Trichy Athlete Dhanalakshmi : இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் ஓடும் தமிழச்சி - யார் இந்த தனலட்சுமி?
டோக்கியோ தடகள போட்டிக்கு தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று வீராங்கனைகள் 400 மீட்டர் கலப்பு ரிலே பிரிவில் பங்கேற்க தகுதிப் பெற்றுள்ளனர். அவர்களில் தனலட்சுமி யார்? எப்படி தடகளத்திற்குள் வந்தார்? திருச்சிக்கு அருகே உள்ள குண்டூர் கிராமத்தில் பிறந்தவர் தனலட்சமி. இவருடைய சிறு வயதிலேயே தந்தையை இவர் இழந்தார். இதனால் இவருடைய தாய் கூலி வேலைகள் செய்து தனலட்சுமி மற்றும் அவருடைய தங்கைகளையும் வளர்த்துள்ளார். வறுமையில் வாடிய தனலட்சுமி முன்னேற்றத்திற்கு விளையாட்டையே ஒரு கருவியாக பார்த்தார். இவர் தன்னுடைய கல்லூரி படிப்பை மங்களூரில் உள்ள அலுவா கல்லூரியில் படித்தார். அங்கு இவர் விளையாட்டு வீராங்கனை என்பதால் உதவி தொகை கிடைத்துள்ளது. இதை வைத்து தனது குடும்பத்திற்கு செலவு செய்துள்ளார்.





















