மேலும் அறிய

செம லுக்.. பக்காவாக இருக்கும் MG Astor கார்..! எம்ஜி -ஹூண்டாய்-கியா-ஸ்கோடா.. எது பெஸ்ட்?

MG நிறுவனத்தின் Astor காரின் முன்பதிவு தொடங்கப்படவுள்ளது. MG Astor காருடன் Hyundai Creta, Kia Seltos, Skoda Kushaq முதலான பிற SUV கார்களை ஒப்பிட்டு பார்த்தோம். அந்த ஒப்பீடுகள் இதோ!

இந்திய சந்தையில் தங்கள் கால்தடத்தைப் பதித்துள்ளது MG நிறுவனம். இந்நிறுவனத்தின் நான்காவது வெளியீடான Astor காரின் முன்பதிவு இந்த மாதத்தின் இறுதியில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Astor கார் மாடல் பல்வேறு புதிய அம்சங்களைக் கொண்டுள்ளதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் personal AI assistant, autonomous Level 2 advanced driver assistant system (ADAS) முதலான புதிய தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. MG Astor காருடன் Hyundai Creta, Kia Seltos, Skoda Kushaq முதலான பிற SUV கார்களை ஒப்பிட்டு பார்த்தோம். அந்த ஒப்பீடுகள் இதோ!

வடிவமைப்பு:

பொதுவாகவே SUV காரின் வடிவமைப்பு காண்போரைக் கவரச் செய்யும் விதம் இருப்பவை. இதில் எந்த SUV இன்னொன்றை விட அழகாக இருக்கிறது எனத் தீர்மானிப்பது கடினமான பணி. பயன்படுத்துபவரைப் பொருத்து, எந்த கார் அழகாக இருக்கிறது என முடிவு செய்யலாம். ஒவ்வொரு பயனாளருக்கும் விருப்பங்கள் மாறுபடும். 

செம லுக்.. பக்காவாக இருக்கும் MG Astor கார்..! எம்ஜி -ஹூண்டாய்-கியா-ஸ்கோடா.. எது பெஸ்ட்?
Hyundai Creta

ZS EV காரின் டிசைனில் இருந்து உருவாகியுள்ளது MG Astor. இதன் முன்புறத்தில் இருக்கும் ஹெட் லாம்ப், ஃபாக் லாம்ப், பம்பர் முதலானவை பிற கார்களோடு ஒப்பிடுகையில் தனித்து தெரிகிறது. Kushaq, Creta, Seltos ஆகியவற்றோரு ஒப்பிடுகையில் மிகவும் சிம்பிளான லுக்கைக் கொண்டிருக்கிறது Astor. 

உருவ அளவு:

Kushaq, Creta, Seltos ஆகியவற்றை விட MG Astor அளவில் நீளமாகவும், பெரிதாகவும், உயரமானதாகவும் இருக்கிறது. இவற்றுள் Kushaq பிற மாடல்களை விட மிகச் சிறியதாக இருக்கிறது. Creta, Seltos ஆகியவற்றின் wheel base 2610 mm ஆக இருக்கிறது. Astor இவற்றைவிட குறைவாக 2580 mm wheel base கொண்டிருக்கிறது. 

செம லுக்.. பக்காவாக இருக்கும் MG Astor கார்..! எம்ஜி -ஹூண்டாய்-கியா-ஸ்கோடா.. எது பெஸ்ட்?
KIA Seltos

Astor அளவுகளில் பெரிதாக இருப்பதாகத் தெரிந்தாலும், அது வெளியான பிறகே, அதன் உள்புறத்தில் உள்ள அளவைத் தெரிந்துகொள்ள முடியும். Creta, Seltos ஆகிய கார்கள் அதன் இண்டீடியர்களில் உள்ள விசாலமான இடத்திற்காகப் பிரபலமானவை. Astor பெரிதாக இருப்பதால், அதுவும் இந்தப் பட்டியலில் இணையலாம். 

என்ஜின்:

Creta, Seltos ஆகிய இரு கார்களிலும் டீசல் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதோடு ஒப்பிடுகையில் Astor வெறும் பெட்ரோல் என்ஜினை மட்டுமே தருகிறது. இதில் 1.5-litre NA பெட்ரோல் யூனிட்டும், 1.4-litre NA டர்போ பெட்ரோல் மோட்டாரும் ஆப்ஷன்களாக வழங்கப்படுகின்றன. இதைப் போன்றே பெட்ரோல் என்ஜின்கள் Creta, Seltos ஆகியவற்றிலும் இருக்கின்றன. அதனால் இந்த மாடல்களின் ஆற்றல், டார்க் ஆகியவற்றில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. 

செம லுக்.. பக்காவாக இருக்கும் MG Astor கார்..! எம்ஜி -ஹூண்டாய்-கியா-ஸ்கோடா.. எது பெஸ்ட்?
Skoda Kushaq

Astor மாடலின் 1.5 லிட்டர் மோட்டாரில் 110 ps ஆற்றல் அதிகபட்சமாகவும், 144 Nm உச்சபட்ச டார்க் அம்சமும் உண்டு. டர்போ பெட்ரோல் யூனிட்டில் 140 ps ஆற்றலும், 220 Nm டார்க் அம்சமும் இடம்பெற்றுள்ளன. இதில் 6 ஸ்பீட் வசதியும் உண்டு. 

பிற அம்சங்கள்:

தென்கொரியாவைச் சேர்ந்த Hyundai, Kia ஆகிய கார் நிறுவனங்கள் அதிக அம்சங்களைத் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றன. மார்க்கெட்டில் கிடைக்கும் அம்சங்களிலேயே சிறந்தவற்றை இவை தருவதால், Creta, Seltos ஆகிய கார்களுக்கு இணையான அம்சங்கள் வேறு எதிலும் இல்லை.

செம லுக்.. பக்காவாக இருக்கும் MG Astor கார்..! எம்ஜி -ஹூண்டாய்-கியா-ஸ்கோடா.. எது பெஸ்ட்?
MG Astor

எனினும், Astor மாடலில் உள்ள personal AI assistance பயன்படுத்துவரின் குரலைக் கண்டுபிடித்து, உத்தரவுகளை நிறைவேற்றுவதும், ஜோக் சொல்வது, செய்திகளை வாசித்துக் காட்டுவது முதலானவற்றைச் செய்யும். மேலும் இந்த மாடலில் 14 first-in-segment Autonomous Level 2 அம்சங்கள் இருக்கின்றன. இவற்றின் மூலம், சாலையோரம் பயணிக்க உதவி, எமர்ஜென்சியின் போது தானாகவே பிரேக் இயக்கும் வசதி முதலான அம்சங்களைப் பயன்படுத்தலாம். 

Creta, Seltos ஆகியவற்றிற்கு பலத்த போட்டியாக Astor இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு மாடல்களும் ஒவ்வொரு மாதமும் 20 ஆயிரம் கார்கள் விற்பனையாகி வருகின்றன. சமீபத்தில் வெளியான Kushaq ஒவ்வொரு மாதமும் 2 ஆயிரம் விற்பனையாகி வருகிறது. Astor இவற்றிற்கு நிகரான விலையில் வெளிவந்தால் அடுத்த மாதங்களில் இவற்றிற்கு இடையிலான பலத்த போட்டியைக் காண முடியும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Embed widget