BMW R 125 GS India Launch | பிஎம்டபிள்யூ-வின் அடுத்த ரிலீஸ் ; விரைவில் வெளியாகும் சூப்பர் பைக்
பிரபல பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய BMW R 125 GS பைக்கை அறிமுகம் செய்யவுள்ளது.
ஏற்கனவே உலக சந்தையில் சில நாடுகளில் இந்த BMW R 125 GS பைக் விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய சந்தையில் வெளியாகும் BMW R 125 GS பைக்கள், உலக சந்தையில் விற்பனையாகும் அதே அம்சங்களோடு வெளியாகும் என்று BMW தெரிவித்துள்ளது.
1916-ஆம் ஆண்டு ஜெர்மனியில் தொடங்கப்பட்டது தான் பிஎம்டபிள்யூ நிறுவனம். இந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 90வது ஆண்டு விழாவின்போது தான் இந்திய சந்தையில் கால்பதிக்க முடிவெடுத்தது. அதனை தொடர்ந்து கடந்த 2006-ஆம் ஆண்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு 29 மார்ச் 2007 ஆம் ஆண்டு பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது உற்பத்தி ஆலையை சென்னையில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. சென்னையில் தொடங்கப்பட்ட அந்த ஆலையில் 10க்கும் அதிகமான BMW கார் வகைகள் முதலில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. BMW 3,5,6 மற்றும் 7 சீரிஸ் கார்கள் தொடங்கி X1,3 போன்ற ரக கார்களும் சென்னையில் தயாரிக்கப்பட்டு வருகின்றது. அதேசமயம் BMW நிறுவனம் தனது பைக் தயாரிப்பை இன்னும் இந்தியாவில் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
BMW R 125 GS
The King of Adventure with a thirst for limitless thrills!
— BMWMotorrad_IN (@BMWMotorrad_IN) June 18, 2021
Are you ready?
The new BMW R 1250 GS and GS Adventure are coming soon.#KingOfAdventure #SpiritOfGS #R1250GS #R1250GSA #MakeLifeARide #BMWMotorrad #BMWMotorradIndia pic.twitter.com/y7AyI2WDXU
இந்த பைக் இந்தியாவில் இரண்டு மாடல்களில் அறிமுகப்படுத்தப்படும் - ஆர் 1250 ஜிஎஸ் மற்றும் ஆர் 1250 ஜிஎஸ் அட்வென்ச்சர். மேற்குறிப்பிட்டது போல இந்தியாவில் வெளியாகும் பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஜிஎஸ் சர்வதேச எடிசனுக்கு ஒத்ததாக இருக்கும். Euro 5/BS 6-compliant 1,254cc என்ஜினால் உயிரோட்டம் பெரும் இந்த வாகனம் பிளாட்-ட்வின் என்ஜின் வகையை சேர்ந்தது. 7,750rpm திறன்கொண்ட இந்த வாகனம் BMWவின் ஷிபிட்-கேம் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முழுவதும் எல்.ஈ.டி லைட்டிங் அமைப்பு, யூ.எஸ்.பி சார்ஜிங் சாக்கெட் மற்றும் புளூடூத் கொண்டு இயக்கப்படும் டி.எஃப்.டி தொடுதிரை உள்ளிட்ட வசதிகள் இந்த வாகனத்தில் உள்ளது. பல சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்த அதிவேக ப்ரீமியம் பைக் மணிக்கு அதிகபட்சமாக 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்திய சந்தையில் 20 லட்சத்திற்கு இந்த பைக் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
PUBG Mobile Battleground Download: 'மேல ஏறி வாரோம்'.. சந்தோஷத்தில் குதிக்கும் மாறுவேஷ பப்ஜி..!
கடந்த சில மாதங்களாக பல முன்னனி கார் மற்றும் பைக் நிறுவனங்கள் தங்களுடைய பல முன்னனி எடிஷன் கார் மற்றும் பைக்களை இந்தியாவில் அறிமுகம் செய்துவருவது குறிப்பிடத்தக்கது. செல்போன்கள், கார்கள் மற்றும் பைகளின் விற்பனை இந்த ஊரடங்கு காலத்திலும் உச்சம் தொட்டு வருவது நினைவுகூரத்தக்கது.