watch video | மதுரை மேலூர் அருகே கோலாகலமாக நடந்த மீன்பிடித் திருவிழா - கூட்டம் கூட்டமாக மீன்பிடித்த கிராம மக்கள்
நிறைய மீன்கள் கிடைத்தால் விவசாயம் நல்லபடியாக நடைபெறும் என்பது கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவலையபட்டியிலுள்ள கம்புளியான் கண்மாயி அமைந்துள்ளது. இந்த கண்மாயில் வருடந்தோறும் மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு மீன்பிடி திருவிழாவில் சருகுவலையபட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளான வடக்குவலையபட்டி, தனியமங்கலம், கீழவளவு, கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இன்று அதிகாலையில் கண்மாயில் வந்து குவிந்தனர்.
#Abpnadu | மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகவலையபட்டியில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழா ஏராளமான பொதுமக்கள் பல்வேறு வகையான நாட்டு வகை மீன்களை பிடித்து அசத்தினர். #Abpnadu | #fishfestivel | #melur | #madurai | #fishing | @reportervignesh | @abpnadu | @LPRABHAKARANPR3 | . . pic.twitter.com/6Lqy0NgN8V
— Arunchinna (@iamarunchinna) March 9, 2022
#Abpnadu மேலூர் பகுதியில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற, இந்த மீன்பிடி திருவிழாவில் பிடிபட்ட மீன்களை முதலில் சாமிக்குபடைத்து விட்டு, பின்பு தாங்கள் சமைத்து உண்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.#Madurai | @gurusamymathi | @kthirumani pic.twitter.com/xj5bJ9LzZn
— Arunchinna (@iamarunchinna) March 9, 2022