மேலும் அறிய

Rasipalan 28 May, 2023: ரிஷபத்துக்கு நலம்... மிதுனத்துக்கு நிறைவு... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

RasiPalan Today May 28: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள்: 28.05.2023 - ஞாயிற்றுகிழமை 

நல்ல நேரம்:

காலை 6.00 மணி முதல் காலை 7.00 மணி வரை

மதியம் 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை

இராகு:

மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை

குளிகை:

மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

எமகண்டம்:

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 

சூலம் - மேற்கு

மேஷம்

உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் மேன்மை உண்டாகும். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்கள் கைகூடும். சாதனை நிறைந்த நாள். 

ரிஷபம்

உத்தியோகத்தில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உறவினர்களின் உதவி கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவினை ஏற்படுத்தும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். மனை மீதான கடன் சார்ந்த சில உதவிகள் சாதகமாக அமையும். நலம் நிறைந்த நாள். 

மிதுனம்

பிள்ளைகள் தொழிலில் உதவிகரமாக இருப்பார்கள். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். மனதில் நினைத்த காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். நிறைவு நிறைந்த நாள்.

கடகம்

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். செலவுகளின் தன்மை அறிந்து செயல்படவும். உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். அமைதியான செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கடன் பிரச்சனைகள் குறையும். நன்மை நிறைந்த நாள். 

சிம்மம்

வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் முன்னேற்றத்தை ஏற்படுத்த இயலும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் வேகத்தைவிட விவேகம் அவசியம். எதிலும் திருப்தி அற்ற சூழ்நிலைகள் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். செய்கின்ற முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புதுமை நிறைந்த நாள். 

கன்னி

உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட காலப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் பொறுமையை கையாளவும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான தருணங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.

துலாம்

செயல்பாடுகளில் புதிய உற்சாகத்துடனும், புத்துணர்ச்சியுடனும் ஈடுபடுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த சிக்கல்கள் படிப்படியாக குறையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உயர்வு நிறைந்த நாள். 

விருச்சிகம்

வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். அரசாங்கத்தின் வழியில் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். உடற்பயிற்சி சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த புதிய இலக்குகள் பிறக்கும். காப்பீடு தொடர்பான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். தந்தைவழி தொழில் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். வெற்றி நிறைந்த நாள்.

தனுசு

ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களை பற்றிய புரிதல் ஏற்படும். புதிய கூட்டாளிகளை சேர்ப்பது தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.

மகரம்

எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது மனதிற்கு அமைதியை ஏற்படுத்தும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வாகன பயணங்களின் போது ஆவணங்களில் கவனம் வேண்டும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். விவேகம் வேண்டிய நாள்.

கும்பம்

எந்த ஒரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உறவுகளின் வருகையால் மனமகிழ்ச்சி உண்டாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பேச்சுக்களில் அதிகாரம் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். குழப்பம் விலகும் நாள்.  

மீனம்

வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். திடீர் பயணங்களின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Budget 2025: மக்களே! இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்! மக்களை மகிழ்விப்பாரா நிர்மலா சீதாராமன்?
Budget 2025: மக்களே! இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்! மக்களை மகிழ்விப்பாரா நிர்மலா சீதாராமன்?
Budget 2025 LIVE: நாடே எதிர்பார்ப்பு! இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் - சாமானியனுக்கு சந்தோஷமா?
Budget 2025 LIVE: நாடே எதிர்பார்ப்பு! இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் - சாமானியனுக்கு சந்தோஷமா?
Rasipalan February 01: மேஷத்திற்கு புதிய வேலை; ரிஷபத்திற்கு இன்னல்கள் விலகும்: இன்றைய ராசிலபலன்
Rasipalan February 01: மேஷத்திற்கு புதிய வேலை; ரிஷபத்திற்கு இன்னல்கள் விலகும்: இன்றைய ராசிலபலன்
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதவி: 19 பேருக்கு பொறுப்புகளை வழங்கிய விஜய்
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதவி: 19 பேருக்கு பொறுப்புகளை வழங்கிய விஜய்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த்! நம்பர் 2 ஆகும் ஆதவ்! விஜய் போட்ட கண்டிஷன்மோதும் அண்ணாமலை நயினார்! களத்தில் இறங்கும் அமித்ஷா! பரபரக்கும் கமலாலயம்ஓரங்கட்டிய சீமான்! அப்செட்டான காளியம்மாள்! உடனே அழைத்த விஜய்Parasakthi Title Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Budget 2025: மக்களே! இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்! மக்களை மகிழ்விப்பாரா நிர்மலா சீதாராமன்?
Budget 2025: மக்களே! இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்! மக்களை மகிழ்விப்பாரா நிர்மலா சீதாராமன்?
Budget 2025 LIVE: நாடே எதிர்பார்ப்பு! இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் - சாமானியனுக்கு சந்தோஷமா?
Budget 2025 LIVE: நாடே எதிர்பார்ப்பு! இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் - சாமானியனுக்கு சந்தோஷமா?
Rasipalan February 01: மேஷத்திற்கு புதிய வேலை; ரிஷபத்திற்கு இன்னல்கள் விலகும்: இன்றைய ராசிலபலன்
Rasipalan February 01: மேஷத்திற்கு புதிய வேலை; ரிஷபத்திற்கு இன்னல்கள் விலகும்: இன்றைய ராசிலபலன்
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதவி: 19 பேருக்கு பொறுப்புகளை வழங்கிய விஜய்
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதவி: 19 பேருக்கு பொறுப்புகளை வழங்கிய விஜய்
TVK : புஸ்ஸாகும் புஸ்ஸி ஆனந்த்! ஆதவ் எண்ட்ரியால் களேபரம்.. தவெகவில் நடப்பது என்ன?
TVK : புஸ்ஸாகும் புஸ்ஸி ஆனந்த்! ஆதவ் எண்ட்ரியால் களேபரம்.. தவெகவில் நடப்பது என்ன?
3ம் கட்ட பட்டியலை வெளியிட்ட விஜய்.! தவெக-வின் புதிய 19 மாவட்ட நிர்வாகிகள் லிஸ்ட்
3ம் கட்ட பட்டியலை வெளியிட்ட விஜய்.! தவெக-வின் புதிய 19 மாவட்ட நிர்வாகிகள் லிஸ்ட்
Union Budget 2025 Expectations: பிப்.1- ம் தேதி தாக்கலாகிறது பட்ஜெட்  - விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?
Union Budget 2025 Expectations: பிப்.1- ம் தேதி தாக்கலாகிறது பட்ஜெட் - விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?
Kovai Sathyan: தவெக-வில் சேருகிறேனா? இதெல்லாம் அசிங்கம்! கோபப்பட்ட கோவை சத்யன்
Kovai Sathyan: தவெக-வில் சேருகிறேனா? இதெல்லாம் அசிங்கம்! கோபப்பட்ட கோவை சத்யன்
Embed widget