Kushboo Sundar anniversary: “இதை தவிர வேறென்ன வேண்டும் எனக்கு...” - திருமண நாள் பதிவில் நெகிழ்ந்த குஷ்பு
இயக்குனர் சுந்தர் சி உடனான தனது 22வது திருமண ஆண்டு விழாவையொட்டி இன்ஸ்டாகிராமில் பழைய புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். இது வைரலாகி வருகிறது.
சினிமா, அரசியல் என பரபரப்பாக இயங்கி வரும் குஷ்பு, சமூக வலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். அந்த வரிசையில், இயக்குனர் சுந்தர் சி உடனான தனது 22வது திருமண ஆண்டு விழாவையொட்டி இன்ஸ்டாகிராமில் பழைய புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். இது வைரலாகி வருகிறது.
அந்த இன்ஸ்டாகிராம் பதிவில், “அப்போதில் இருந்து இப்போது வரை. என்னுடைய வாழ்நாளின் பாதியை உங்களுடன் செலவழித்திருக்கிறேன். இதை தவிர வேறென்ன வேண்டும் எனக்கு. நமக்கு ஓராண்டு கால அவகாசம் தர முடியாது என சொன்னார்கள், இன்று நாம் 22 ஆண்டுகளை கடந்து வந்திருக்கிறோம். லவ் யூ. உங்களுடனான இந்த வாழ்க்கை மிக அழகானது” என தெரிவித்திருக்கிறார்.
View this post on Instagram
13 வயதில் ஹீரோயின் ஆனார் குஷ்பு. குழந்தை நட்சத்திரமாக இருந்த அவரை கதாநாயகி ஆக்கியவர் போனி கபூர். நடிப்பில் குஷ்புவுக்கு நாட்டமில்லை. படிப்பில் தான் அவரின் விருப்பம் இருந்தது. ஆனால், தந்தை நடிக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நிர்பந்தித்தால் நடித்தார். அவர் தான் படங்களை முடிவு செய்துள்ளார். பணத்துக்காக பாலிவுட்டில் பெயர் தெரியாத படங்களில் எல்லாம் நடித்துள்ளார் குஷ்பு.
பின்னர் தென்னிந்தியா செல்வோம் என குஷ்புவை அழைத்துக் கொண்டு வந்தார் அவருடைய தந்தை. 1986ல் சென்னைக்கு வந்தார். தெலுங்கு, கன்னடம் என நடித்து சம்பாதித்தார். தமிழில் தர்மத்தின் தலைவன் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. தமிழே தெரியாமல் அந்தப் படத்தில் நடித்த குஷ்பு ரஜினியை வாடா என அழைத்து ஸ்பாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். பின்னர் பிரபு அதன் அர்த்தத்தை சொல்ல ரஜினியிடம் மன்னிப்பு கேட்டு பின்னாளில் அவருக்கே ஜோடியானார். அதனை தொடர்ந்து உச்சத்தை தொட்ட அவர், சினிமா, அரசியல் என இரு துறைகளிலும் அசத்தி வருகிறார் குஷ்பு.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்