Msdhoni Birthday இப்பதான் சத்தம் இல்ல அப்பல்லாம் வேற லெவல் - ட்விட்டரில் தல தோனி | Msdhoni | Msdhoni Birthday |
ஜூலை மாதம் வந்துவிட்டாலே, தோனி பர்த்டே கொண்டாட்டங்களை ரசிகர்கள் தொடங்கிவிடுவார்கள். இந்த ஆண்டும் அதே வழக்கம்தான்! 7 நாட்களுக்கு முன்னரே, கவுண்டவுன் ஆரம்பித்து தோனி பர்த்டேவுக்காக வெயிட்டிங்கில் உள்ளனர் அவரது ரசிகர்கள். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு அறிவித்ததற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால், இந்த முறை தோனியின் பர்த்டே கொண்டாட்டங்கள் உணர்ச்சிபூர்வமாகவும், சற்று வித்தியாசமாகவும்தான் இருக்கும் என்று தெரிகின்றது. இந்த ஆண்டு, தோனி தனது 40வது பிறந்தநாளை கொண்டாட இருப்பதால், #MSD40 ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகின்றது. தோனியின் பர்த்டேவுக்காக ட்விட்டரே அதகளமாகும் இந்த நேரத்தில், தோனியின் ட்விட்டர் அக்கவுண்டை கொஞ்சம் அலசி பார்த்தோம். சமூக வலைதள பக்கங்களில் அவ்வளவு ஆக்டீவாக இல்லாத தோனி அவ்வப்போது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவார். ஆனால், பழைய தோனி ட்விட்டரில் செம ஆக்டீவ்! கடந்த 2010-ம் ஆண்டு முதல் ட்விட்டரில் இயங்கி வரும் தோனியின் ஹைலைட்ஸ் ட்வீட்களை பார்ப்போம்! 2010-ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி ட்விட்டரில் எண்ட்ரி கொடுத்த தோனி, “feels good to be connected” என பதிவிட்டு தனது ட்வீட் அக்கவுண்டை தொடங்கி இருக்கிறார். 2010-ல் ட்விட்டரில் கால் பதித்த சில நாட்களுக்கு பயங்கர ஆக்டீவாக இருந்த தல தோனிக்கே, ஒரு முறை இன்டெர்நெட் கனெக்ஷன் சரியாக இருந்திருக்கவில்லை. தென் ஆப்ரிக்காவில் உள்ள ஷாம்வாரி வன உயிரியல் பூங்காவுக்கு சென்றுள்ள தோனி, நிறைய புகைப்படங்களை எடுத்ததாகவும், இண்டெர்நெட் கனெக்ஷன் சீரானவுடன் புகைப்படங்களை அப்லோட் செய்வதாகவும் ட்வீட் செய்திருக்கிறார். இதென்னடா தோனிக்கு வந்த சோதனை?! மொமெண்ட்தான் விளையாட்டு வீரர்கள் பொதுவாக காலை நேரத்தில்தான் பயிற்சி மேற்கொள்வார்கள். அப்படி ஒரு நாள் காலை நேரத்தில் வலைப்பயிற்சி மேற்கொள்வதை சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ள தோனி, “காலையில் வலைப்பயிற்சி செய்வதால் இருக்கும் ஒரு நல்ல விஷயம், நல்ல பிரேக்ஃபாஸ்ட் கிடைக்கும்” என அல்டிமேட் செய்துள்ளார். இன்னொரு பதிவில், “நானும் என் மனைவியும் ஒரே அறையில் இருந்துகொண்டு ட்விட்டரில் பேசிக் கொண்டு இருக்கிறோம்” என ட்வீட் செய்து அப்பவே மெசேஜிங் ஆப்கள் நமது