சிங்கிள் சார்ஜில் 161 கி.மீட்டர் மைலேஜ்... Ather 450S இ ஸ்கூட்டர் விலையும், தரமும் இதுதான்!
ஏதர் நிறுவனத்தின் Ather 450S இ ஸ்கூட்டரின் விலை, மைலேஜ், தரம் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் முன்னணி மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக இருப்பது Ather. இந்த நிறுவனத்தின் முக்கிய படைப்பு Ather 450S இ ஸ்கூட்டர் ஆகும். இந்த இ ஸ்கூட்டரின் விலை, மைலேஜ், தரம் குறித்து கீழே விரிவாக காணலாம்.
ஏதர் நிறுவனத்தின் Ather 450S இ ஸ்கூட்டரில் மொத்தம் 4 வேரியண்ட்கள் உள்ளது. அந்த வேரியண்ட்கள் விவரம் கீழே வருமாறு:
1. Ather 450S Standard:
ஏதர் நிறுவனத்தின் Ather 450S Standard விலை ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரத்து 111 ஆகும். இதில் 2.9 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 115 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 100 சதவீதம் சார்ஜ் செய்வதற்கு 8.3 மணி நேரம் வரை எடுத்துக்கொள்கிறது. இந்த இ ஸ்கூட்டர் நீலம், வெள்ளை, கருப்பு, சாம்பல் நிறத்தில் இந்த Ather 450S Standard உள்ளது. அதிகபட்சமாக 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.
2. 450S Ather Stack Pro:
இந்த 450S Ather Stack Pro இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 54 ஆயிரத்து 111 ஆகும். இதில் 2.9 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 8.36 மணி நேரம் ஆகிறது. நீலம், வெள்ளை, கருப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் இது உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 115 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். அதிகபட்சமாக மணிக்கு 90 கிலோமீட்டர் வரை செல்லலாம்.
3. 450S:
3.7 கிலோவாட் பேட்டரியை கொண்டது இந்த 450S இ ஸ்கூட்டர் ஆகும். இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 55 ஆயிரத்து 370 ஆகும். இதை சார்ஜ் செய்வதற்கு 5.45 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 161 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. அதிகப்ட்சமாக மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் சாம்பல் நிறத்தில் இந்த இ ஸ்கூட்டர் கிடைக்கிறது.
4. 450S Ather Stack Pro:
இந்த 450S Ather Stack Pro இ ஸ்கூட்டரில் விலை ரூபாய் 1 லட்சத்து 70 ஆயிரத்து 370 ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த இ ஸ்கூட்டர் 161 கிலோமீ்ட்டர் வரை மைலேஜ் தருகிறது. அதிகபட்சமாக மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. இதில் 3.7 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 5.45 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. கருப்பு, நீலம், வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்தில் இந்த இ ஸ்கூட்டர் உள்ளது.
சிறப்பம்சங்கள்:
இந்த இ ஸ்கூட்டர் 22 என்எம் டார்க் இழுவிசை திறன் கொண்டது. சிபிஎஸ், டிஸ்க் ப்ரேக் வசதி கொண்டது. 3 பிஸ்டன் காலிபர் கொண்டது. இதன் எடை 100 கிலோ ஆகும். 170 மில்லி மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. யுஎஸ்பி சார்ஜிங் வசதி கொண்டது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி கொண்டது. மொபைல் மானிட்டர் வசதி உள்ளது. பேட்டரி இருப்பை கண்காணிக்கும் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகளை கொண்டது.
வாரண்டி:
22 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. எமர்ஜென்சி நிறுத்த சிக்னல், ஆட்டோ இண்டிகேட்டர், ஜிபிஎஸ், ப்ளூடூத் வசதி கொண்டது. 3 வருடங்கள் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் வாரண்டி கொண்டது. மோட்டாருக்கு 3 வருடம் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுவதற்கு வசதியாக எடை குறைவாகவும், இலகுவாகவும் உள்ள இந்த இ ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களை கவர்கிறது.





















