஜின் மற்றும் சேசிஸ்-ஐ மறைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. கரிஸ்மா XMR 210 மாடலில் முற்றிலும் புதிய சேசிஸ், டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், ஆறு வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பின்புற மோனோஷாக், பிரேக்கிங்கிற்கு இருபுறமும் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 17-இன்ச் அலாய் வீல்கள் உள்ளன.
விலை விவரங்கள்:
பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் அறிமுகம் செய்த ஹீரோ கரிஸ்மா XMR 210 மாடல் விலை, இந்திய சந்தையில் ரூ. 1.72 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் ஐகானிக் நிறமான மஞ்சள் மட்டுமின்றி, டர்போ ரெட் மற்றும் மேட் பாண்டம் பிளாக் ஆகிய நிறங்களிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது இந்திய ஸ்போர்ட்ஸ் பைக் சந்தையில் எண்ட்ரி லெண்ட செக்மண்டில் உள்ள யமாஹா R15 V4, சுசுகி ஜிக்சர் SF, KTM RC200 மற்றும் பஜாஜ் பல்சர் RS200 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.