மேலும் அறிய
சிவகங்கை: வறட்சியை வெல்லும் மாபெரும் திட்டம்! ரூ.4 கோடி மதிப்பீட்டில் நீர்நிலைகள் புனரமைப்பு துவங்கியது !
கரை பலப்படுதும் பணி, மடைகள் மறு கட்டுமானம் மற்றும் பழுதுபார்த்தல் பணி, கலுங்கு மறு கட்டுமானம் மற்றும் பழுதுபார்த்தல் பணி, பாசனவாய்க்கால் கட்டும் பணி ஆகியவைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

அமைச்சர் கொடியசைத்து துவங்கி வைத்தார்
Source : whatsapp
மணிமுத்தாற்றின் குறுக்கே மொத்தம் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் வடமாவளி அணைக்கட்டு பணிக்கு அடிக்கல் நாட்டி, அதன் மூலம் பயன்பெறும் கண்மாய்கள் புனரமைக்கும் பணி தொடங்கியது.
மணிமுத்தாற்றின் குறுக்கே வடமாவளி அணைக்கட்டு
தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் நீர்வளத்துறையின் சார்பில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் மணிமுத்தாற்றின் குறுக்கே வடமாவளி அணைக்கட்டு பணிக்கு அடிக்கல் நாட்டி, அதன் மூலம் பயன்பெறும் கண்மாய்கள் புனரமைக்கும் பணியினை கொடியசைத்து தொடங்கி வைத்து தெரிவிக்கையில்...,” தமிழ்நாடு முதலமைச்சர், நீர்வள ஆதாரங்களை சீரமைத்து, நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்திடும் பொருட்டு, தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள். அந்தவகையில், சிற்றாறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகள் அதிகம் நிறைந்த மாவட்டமாக திகழ்ந்து வரும் சிவகங்கை மாவட்டத்தில், மழைக்காலங்களில் பெறப்படும் தண்ணீரை வீணாக்காமல் சேமிப்பதற்கு ஏதுவாக, வரத்துவாய்கால், கால்வாய்கள், ஏரிகள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகளை புணரமைத்தல், பலப்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளவும் மற்றும் கலுங்குகள், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைந்திருக்கும் செடிகளை அகற்றுதல், நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்றுதல் போன்ற பல்வேறுப் பணிகள் தொடர்ந்து மாவட்ட முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முறையாக நீர் வழங்க சிரமமாக உள்ளது.
அந்தவகையில், மணிமுத்தாற்றின் குறுக்கே நெடுகை 2.950 வது கி.மீட்டரில் வடமாவளி அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த மதகணை 1971-75 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இவ்அணைக்கட்டின் இடதுபுறம் வெட்டப்பட்டுள்ள கால்வாய் வழியாக வடமாவளி கண்மாய் பாசன வசதி பெறுகிறது. மணிமுத்தாற்றில் அமைந்துள்ள வடமாவளி அணைக்கட்டின் கட்டடம், தலைமதகு, மணல் போக்கி, சட்டர்ஸ்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது, மேலும், நீர்வழி பாதையானது அடர்ந்த முட்செடிகள், சீமைகருவேல செடிகளால் ஆற்றில் நீர் செல்வது தடையாக உள்ளதால் கண்மாய்களுக்கு முறையாக நீர் வழங்க சிரமமாக உள்ளது. எனவே, அதனை கருத்தில் கொண்டு, வடமாவளி அணைக்கட்டினை சீரமைப்பதற்கும், அதன் மூலம் பயன்பெறும் 3 கண்மாய்களான வடமாவளி கண்மாய், கருவேல்குருச்சி கண்மாய் மற்றும் குமிளி கண்மாய் ஆகியவைகளை புனரமைக்கும் பணிகள் மேற்கொள்வதற்கென அரசால் ரூபாய் 4 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, அதற்கான பணிகள் இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதில், கரை பலப்படுதும் பணி, மடைகள் மறு கட்டுமானம் மற்றும் பழுதுபார்த்தல் பணி, கலுங்கு மறு கட்டுமானம் மற்றும் பழுதுபார்த்தல் பணி, பாசனவாய்க்கால் கட்டும் பணி ஆகியவைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
ஒத்துழைப்பு வேண்டும்
மணிமுத்தாற்றின் மொத்த நீளமான 8.50 கீலோ மீட்டர் நீர்வழிப்பாதையில் உள்ள அடர்ந்த முட்செடிகள், சீமைகருவேல செடிகளால் ஆற்றில் நீர் செல்வது தடைபடுகிறது மற்றும் ஆற்றின் இருகரைகளும் வலுவிழந்தும் உயரம் குறைவாக உள்ளதால், மழை காலங்களில் ஆற்றின் அதிகபடியான நீர் செல்லும் பொழுது ஆற்றின் இரு புறமும் அமைந்துள்ள கிராமங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், இப்பணிகளானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை செயல்படுத்துவதால் சிவகங்கை மாவட்டத்திலுள்ள 3 கண்மாய்களின் 411.67 ஹெக்டேர் பாசன பகுதி பயன்பெறும் வகையிலும், மேலும் மணிமுத்தாற்றின் இரு புறமும் உள்ள கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் வண்ணமும் அரசால் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ” என தெரிவித்தார்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















