மேலும் அறிய

Kia Sonet: ரூ.10 லட்சத்துக்கும் கம்மி..! டீசலில் 6AT, டர்போ பெட்ரோலில் 7DCT ட்ரான்ஸ்மிஷன் - சோனெட்டின் மெகா அப்க்ரேட்

Kia Sonet 2026 Transmission Upgrade: கியா சோனெட்டின் டீசல் ஆட்டோமேடிக்கின் விலை தற்போது வெறும், 9 லட்சத்து 77 ஆயிரம் ரூபாயிலிருந்தே தொடங்குகிறது.

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • கியா சோனெட்டில் நான்கு புதிய வேரியண்ட்கள், மேக்மா சிவப்பு வண்ணம் அறிமுகம்.
  • புதிய டர்போ பெட்ரோல், டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட்கள் விலை குறைக்கப்பட்டுள்ளது.
  • டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட்கள் மலிவு விலையில், ஆறு ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
  • மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன், 7 ஸ்பீட் டூயல் க்ளட்ச், 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் இணைக்கப்பட்டுள்ளது.

 Kia Sonet 2026 Transmission Upgrade: கியா சோனெட் டீசல் எடிஷனில் 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் புதியதாக இணைக்கப்பட்டுள்ளது.

கியா சோனெட் - புதிய வேரியண்ட்கள் அறிமுகம்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா நிறுவனத்தின் வெற்றிகரமான மாடல்களில் ஒன்றான சோனெட்டில், மேலும் நான்கு புதிய வேரியண்ட்கள் இணைக்கப்பட்டுள்ளன. HTE (O), HTK (O), HTK+ மற்றும் HTK+ (O) எனும் வேரியண்ட்களின் விலையானது, ரூ.9.77 லட்சத்தில் தொடங்கி ரூ.11.56 லட்சம் வரை நீள்கிறது. புதிய டர்போ  பெட்ரோல் ஆட்டோமேடிக் வேரியண்ட்களான HTK (O) மற்றும் HTK+ (O) வேரியண்ட்களின் விலை முறையே ரூ.9.89 லட்சம் மற்றும் ரூ.10.83 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோக தனது சோனெட் லைன் - அப்பிற்கு புதியதாக மேக்மா ரெட் எனும் வெளிப்புற வண்ண ஆப்ஷனையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. புதிய விரிவாக்கத்தின் மூலம் அதன் பிரிவில் இரண்டு டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பங்களையும் இவ்வளவு குறைந்த விலையில் வழங்கும் சில SUVகளில் ஒன்றாக சோனெட் உருவெடுத்துள்ளது.

சோனெட் ஆட்டோமேடிக் வேரியண்ட்களின் விலை விவரங்கள்:

வேரியண்ட்கள் பெட்ரோல் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் டீசல் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன்
HTE (O) - ரூ.9.77 லட்சம்
HTK (O) ரூ.9.89 லட்சம் ரூ.10.72 லட்சம்
HTK + - ரூ.11.08 லட்சம்
HTK + (O) ரூ.10.83 லட்சம் ரூ.11.56 லட்சம்
HTX ரூ.11.59 லட்சம் ரூ.12.02 லட்சம்
GTX ரூ.13.59 லட்சம் ரூ.14.09 லட்சம்
X-Line ரூ.13.65 லட்சம் -

புதிய வேரியண்ட்களின் அறிமுகத்தின் மூலம், சோனட் டீசல் ஆட்டோமேடிக் வேரியண்டை முன்பை காட்டிலும், ரூ.2.25 லட்சம் மலிவு விலையில் வாடிக்கையாளர்கள் தற்போது அணுகலாம். முன்னதாக சோனெட்டின் டீசல் ஆட்டோமேடிக் ஆப்ஷனானது டாப் வேரியண்ட்களான HTX மற்றும் GTX ஆகியவற்றில் மட்டுமே இருந்தது. அவற்றின் விலை முறையே ரூ.12.02 லட்சம் மற்றும் ரூ.14.09 லட்சம் ஆகும். சோனெட்டில் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்ய விரும்புவோருக்கு தற்போது, டீசலில் ஆறு ஆப்ஷன்களும், பெட்ரோலில் 5 ஆப்ஷன்களும் உள்ளன. 



Kia Sonet: ரூ.10 லட்சத்துக்கும் கம்மி..! டீசலில் 6AT, டர்போ பெட்ரோலில் 7DCT ட்ரான்ஸ்மிஷன் - சோனெட்டின் மெகா அப்க்ரேட்

சோனெட்டின் இன்ஜின், ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள்

கியா சோனெட்டானது தற்போது மூன்று இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறத். அதில் 1.2 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல்  மற்றும் 1.5 லிட்டர் ஆகியவை அடங்கும். டர்போ பெட்ரோல் இன்ஜினில் புதியதாக 7 ஸ்பீட் டூயல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷனும், டீசலில் 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷனும் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் காரின் ரேஞ்ச் முழுமைக்கும் ஆட்டோமேடிக் ஆப்ஷனை கியா விரிவுபடுத்தியுள்ளது.


Kia Sonet: ரூ.10 லட்சத்துக்கும் கம்மி..! டீசலில் 6AT, டர்போ பெட்ரோலில் 7DCT ட்ரான்ஸ்மிஷன் - சோனெட்டின் மெகா அப்க்ரேட்

புதிய ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்

இன்ஜின் விவரங்கள்

வேரியண்ட்

ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்

டீசல் (1.5லி)

HTE(O)

6AT 

டீசல் (1.5லி)

HTK(O)

6AT 

டீசல் (1.5லி)

HTK+

6AT 

டீசல் (1.5லி)

HTK+(O)

6AT 

டர்போ பெட்ரோல் (1.0லி)

HTK(O)

7DCT

டர்போ பெட்ரோல் (1.0லி)

HTK+(O)

7DCT

 

Frequently Asked Questions

கியா சோனெட்டில் புதிய வேரியண்ட்கள் எவை?

சோனெட்டில் HTE (O), HTK (O), HTK+, மற்றும் HTK+ (O) என நான்கு புதிய வேரியண்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

புதிய டர்போ பெட்ரோல் ஆட்டோமேடிக் வேரியண்ட்களின் விலை என்ன?

புதிய டர்போ பெட்ரோல் ஆட்டோமேடிக் வேரியண்ட்களான HTK (O) மற்றும் HTK+ (O) முறையே ரூ.9.89 லட்சம் மற்றும் ரூ.10.83 லட்சம் விலையில் கிடைக்கின்றன.

சோனெட் டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட் விலை எவ்வளவு குறைந்துள்ளது?

புதிய வேரியண்ட்கள் அறிமுகம் மூலம், டீசல் ஆட்டோமேடிக் வேரியண்டை முன்பை விட ரூ.2.25 லட்சம் மலிவு விலையில் பெறலாம்.

சோனெட் எத்தனை இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது?

கியா சோனெட் தற்போது 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய மூன்று இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Volkswagen SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
Honda E Scooters: ஒரே சார்ஜில் இத்தனை கி.மீட்டர் மைலேஜா? பட்ஜெட் விலையில் மாஸான ஹோண்டா இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
Honda E Scooters: ஒரே சார்ஜில் இத்தனை கி.மீட்டர் மைலேஜா? பட்ஜெட் விலையில் மாஸான ஹோண்டா இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
Embed widget