மேலும் அறிய

விதையில்லை, பூக்காது, காய்க்காது: வெற்று இலையாம் வெற்றிலை

காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடக்கூடிய இந்த வெற்றிலை கும்பகோணம் வெற்றிலை என அழைக்கப்படுகிறது.

தஞ்சாவூர்: வெற்றிலை என்பது மிளகு வகையை சேர்ந்தது. கொடி போல படர்வது, வெற்றிலை கொடிக்கால் என்று சொல்வது இதனால்தான். வெற்றிலை என்று கூறுவதன் காரணத்தை தெரிந்து கொள்வோம். அனைத்து கொடிகளும் பூ விடும், காய் காய்க்கும். ஆனால் வெற்றிலைக் கொடி பூக்காது, காய்க்காது. உட்கொள்ளக்கூடிய வெறும் இலை மட்டும்தான். இதனால்தான் வெற்று இலை என்பது அதாவது  வெறும் இலை என்று கூறப்பட்டு வந்தது சுருங்கி வெற்றிலை ஆகிவிட்டது என்கிறார்கள்.

இந்த வெற்றிலை என்று சொன்னாலே சட்டென்று கும்பகோணம் வெற்றிலைதான் என்பார்கள். அந்தளவிற்கு கும்பகோணம் வெற்றிலை வெகு பேமஸ். கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அய்யம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை, சுவாமிமலை, ஆவூர், திருவையாறு என்று பல ஊர்களில் வெற்றிலை கொடிக்கால்கள் உள்ளன. வெற்றிலை சாகுபடி நடக்கிறது. அது என்ன கும்பகோணம் பகுதியில் மட்டும் வெற்றிலை அவ்வளவு பேமஸ் என்று கேட்பவர்களுக்கு வெற்றிலை சாகுபடிக்கு தண்ணீர் தேவை, காவிரி ஆற்றின் கரையிலே இருக்கும் ஊர்களில் எல்லாம் தண்ணீருக்கு பஞ்சம் இல்லை. இதனால் வெற்றிலை பாக்கு எல்லாம் அங்கு நிறைய விளைகிறது என்கிறார்கள்.

அதனால்தான் வெற்றிலை என்றாலே கும்பகோணம் வெற்றிலை என்கின்றனர். வெற்றிலையில் இரண்டு வகை உண்டு..... கறுப்பு நிறத்தில் அதிகக் காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை. கற்பூர வாசனையுடன் சிறிது காரமாக இருப்பது கற்பூர வெற்றிலை. மிகுந்த மணத்துடன் காரம் அவ்வளவாக இல்லாமல் ஓரளவு வெளிர் நிறத்தில் இருப்பது சாதாரண வெற்றிலை.

உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், மாநிலங்களுக்கு தினந்தோறும் அனுப்பி வைக்கப்படுகிறது. பூம்புகாருக்கு அருகே ராதாநல்லூரில் உள்ள சிவாலயத்தின்  கல்வெட்டுகளின் ஆதாரம், உறையூர், திருக்காம்புலியூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளில் கிடைத்த பாக்குவெட்டிகள் ஆகியவற்றை கொண்டு கிபி.10ஆம் முதல் 14 ஆம் நூற்றாண்டு காலத்தில் இருந்தே காவிரி படுகையில் வெற்றிலையை வைத்து தாம்பூலம் வழங்கும் வழக்கத்தை உறுதி செய்துகிறது. எனவே தான் பல நூறாண்டுகளை கடந்து, காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடக்கூடிய இந்த வெற்றிலை கும்பகோணம் வெற்றிலை என அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சோழவந்தான் வெற்றிலை, ஆத்தூர் வெற்றிலையை காட்டிலும் கும்பகோணம் வெற்றிலை மாறுபட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விதையில்லை, பூக்காது, காய்க்காது: வெற்று இலையாம் வெற்றிலை

காலம் காலமாக நம்மோடு கலந்திருக்கும் வெத்தலையை பற்றிய சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்வோம். வெற்றிலைப் பயிருக்கு விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டி பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள். மலேசியாவில் தோன்றிய இச்செடி, இந்தியா மற்றும் இந்தோனேசியா போன்ற மற்ற நாடுகளில் வளர்க்கப்படுவதோடு மட்டுமல்லாது பணத்தை ஈட்டி தரும் தாவரமாகவும் திகழ்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்படி என்னதான் இந்த வெற்றிலையில் இருக்கு. நீர்ச்சத்து -84.4%, புரதச் சத்து-3.1%, கொழுப்புச் சத்து-0.8%, கலோரி அளவு-44, இரும்புச்சத்து, கால்சியம், கரோட்டின், தயமின், நியாசின், ரிபோபிளேவின், வைட்டமின்-C ஆகியவை இருக்காம். சமீபத்திய ஆய்வில் சவிக்கால் என்னும் வீரியமிக்க நோய் எதிர்ப்பு பொருள் வெற்றிலையில் மிக அதிகமாக இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. இந்த சவிக்கால் கிருமிகளை கொள்ளும் ஆற்றல் மிக்கது.

நம் உடம்பிற்கு இந்த வெற்றிலை செய்யும் நல்ல விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். புற்றுநோய்,  தோல் நோய்கள், ஜீரணக்கோளாறு, அல்சர், தேள்கடிக்கு, தாய்ப்பால் சுரக்க, தலைவலி நீங்க, கபம், சளி, நோய்தொற்று, ஆஸ்த்மா, மூட்டுவலி, ரத்த அழுத்தம்,  தொண்டைப்புண் போன்ற பல பிரச்சனைகளில் இருந்து நம் உடம்பை பாதுகாக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget