தினமும் 120 விவசாயிகள் வருகை....ஏழை, எளிய மக்களின் வரவேற்பை பெற்ற கரூர் சந்தை
கரூர் உழவர் சந்தைக்கு தினமும் சராசரியாக 120 விவசாயிகள் வருகை புரிகின்றனர். 20 முதல் 22 மெட்ரிக் டன் வரை காய்கறிகள் வரத்து வருகின்றன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் தினமும் வருகை புரிகின்றனர்.
நாட்டின் முதுகெலும்பான விவசாயத் தொழிலை பேணி காப்பதற்காக மத்திய -மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வந்தாலும், சில திட்டங்கள் தான் பேசப்படுகின்றன. வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில் முதலமைச்சர் கருணாநிதி மதுரை மாவட்டம் அண்ணா நகரில் கடந்த 1999 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி தொடங்கி வைத்த உழவர் சந்தை திட்டம் உன்னத திட்டமாக போற்றப்பட்டது.
உழவர் சந்தைகள் இந்த திட்டத்தின் நோக்கம் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைவிக்கும் காய்கறிகள், பழங்களை இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் நேரடியாக மக்களிடம் விற்பனை செய்து நல்ல லாபம் அடைய வேண்டும். மக்களும் மன நிறைவு பெற வேண்டும் என்பது தான் கரூர் மாவட்டத்தை பொருத்தவரை மொத்தம் ஐந்து இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.
கரூர் திருச்சி சாலையில் கடந்த 2000ம் ஆண்டு முதல் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இதே போல் வெங்கமேடு, பள்ளப்பட்டி, வேலாயுதம்பாளையம், குளித்தலை ஆகிய இடங்களிலும் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைகளுக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளன. புதுப்பொலிவு ஆனால் மற்ற மாவட்டங்களில் ஆரம்பத்தில் மிகுந்த வரவேற்பை பெற்று இருந்த உழவர் சந்தைகள் கடந்த 10 ஆண்டுகளாக அடையாளத்தை இழந்து கால்நடைகள் கட்டவும் வாகனங்களை நிறுத்தவும் மது பிரியர்கள் சங்கமிக்கும் இடமாகவும் மாறியது. இந்த நிலையில் திமுக ஆட்சி மீண்டும் அமைந்த உடன் இந்த திட்டத்தை புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் மும்முரம் காட்டியதால் உழவர் சந்தைகள் மீண்டும் புதுப்பொலிவு பெற்றன.
கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையின் செயல்பாடுகள் குறித்து மண்மங்கலம் பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி கிருஷ்ணவேணி தங்களுடைய கூறும் போது உழவர் சந்தையில் காய்கறிகளை கொட்டி விற்பனை செய்யும் அளவிற்கு போதுமான அளவில் இட வசதி உள்ளன. நல்ல முறையில் வியாபாரம் நடைபெற்று வருகிறது. கொரோனா காலத்தை விட தற்போது அதிக அளவில் விற்பனை நடக்கிறது. தக்காளி ஒரு நாளைக்கு 200 கிலோ விற்பனை ஆகிறது. பண்டிகை நாட்களில் இரு மடங்கு விற்பனை ஆகிறது .
விலை குறைவு கரூர் ஐந்து ரோடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் உழவர் சந்தையில் அனைத்து காய்கறிகளும் புத்தம் புதிதாக கிடைக்கிறது. இன்றி விவசாயிகள் மூலம் நேரடியாக விற்பனை நடைபெறுவதால் காய்கறிகளின் விலை குறைந்த விலையில் கிடைக்கிறது .உழவர் சந்தைக்கு வந்தால் வீட்டிற்கு தேவையான அனைத்து காய்கறிகளையும் வாங்கிச் செல்லலாம். வாரச்சந்தைகளை விட உழவர் சந்தையில் விலை குறைவாகத்தான் இருக்கிறது.
இதன் மூலம் ஏழை எளிய மக்களின் வரவேற்பு உழவர் சந்தை பெற்று உள்ளது. அணைப்பட்டி சேர்ந்த விவசாயி சுப்பிரமணி உழவர் சந்தையில் அவரைக்காய் விற்றுக் கொண்டிருக்கிறேன். அவரைக்காயை விரும்பி அதிக அளவிலான மக்கள் வாங்கி செல்கின்றனர். ஒரு நாளைக்கு 100 கிலோ அவரைக்காய் விற்கிறேன். இலவச சந்தையில் இடவசதி சரியாக இருக்கிறது. தராசு இடம் இலவசமாக தருகிறார்கள். கொரோனா காலத்திற்கு பின்னர் தற்போது மக்கள் அதிக அளவில் வருகிறார்கள் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் சந்தோசமாக காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர் .
கரூர் உழவர் சந்தை கடந்த 2000 ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு மொத்தம் 60 கடைகள் உள்ளன. கரூர் உழவர் சந்தைக்கு தினமும் சராசரியாக 120 விவசாயிகள் வருகை புரிகின்றனர். 20 முதல் 22 மெட்ரிக் டன் வரை காய்கறிகள் வரத்து வருகின்றன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் தினமும் வருகை புரிகின்றனர். தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் 150 முதல் 170 விவசாயிகளும் 25 மெட்ரிக் டன் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.