Car Loans: கார் லோன் வாங்கனுமா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? எவ்வளவு EMI?
வங்கியில் கடன் வாங்கி கார் வாங்க விரும்பினால் எந்த வங்கியில் கார் கடனுக்கு எவ்வளவு வட்டி? எவ்வளவு தவணை? என்பதை கீழே அறிந்து கொள்ளலாம்.

வங்கிகள் தனிநபர் கடன், தொழில்கடன் என பலவற்றிற்கு கடன் வழங்குகிறது. அதேபோல, வாகனம் வாங்குவதற்கும் கடன் வழங்குகிறது. கார் வாங்குவதற்கும் கடன் வங்கிகளால் வழங்கப்பட்டு வருகிறது.
கார்கள் வாங்குவதற்கு எந்த நிறுவனம் எவ்வளவு வட்டியுடன் கடன் வழங்குகிறது? மாதந்தோறும் எவ்வளவு வட்டி வசூலிக்கப்படுகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.
1. Union Bank of India:
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 5 லட்சம் ரூபாய் கடனுக்கு 5 வருடங்கள் காலத்திற்கு 7.80 சதவீதம் முதல் 9.70 சதவீதம் வரை வட்டி வசூலிக்கிறது. இதற்கு மாதந்தோறும் தவணைத் தொகையாக ரூபாய் 10,090 முதல் ரூபாய் 10,550 வரை வசூலிக்கப்படுகிறது. இதற்கு கட்டணமாக ரூபாய் 1000 வசூலிக்கின்றனர்.
2. punjab national bank:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 5 லட்சம் ரூபாய் கடனுக்கு 5 ஆண்டுகள் கால வரம்பில் 7.80 - 9.70 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. மாதந்தோறும் தவணையாக ரூபாய் 10 ஆயிரத்து 90 முதல் ரூபாய் 10 ஆயிரத்து 550 வரை செலுத்த வேண்டி வரும். இதற்கு கட்டணமாக ரூபாய் 1000 முதல் ரூபாய் 1500 வரை வசூலிக்கப்படுகிறது.
3. Bank of Baroda:
பேங்க் ஆஃப் பரோடாவில் 5 லட்சம் ரூபாய் கடனுக்கு 5 ஆண்டுகள் கால வரம்பில் 8.15 சதவீதம் முதல் 11.60 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. மாதந்தோறும் தவணையாக ரூபாய் 10 ஆயிரத்து 174 முதல் ரூபாய் 11 ஆயிரத்து 21 வரை செலுத்த வேண்டும். ப்ராஸசிங் கட்டணமாக ரூபாய் 2 ஆயிரத்திற்கு மேல் செலவாகும்.
4. Canara Bank:
கனரா வங்கியில் 5 ஆண்டுகள் கால வரம்பில் ரூபாய் 5 லட்சம் கடனுக்கு 7.70 சதவீதம் முதல் 11.70 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. மாதந்தோறும் தவணைத் தொகை ரூபாய் 10 ஆயிரத்து 67 முதல் ரூபாய் 11 ஆயிரத்து 047 வரை செலுத்த வேண்டும். இதற்கு இந்தாண்டு கடைசி நாள் டிசம்பர் 12ம் தேதி வரை ப்ராஸசிங் கட்டணம் வசூலிக்கப்படாது.
5. Bank Of India:
பேங்க் ஆஃப் இந்தியாவில் 7.85 சதவீதம் முதல் 12.15 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. ரூபாய் 5 லட்சத்திற்கு 5 ஆண்டுகள் கால வரம்பில் ரூபாய் 10 ஆயிரத்து 102 முதல் 11 ஆயிரத்து 160 வரை மாதந்தோறும் தவணையாக செலுத்த வேண்டும். இதற்கு ரூபாய் 2 ஆயிரத்து 500 முதல் ரூபாய் 10 ஆயிரம் வரை ப்ராஸசிங் கட்டணம் ஆகிறது.
6. UCO Bank:
இந்த UCO வங்கியில் 7.60 சதவீதம் முதல் 10.25 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. 5 ஆண்டுகள் கால வரம்பில் ரூபாய் 5 லட்சம் கடனுக்கு ரூபாய் 10 ஆயிரத்து 43 முதல் ரூபாய் 10 ஆயிரத்து 685 வரை மாதந்தோறும் தவணை செலுத்த வேண்டும். இதற்கு ப்ராஸசிங் கட்டணம் வசூலிக்கப்படாது.
7. State Bank of India:
எஸ்பிஐ வங்கியில் 8.75 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. ரூபாய் 5 லட்சம் கடனுக்கு 5 ஆண்டுகள் கால வரம்பில் ரூபாய் 10 ஆயிரத்து 319 மாதந்தோறும் தவணையாக செலுத்த வேண்டும். இதற்கு ப்ராஸசிங் கட்டணமாக ரூபாய் 750 முதல் ரூபாய் 1000 வரை வசூலிக்கப்படுகிறது.
