மேலும் அறிய

Ather 450 Apex: ஏதர் நிறுவனத்தின் அதிவேகமான ஸ்கூட்டர்.. 450 அபெக்ஸ் மாடலுக்கான முன்பதிவு தொடங்கியது - அறிமுகம் எப்போது?

Ather 450 Apex: ஏதர் நிறுவனத்தின் அதிவேகமான மின்சார ஸ்கூட்டரான 450 அபெக்ஸ் மாடல், ஜனவரி 6ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது.

Ather 450 Apex: ஏதர் நிறுவனத்தின் அதிவேகமான மின்சார ஸ்கூட்டரான 450 அபெக்ஸ் மாடலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

Ather 450 Apex முன்பதிவு தொடக்கம்:

ஏதர் 450 அபெக்ஸ் என்பது இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாக உள்ள மின்சார ஸ்கூட்டர் ஆகும். பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட  ஏதர் நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே இந்த வாகனம் தொடர்பாக பேசி வருகிறது.  450X மாடலில் உள்ள ரேபிட் வார்ப் பயன்முறையை விட வேகமான புதிய வார்ப்+ பயன்முறையை 450 அபெக்ஸ் மாடல் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, ஏதர் நிறுவனத்தின் அதிவேகமான ஸ்கூட்டர் என்ற பெருமையையும் இந்த வாகனம் கொண்டிருக்கிறது. இந்த வாகனத்திற்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி 6 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ஏதர் 450 அபெக்ஸ் மாடல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவல்கள் தற்போது உறுதியாகியுள்ளன.

வடிவமைப்பு:

ஏதர் எனர்ஜி  நிறுவனம் தனது 10வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் உருவாக்கியுள்ள 450 அபெக்ஸ், அந்நிறுவனத்தின் 450S மற்றும் 450X போன்றவற்றைப் போலவே காட்சியளிக்கிறது. 2020 ஆம் ஆண்டில் சீரிஸ் 1 ​​கலெக்டரின் எடிஷன் இ-ஸ்கூட்டரில் இருந்ததை போன்ற வெளிப்படையான பாடி பேனல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. ஒரு பெரிய 10-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் திரை வழங்கப்பட்டு இருக்கும். 

இதுவரை வெளியாகியுள்ள டீஸர்கள் 450X போன்ற அதே 7-இன்ச் TFT தொடுதிரையைக் அபெக்ஸ் மாடலும் கொண்டிருப்பதைக் காட்டுகின்றன. இதேபோன்று, 450Xல் உள்ள வேறு சில அம்சங்களும் புதிய மாடலில் எதிர்பார்க்கலாம். புளூடூத் இணைப்பு, ஆன்-போர்டு நேவிகேஷன், ஹில்-ஹோல்ட், தொலைபேசி அழைப்புகள் மற்றும் மியூசிக் பிளேபேக்கிற்கான கட்டுப்பாடுகள் ஆகியவை இதில் அடங்கும். 

பேட்டரி, விலை விவரங்கள்:

Ather 450X, 3.7kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டிருக்கும் போது ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  பல ஆடம்பரமான இணைக்கப்பட்ட அம்சங்களை விரும்பி பெறும்போது அதன் விலை ஒரு லட்சத்து 68 ஆயிரமாக உயரும். ஆனால், அபெக்ஸின் விலை X-ஐ விட அதிகமாக, அதாவது இரண்டு லட்ச ரூபாய் வரையில் நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், 450X போன்ற அதே 3.7kWh பேட்டரி மூலம் இயக்கப்படும் என கூறப்பட்டாலும்,  அபெக்ஸில் இடம்பெறும் மோட்டார் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது. Ather 450 Apex ஆனது 100kph வரம்பை மீறக்கூடும். அதோடு,  ஏற்கனவே இருக்கும் zippy Ather 450X உடன் ஒப்பிடுகையில் 0-40kph  ஆக்சிலரேஷனையும் சிறப்பாகக் கொண்டிருக்கலாம். அபெக்ஸ் மாடல் ஸ்கூட்டர்களின் விநியோகம் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS Slams DMK: ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
Velachery-Guindy Flyover: போட்ரா வெடிய, தீரப்போகுது போக்குவரத்து நெரிசல்; வேளச்சேரி to கிண்டி புதிய மேம்பாலம் - முழு விவரம்
போட்ரா வெடிய, தீரப்போகுது போக்குவரத்து நெரிசல்; வேளச்சேரி to கிண்டி புதிய மேம்பாலம் - முழு விவரம்
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
Google's New Gmail Tool: அப்பாடா நிம்மதி.! இனிமே தேவையில்லாத மெயில ஈசியா தட்டித் தூக்கிரலாம் - ஜி மெயிலில் புதிய டூல்
அப்பாடா நிம்மதி.! இனிமே தேவையில்லாத மெயில ஈசியா தட்டித் தூக்கிரலாம் - ஜி மெயிலில் புதிய டூல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Slams DMK: ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
Velachery-Guindy Flyover: போட்ரா வெடிய, தீரப்போகுது போக்குவரத்து நெரிசல்; வேளச்சேரி to கிண்டி புதிய மேம்பாலம் - முழு விவரம்
போட்ரா வெடிய, தீரப்போகுது போக்குவரத்து நெரிசல்; வேளச்சேரி to கிண்டி புதிய மேம்பாலம் - முழு விவரம்
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
Google's New Gmail Tool: அப்பாடா நிம்மதி.! இனிமே தேவையில்லாத மெயில ஈசியா தட்டித் தூக்கிரலாம் - ஜி மெயிலில் புதிய டூல்
அப்பாடா நிம்மதி.! இனிமே தேவையில்லாத மெயில ஈசியா தட்டித் தூக்கிரலாம் - ஜி மெயிலில் புதிய டூல்
Tesla India Launch: இந்தியாவில் கலக்க வரும் டெஸ்லா; முதல் மாடலான 'Y'-ல் இவ்வளவு வசதிகளா.!! விலை என்ன தெரியுமா.?
இந்தியாவில் கலக்க வரும் டெஸ்லா; முதல் மாடலான 'Y'-ல் இவ்வளவு வசதிகளா.!! விலை என்ன தெரியுமா.?
Iran Threatens Trump: ஈரானிடமிருந்து கொலை மிரட்டல்; புன்னகையால் டீல் செய்த ட்ரம்ப் - நடந்தது என்ன தெரியுமா.?
ஈரானிடமிருந்து கொலை மிரட்டல்; புன்னகையால் டீல் செய்த ட்ரம்ப் - நடந்தது என்ன தெரியுமா.?
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
Embed widget