Humanoid robo : ரோபோடா..! மருத்துவத் துறையில் புதிய லேடி ரோபோ!
தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த செய்திகளை கடந்து செல்லும் பொழுதுதெல்லாம் ரோபோக்களின் வளர்ச்சி நம்மை பிரம்மிக்க வைப்பதாக இருக்கும். குறிப்பாக ஹுமனாய்ட் ரோபோக்கள் என்று அழைக்கப்படும் மனித ரோபோக்களின் வளர்ச்சி நம்பிக்கைக்கு அப்பால் பல மாற்றங்கள கண்டுள்ளது. இந்த வகை ஹுமனாய்ட் ரோபோக்கள் மனிதர்களை போலவே சிந்தித்து செயல்படும் வகையில் உருவாக்கப்படும். இவ்வகை ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில்தான் பல நிறுவனங்கள் போட்டி போட்டு ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகமான ஹுமனாய்ட் ரோபோவான சோஃபியா பலரின் கவனத்தை பெற்றது. ஹாங்காங்கை சேர்ந்த பிரபல ”ஹேன்ஸன் ரோபட்டிக்ஸ் “ என்ற நிறுவனம் இந்த சோஃபியாவை அறிமுகப்படுத்தியது.





