நேரத்தை கட்டுப்படுத்தி வருவதை கணித்துள்ளார். அடடே… அன்றே சொன்னார் தோனி! அனைவரையும் போல, தோனிக்கும் அவரது ஸ்கூல் டேஸ்தான் ஃபேவரைட்டாக இருந்துள்ளது. ஸ்கூல் படிக்கும்போது கிரிக்கெட்டுக்கென தனி வகுப்பு இல்லை என்பதை நினைத்து வருத்தப்பட்டிருக்கார் தோனி! ஐபிஎல் தொடரையும், சென்னை மக்களையும் ரொம்ப லவ் செய்யும் தல தோனி, சர் ரவீந்திர ஜடேஜாவை பற்றி சில பல ட்வீட்களை பதிவிட்டுள்ளார். ”கேட்ச் பிடிக்க ஜடேஜா ஓட வேண்டிய தேவையில்லை, பந்தே ஜடேஜாவின் கைகளில் வந்து தவழும்” என நக்கல் செய்துள்ளார். இந்த ட்வீட் ஃபன்னியாக இருந்தாலும் ஜடேஜா, ஒன் ஆஃப் தி பெஸ்ட் ஃபீல்டர் என்பதைதான் தோனி வழிமொழிகிறார்! மற்றொரு சுவாரஸ்யமான ட்வீட்டில், 2013 ஐபிஎல் தொடருக்காக சென்னை வந்திருந்த தோனி, “சென்னை மக்கள் என்னை ’தல’ என அழைப்பது ரொம்ப பிடித்திருக்கிறது” என யெல்லவ் ஆர்மிக்கு ஹார்ட்ஸ்களை அள்ளி தெளித்துள்ளார். யெல்லவ் ஹார்ட்ஸ் எல்லாம் ரெட்டான நேரமிது! மற்றொரு க்யூட் ட்வீட்டில், கை குழந்தையாக இருந்த சைவா தோனி முதல் முறையாக மைதானத்திற்கு வந்த செம்ம க்யூட் புகைப்படத்தை பதிவிட்டு ஷேர் செய்திருக்கிறார். தோனியும், சைவாவும் இருந்தாலே கியூட் மேக்ஸ்தான்! இது மட்டுமல்லாது, தனது முதல் பைக், இன்ஸ்டாகிராமில் தனது முதல் பதிவு, பிராண்டு ‘7’ அறிமுகம் போன்ற சில விஷயங்களையும் ட்விட்டரில் தோனி பதிவு செய்திருக்கிறார். விண்டேஜ் பைக்குகளும், செல்லப்பிராணிகளும், அவரது சொந்த ஊரான ராஞ்சியும் அவருக்கு மிகவும் பிடித்த விஷயங்கள் என்பதை அவரது ட்வீட்கள் நமக்கு சொல்லும் கதை. ஆனால், 2018-ம் ஆண்டிற்கு பிறகு பெரிதாக ட்விட்டரில் ஆக்டீவாக இல்லாத தோனி அவ்வப்போது சில பதிவுகளை மட்டும் பதிவிட்டு வருகிறார். 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ம் தேதி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு அறிவித்ததற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்த ட்வீட்டுக்கு நன்றி தெரிவித்து ரீட்வீட் செய்திருந்தார் தோனி. தோனியின் ட்விட்டர் அக்கவுண்டை கிட்டத்தட்ட 8 மில்லியன் மக்கள் பின் தொடர்கின்றனர். தோனியோ, சச்சின், விராட், ஷாரூக், சல்மான் கான்,மோடி உள்ளிட்ட முக்கியமான செல்ப்ரிட்டிகள் என மொத்தம் 33 பேரை மட்டுமே பின் தொடர்கிறார். ஆன்லைனோ, ஆஃப்லைனோ, நேரடியாக ட்விட்டரில் அவர் பதிவு செய்யாவிட்டாலும், தோனி பற்றிய ஏதாவது செய்தியோ, புகைப்படமோ வெளியானால், அவை நிச்சயமாக வைரல் ரகம்தான்! அட்வான்ஸ் ஹாப்பி பர்த்டே தல!