மேலும் அறிய

Bentley Bentayga EWB: ரோல்ஸ் ராய்சுக்கு போட்டியாக இந்தியாவில் பிரமாண்டமாக களமிறங்கிய பெண்ட்லி கார்

பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பெண்ட்லி, தனது பெண்ட்யகா EWB மாடல் காரை அதிகாரப்பூர்வமாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

130 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பதன் காரணமாக, பல்வேறு நாடுகளை சேர்ந்த உற்பத்தியாளர்களுக்குமே இந்தியா முக்கிய சந்தையாக உள்ளது. சிறிய பென் டிரைவ் முதற்கொண்டு பிரமாண்ட விமானங்கள் வரை, இந்திய சந்தையில் கிடைக்காத வெளிநாட்டு பொருட்களே இல்லை என்றே கூற வேண்டும். இதில் ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் தான், இங்கிலாந்தை சேர்ந்த பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பெண்ட்லி, தனது புதிய மாடல் காரை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய கார் அறிமுகம்:

பெண்ட்யகா EWB (எக்ஸ்டென்டட் வீல் பேஸ்)  என பெயரிடப்பட்டுள்ள இந்த காரின் விலை இந்திய சந்தையில்,  ரூ. 6 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட வீல்பேஸை கொண்ட இந்த கார் தொடர்பான அறிவிப்பு கடந்தாண்டு மே மாதத்தில் வெளியான நிலையில், அதன் உற்பத்தி அக்டோபர் மாதம் தொடங்கியது.  ரோல்ஸ் ராயல்ஸ் கல்லினன் மாடல் காருக்கு போட்டியாக, இந்திய சந்தையில் இந்த புதிய கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அஸூர் மற்றும் ஃபர்ஸ்ட் எடிஷன் எனும் இரண்டு எஸ்யுவி பதிப்புகளில், இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது.

இன்ஜின் விவரம்:

புதிய பெண்ட்லி பெண்ட்யகா EWB மாடலில் 4.0 லிட்டர் டுவின் டர்போ வி8 இன்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த இன்ஜின் 542 ஹெச்பி பவர், 770 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.6 நொடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக இந்த காரை 290 கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்:

காரில் இடம்பெற்றுள்ள அம்சங்களை பொருத்தவரை புதிய பெண்ட்லி பெண்ட்யகா EWB மாடலில்,  ஏர்லைன் இருக்கைகள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் ஆட்டோ கிளைமேட் சென்சிங் சிஸ்டம் உள்ளது. இதில் உள்ள பிஸ்னஸ் சீட் அம்சம் அதன் தனித்துவம் மிக்க நிலைக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதி கொண்டுள்ளது. ரிலாக்ஸ் மோட் கொண்டு இருக்கையை 40-டிகிரி அளவுக்கு ரிக்லைன் செய்து கொள்ள முடியும். பெண்ட்யகா EWB மாடலில் பவர் க்ளோசிங் கதவுகள், ஹீடெட் செண்டர் ஆர்ம்ரெஸ்ட், ரியர் டோர், ஆல் வீல் ஸ்டீரிங் இடம்பெற்றுள்ளது. இந்த கார் மூன்று வித இருக்கை அமைப்புகளில் ஒன்றை தேர்வு செய்யும் வகையில் விற்பனைக்கு வந்துள்ளது. 

காரின் வடிவமைப்பு:

புதிய பெண்ட்லி பெண்ட்யகா EWB  வெர்ஷன் அதன் ஸ்டாண்டர்டு வேரியண்டை விட 180mm வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் வீல்பேஸ் 2995mm-ல் இருந்து 3175mm-ஆக அதிகரித்து இருக்கிறது. தற்போது காரின் ஒட்டுமொத்த நீளம் 5322mm ஆகும். இதன் காரணமாக இரண்டாம் அடுக்கு இருக்கையில் அமர்வோருக்கு அதிக இடவசதி கிடைத்திருக்கிறது. அதேநேரம், இதில் 7 இருக்கை இடவசதி இதில் வழங்கப்படவில்லை. புதிய பாலிஷ் செய்யப்பட்ட 22-இன்ச், 10-ஸ்போக் அலாய் வீல்கள் ஆகியவை அடங்கும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Biggboss Tamil Season 8 LIVE:  முதல் பங்கேற்பாளராக ரவீந்தர் சந்திரசேகரனை அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி
Biggboss Tamil Season 8 LIVE: முதல் பங்கேற்பாளராக ரவீந்தர் சந்திரசேகரனை அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Biggboss Tamil Season 8 LIVE:  முதல் பங்கேற்பாளராக ரவீந்தர் சந்திரசேகரனை அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி
Biggboss Tamil Season 8 LIVE: முதல் பங்கேற்பாளராக ரவீந்தர் சந்திரசேகரனை அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
Air show 2024: மெரினா கடற்கரை பகுதிகளில் சீராகி வரும் போக்குவரத்து; காவல்துறை விளக்கம்!
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Embed widget