Ola S1 Air: முந்துங்கள்..! ஒலா எஸ்1 ஏர்-ன் முன்பதிவு தொடக்கம்..ரூ.999 கொடுத்தால், ரூ.10,000 சேமிக்கலாம்.. அதிரடி அறிவிப்பு
ஓலா நிறுவனத்தின் எஸ்1 ஏர் மின்சார ஸ்கூட்டரின் முன்பதிவு தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓலா நிறுவனத்தின் எஸ்1 ஏர் மின்சார ஸ்கூட்டரின் முன்பதிவு தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு தொடக்கம்:
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய மாடலான, எஸ்1 ஏர்-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஓலா நிறுவனத்தின் மிகவும் மலிவு விலை மின்சார ஸ்கூட்டருக்கான முன்பதிவு, அந்நிறுவனத்தின் செயலி மற்றும் இணையதளத்தில் தற்போது தொடங்கியுள்ளது. பயனாளர்கள் ரூ.999 டோக்கன் தொகையை செலுத்தி தங்களுக்கான வாகனத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ரூ.10,000 சேமிக்கலாம்:
இன்று (ஜுலை27) முதல் ஜூலை 30 வரை S1 Air ஐ முன்பதிவு செய்யும் Ola கம்யூனிட்டி உறுப்பினர்கள் மற்றும் தொடக்கத்தில் வாங்குபவர்களுக்கு, ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 999 ரூபாய் என்ற சிறப்பு அறிமுக விலையில் வாகனம் விற்பனை செய்யப்படும் என ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் பிறகு வாங்கும் பயனாளர்களுக்கு ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 999 ஆக விலை மாற்றியமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடிவமைப்பு:
Ola S1 ஏர் ஆனது ஸ்டேண்டர்ட் Ola S1 போன்ற ஸ்டைலிங்கைப் பகிர்ந்து கொள்ளும். ஆனால் ஸ்டெல்லர் ப்ளூ, நியான், பீங்கான் வெள்ளை, கோரல் கிளாம், லிக்விட் சில்வர் மற்றும் மிட்நைட் ப்ளூ ஆகிய ஆறு வண்ணங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகம், 125 கிமீ வரம்பு மற்றும் மூன்று சவாரி மோட்களைக் கொண்டிருக்கும். 3 kWh திறன் பேட்டரி பேக்கை கொண்ட இந்த வாகனத்தை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்ய ஐந்து மணி நேரம் ஆகும்.
பேட்டரி திறன்:
ஆரம்பத்தில் 2.7kW திறன் கொண்ட மோட்டாருடன் S1 ஏர் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது S1 ஏர் ஆனது 4.5 kW திறன்கொண்ட மோட்டருடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள S1 மற்றும் S1 ப்ரோ மாடலில் பெல்ட் டிரைவ் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், விலையை குறைக்கும் நோக்கில், S1 ஏர் மாடலில் ஹப் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், மற்ற இரண்டு மாடல்களை விட 10 - 13 கிலோ எடை குறைவாக உள்ளது.
சிறப்பம்சங்கள்:
ஓலாவின் மற்ற S1 வகைகளைப் போலல்லாமல் S1 ஏர் ஹப் மோட்டார், டெலஸ்கோபிக் முன் ஃபோர்க்குகள், டூயல் ரியர் ஸ்பிரிங்ஸ், இரு முனைகளிலும் டிரம் பிரேக்குகள் மற்றும் எஃகு சக்கரங்களைக் கொண்டிருக்கும். இது முழு எல்.ஈ.டி விளக்குகள் மற்றும் S1 மற்றும் S1 ப்ரோவை விட குறைந்த தெளிவுத்திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரையும் கொண்டுள்ளது. Ola S1 Air ஆனது இந்திய சந்தையில் TVS iQube மற்றும் Ather 450 ஆகிய பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சந்தையில் போட்டியாக இருக்கும். புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விநியோக தேதியை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை, ஆனால் இது ஆகஸ்ட் தொடக்கத்தில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.