மேலும் அறிய
சிவகங்கை செட்டிநாடு வேளாண் கல்லூரி: 62 கோடியில் புதிய கட்டடம் திறப்பு.. புதிய வசதிகள் என்ன - முழு விவரம் !
2025 ஆம் ஆண்டில், இக்கல்லூரி வறட்சியைத் தாங்கி வளரும், அதிக மகசூல் தரவல்ல “செட்டிநாடு 1” என்னும் புதிய நிலக்கடலை இரகம் வெளியிட்டுள்ளது.

செட்டிநாடு வேளாண் கல்லூரி
Source : whatsapp
ஆய்வகங்களில் உலக தரத்திலான பல்வேறு ஆராய்ச்சி கருவிகளும் இடம் பெற்றுள்ளது. - மாணவி நெகிழ்ச்சி.
புதிய கட்டடம் - புதிய வசதி
தமிழ்நாடு முதலமைச்சரால் 2021-22 ஆம் ஆண்டில் நாகப்பட்டினம், கரூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மூன்று புதிய அரசு வேளாண் கல்லூரிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு தோட்டக்கலைக் கல்லூரி புதிதாக தொடங்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டு, 176 கோடியே 72 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்தவகையில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செயல்பட்டுவரும் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 61 கோடியே 79 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தினையும், புதிதாக கட்டப்பட்ட அரங்கத்திற்கு”பாரத ரத்னா விருது பெற்ற சி.சுப்பிரமணியம் பல்நோக்கு அரங்கம்” எனப் பெயர் சூட்டி, அவ்வரங்கத்தினையும் தமிழ்நாடு முதலமைச்சர் 31.1.2026 அன்று நேரில் திறந்து வைத்தார். இக்கல்லூரிக்கான கட்டடங்கள் சுமார் 2.52 இலட்சம் சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டு, அப்புதிய கட்டடத்தில், நிர்வாக அலுவலகக் கட்டடம், 250 மாணவர்கள் அமரக்கூடிய வகையில் இணையதள வசதியுடன் கூடிய நான்கு வகுப்பு அறைகள், 12 துறைகளுக்கான ஆய்வுக்கூடங்கள், மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள், உணவக விடுதி, சிற்றுண்டி விடுதி, மருத்துவ மையம், 1,500 நபர்கள் அமரக்கூடிய பல்நோக்கு அரங்கம், நூலகம் மற்றும் மாணவர்களுக்கான இணையதள மையம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கல்லூரியின் முக்கியதுவம்
இக்கல்லூரியில் மானாவாரிப் பயிர்களான நிலக்கடலை, சிறுதானியங்கள், பயறுவகைகளுக்குத் தேவையான வேளாண் சாகுபடி உத்திகளை உருவாக்குதல், குறைந்த நீர் தேவைப்படும், அதிக மதிப்புள்ள பயிர்களுக்கு முக்கியத்துவம் அளித்தல், வறண்ட மண்டல பழப்பயிர்கள், மரங்கள் மற்றும் தீவனப்பயிர்கள் மேம்பாடு, வேளாண்மை, தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி மற்றும் மரம் வளர்ப்பு போன்றவற்றின் மூலம் நில பயன்பாட்டுக்கான ஒருங்கிணைந்த பண்ணையமுறை, மானாவாரி பயிர்களுக்கான மழைநீர் சேகரிப்பு மற்றும் நுண்ணீர்ப்பாசன அமைப்புகள் நிறுவுதல், பண்ணைக்குட்டைகள் போன்ற நீர்செறிவூட்டு அமைப்புகள் மூலம் உற்பத்தித் திறன் அதிகரித்தல், மானாவாரி நிலங்களில் இயந்திரமயமாக்கல், விவசாயிகள் மற்றும் கிராமப்புர இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளித்தல் போன்ற நோக்கங்களுடன் இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. மேலும், இக்கல்லூரியில் மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருவதுடன், புதிய உணவு செய்முறைகள் மற்றும் பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள், குறிப்பாக சிறுதானியங்கள், பழங்கள் மற்றும் பிற வேளாண் விளைபொருட்களில் பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டுதல் தொழில்நுட்பங்களை உருவாக்கவும், பயிற்சி அளிக்கவும் உணவு பதப்படுத்துதல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் ஒன்றும், மானாவாரி மேலாண்மை மகத்துவ மையம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
கற்றல் திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கு பேருதவியாக உள்ளது.
2025 ஆம் ஆண்டில், இக்கல்லூரி வறட்சியைத் தாங்கி வளரும், அதிக மகசூல் தரவல்ல “செட்டிநாடு 1” என்னும் புதிய நிலக்கடலை இரகம் வெளியிட்டுள்ளது. மேலும் 10 உள்ளூர் மரவகைகளைக் கொண்டு பன்முகத்தன்மை கொண்ட வேளாண் காடுகள் மாதிரி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை 3,930 விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. செட்டிநாடு, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை வேளாண் அறிவியல் பயின்று வரும் மாணவி செல்வி நர்மதா அவர்கள் தெரிவிக்கையில்..,” எங்களது கல்லூரியின் கட்டுமானப் பணிக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது அனைத்து பணிகளும் நிறைவு பெற்று திறந்து வைக்கப்பட்டது. ஆய்வகங்களில் உலக தரத்திலான பல்வேறு ஆராய்ச்சி கருவிகளும் இடம் பெற்றுள்ளது. வேளாண்மைச் சார்ந்து பல்வேறு புதிய கண்டுபிடிப்புக்களை செய்திடல் வேண்டும் என்ற என்னைப் போன்ற மாணவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்திடும் வகையில் இக்கல்லூரியானது அமைந்துள்ளது சிறப்பிற்குரியதாகும். மேலும், இப்புதிய கட்டடத்தில் அமைந்துள்ள நூலகங்கள், பல்நோக்கு அரங்கங்கள், இணையதள மையங்கள் ஆகியவை எங்களது கற்றல் திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கு பேருதவியாக உள்ளது.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