8. Bank Of Maharashtra:
பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ராவில் 7.45 சதவீதம் முதல் 11.75 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. 5 ஆண்டுகள் கால வரம்பில் ரூபாய் 5 லட்சத்திற்கு 10 ஆயிரத்து 007 முதல் 11 ஆயிரத்து 059 மாதந்தோறும் தவணை வசூலிக்கப்படுகிறது. ரூபாய் 1000 முதல் ரூபாய் 15 ஆயிரம் வரை ப்ராஸசிங் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
9. ICICI:
ஐசிசிஐ வங்கியில் கார் வாங்க 8.50 சதவீதம் முதல் வட்டி வசூலிக்கப்படுகிறது. ரூபாய் 5 லட்சம் கடனுக்கு 5 ஆண்டுகள் கால வரம்பில் 10 ஆயிரத்து 258 முதல் மாதந்தோறும் தவணை செலுத்த வேண்டும். இதற்கு ப்ராஸசிங் கட்டணமாக 2 சதவீதம் முதல் வசூலிக்கப்படுகிறது.
10. Indian Overseas Bank:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 7.80 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. ரூபாய் 5 லட்சம் கடனுக்கு 5 ஆண்டுகள் கால வரம்பில் 10 ஆயிரத்து 90 ரூபாய் முதல் 11 ஆயிரத்து 122 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு ப்ராஸசிங் கட்டணமாக ரூபாய் 500 முதல் ரூபாய் 5 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.
11. HDFC :
எச்டிஎஃப்சி வங்கிக்கு 9.32 சதவீதம் முதல் வட்டி வசூலிக்கப்படுகிறது. 5 ஆண்டுகள் கால வரம்பில் 5 லட்சம் ரூபாய் கடனுக்கு மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரத்து 428 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ரூபாய் 3 ஆயிரத்து 500 முதல் ரூபாய் 8 ஆயிரம் வரை ப்ராஸசிங் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
12. Karnataka Bank:
கர்நாடக வங்கியில் 8 சதவீதம் முதல் 11.50 சதவீதம் வரை வட்டியாக வசூலிக்கப்படுகிறது. 5 ஆண்டுகள் கால வரம்பில் ரூபாய் 5 லட்சம் கடனுக்கு 10 ஆயிரத்து 318 ரூபாய் முதல் 10 ஆயிரத்து 996 ரூபாய் வரை மாதந்தோறும் தவணை செலுத்த வேண்டும். ரூபாய் 2 ஆயிரத்து 500 முதல் ரூபாய் 11 ஆயிரம் வரை ப்ராஸசிங் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
13. Fedaral Bank:
ஃபெடரல் வங்கியில் 10 சதவீதம் முதல் வட்டி வசூலிக்கப்படுகிறது. 5 லட்சம் ரூபாய் கடனுக்கு 5 ஆண்டுகள் கால வரம்பில் 10 ஆயிரத்து 624 ரூபாய் மாதந்தோறும் தவணையாக செலுத்த வேண்டும். இதற்கு ப்ராஸசிங் கட்டணமாக ரூபாய் 2 ஆயிரம் முதல் ரூபாய் 4 ஆயிரத்து 500 வரை வசூலிக்கப்படுகிறது.
14. Punjab & Sind Bank:
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் 7.50 சதவீதம் முதல் 14 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. 5 ஆண்டுகள் கால வரம்பில் ரூபாய் 5 லட்சம் கடனுக்கு மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரத்து 019 முதல் ரூபாய் 11 ஆயிரத்து 634 வரை மாதந்தோறும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ரூபாய் 1000 முதல் ரூபாய் 15 ஆயிரம் வரை ப்ராஸசிங் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
15. Indian Bank:
இந்தியன் வங்கியில் 7.50 சதவீதம் முதல் 9.85 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. 5 ஆண்டுகள் கால வரம்பில் 5 லட்சம் ரூபாய் கடனுக்கு ரூபாய் 10 ஆயிரத்து 019 முதல் ரூபாய் 10 ஆயிரத்து 587 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கு ப்ராஸசிங் கட்டணமாக ரூபாய் 1200 வரை வசூலிக்கப்படுகிறது.
16. IDFC First Bank:
IDFC First வங்கியில் 9.99 சதவீதம் முதல் வட்டி வசூலிக்கப்படுகிறது. 5 ஆண்டுகள் கால வரம்பில் 5 லட்சம் ரூபாய் கடனுக்கு 10 ஆயிரத்து 621 முதல் மாதந்தோறும் தவணையாக செலுத்த வேண்டும். இதற்கு ப்ராஸசிங் கட்டணமாக ரூபாய் 1200 வசூலிக்கப்படுகிறது.
17. Central Bank Of India:
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 7.60 சதவீதம் முதல் 9.20 சதவீதம் வரை வட்டியாக வசூலிக்கப்படுகிறது. 5 ஆண்டுகள் கால வரம்பில் 5 லட்சம் ரூபாய் கடனுக்கு மாதந்தோறும் ரூபாய் 10 ஆயிரத்து 043 முதல் ரூபாய் 10 ஆயிரத்து 428 வரை தவணையாக செலுத்த வேண்டும். இதற்கு அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி வரை ப்ராஸசிங் கட்டணம் கிடையாது.





















