தஞ்சாவூர் : கோழிக்குத்தி வானமுட்டி பெருமாள் கோயில் திருப்பணி தொடக்கம்.. பணிகள் தீவிரம்..
கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயில் திருப்பணி தொடக்க விழாவில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சோழம்பேட்டை அடுத்த கோழிகுத்தி கிராமத்தில் வானமுட்டி பெருமாள் என்று அழைக்கப்படும் சீனிவாச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் பெருமாள் 14 அடி உயரத்தில் ஒரே அத்தி மரத்தில் ஆன திருமேனியை கொண்டு அருள்பாலித்து வருகிறார்.
Etharkkum Thunindhavan :கடலூர்: மிரட்டும் பாமக: அடிவாங்கும் எதற்கும் துணிந்தவன்? நாளுக்குநாள் குறையும் தியேட்டர் எண்ணிக்கை!
இங்கு, பெருமாளுக்கு இடப்பக்கத்தில் பூதேவித் தாயாரின் சிறு விக்கிரகம் உள்ளது. தாயாருக்கெனத் தனி சந்நிதி இல்லை. ஒரே ஒரு பிரகாரம்தான் இருக்கிறது. இவரைத் தரிசனம் செய்தால் திருப்பதி சீனிவாச பெருமாளையும், சோளிங்கர் யோக நரசிம்மரையும், காஞ்சிபுரம் அத்தி வரதராஜரையும் ஒன்றாகத் தரிசித்த பலன் கிடைக்கும்' என்கிறார்கள் பக்தர்கள். வானமுட்டி பெருமாள் அனைத்து விதமான பிதுர் சாபம், ஹத்தி தோஷம், சரும வியாதி மற்றும் சனி கோளாறு போன்றவைகளை தன்னை வழிபடும் வரும் பக்தர்களுக்கு வழிபட்ட உடனே போக்கி அருள் பாலிப்பதாக ஐதீகம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில் மகா சம்ப்ரோக்ஷணம் எனப்படும் மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்காக பாலாலயம் மற்றும் திருப்பணி தொடக்க விழா இன்று நடைபெற்றது. திருப்பணி தொடக்க விழாவை முன்னிட்டு நேற்று மாலை முதல் சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டு, இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து மஹா பூர்ணாகுதி, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து, கோயிலை வேத விற்பன்னர்கள் கடத்தினை தலையில் சுமந்து வலம் வந்து சுவாமிக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மேஷ லக்னத்தில் ஸ்ரீ வைகானஸ பகவத் சாஸ்திர முறைப்படி விமான பாலாலயம் மற்றும் திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது.
பூஜைகளை கோவில் அர்ச்சகர் வரதராஜ பட்டாச்சாரியார் தலைமையில் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி ஜவஹர், தொழிலதிபர் விஜயகுமார், மகாலட்சுமி சுப்பிரமணியன், டெக்கான் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பெருமாளை வழிப்பட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நிர்மலா தேவி, தக்கார் பாலு மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.