மேலும் அறிய

Nitish Kumar Reddy: "இவன்லாம் தேற மாட்டான்” GODFATHER-ஆக நின்ற தந்தை! நிதிஷ் குமார் ஜெயித்த கதை!

கிரிக்கெட்டை விளையாட்டாக மட்டுமே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒரு நாள் தன்னுடைய தந்தை அழுது கொண்டிருந்ததை பார்த்தான். சரி, ஏன் தந்தை அழுகிறார் என்று கேட்டால் கையில் அடுத்த வேலை சாப்பாட்டிற்கு கூட காசு இல்லை என்று புரிந்தது. அப்போதுதான் இது வெறும் விளையாட்டல்ல இது தான் வாழ்க்கை என்று நினைத்து கிரிக்கெட்டை கெட்டியாக பிடித்துக்கொண்டான். அந்த சிறுவன் தான் இன்று தோல்வியின் விழும்பில் தத்தளித்துக்கொண்டிருந்த இந்தியாவை காப்பாற்றி MCG மைதானத்தில் முதல் செஞ்சூரியின் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறார் நிதிஷ் குமார் ரெட்டி.

ஆந்திர பிரதேசத்தில் உள்ள விசாகபட்டிணத்தில் 2003 ஆம் ஆண்டு  மே 26ல் பிறந்தவர் நிதிஷ் குமார் ரெட்டி.  நிதிஷின் சிறு வயதிலேயே கிரிக்கெட்டின் மீதி அதீத ஆர்வம் இருந்தது.  பிளாஸ்டிக் பேட்டுடன் கிரிக்கெட் விளையாட தொடங்கிய அவர் தன்னுடை தந்தையின் உதவியுடன் மூத்த வீரர்கள் கிரிக்கெட் ஆடுவதை பார்க்கச் செல்வாராம். வருடங்கள் கடந்த நிதிஷின் கிரிக்கெட் திறன் அதிகரிக்க ஆரம்பித்தது. அவருடைய தந்தையும் அதற்கு முழு ஒத்துழைப்பு தந்திருக்கிறார். எந்த அளவிற்கு என்றால் அவருடைய தந்தை தன்னுடைய வேலையவே ராஜினாமா செய்யும் அளவிற்கு. 

ஆம், தன் மகனுக்காக வேலையை விட்டு அவரின் கிரிக்கெட் பயணத்திற்கு பக்க பலமாக இருந்திருக்கிறார். மகளை நீ பார்த்த்துக்கொள் நிதிஷ் குமாரை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறார் நிதிஷ் குமாரின் தந்தை . உறவினர்கள் எல்லாம் மகனுக்காக வேலையை விடுகிறாயா உன் மகனால் வெற்றி பெற முடியாது என்று சொல்ல தன் மகனை முழுமையாக நம்பி இருக்கிறார் முத்தியாலா ரெட்டி. ஆந்திர கிரிக்கெட் அகாடமியில் நிதிஷ் குமாரை பயிற்சிக்கு சேர்த்து விட அங்கு அவருக்கு பயிற்சியளித்தவர்கள் இவருக்கு கிரிக்கெட் வேண்டாம் ஒழுங்க படிப்பில் கவனம் செலுத்த சொல்லுங்கள் என்று அறிவுரை கூற, தன் மகன் மீது வைத்த நம்பிக்கையால் அந்த அகாடமியில் பயிற்சி அளிக்கவில்லை என்றால் என்ன வேறு ஒரு அகாடமியில் சேர்த்து விடலாம் என்று முடிவு செய்தார். அதன் படி புதிதாக ஒரு அகடமியில் சேர்த்து விட்டு அங்கு சிறந்த பந்து வீச்சளர்களிடன் தன் மகனை பயிற்சி பெற வைத்தார். தனக்காக தன் தந்தை வேலையை கூட விட்டு விட்டு தன்னுடன் நிற்பதால் எப்படியும் கிரிக்கெட்டில் வெற்றி பெற வேண்டும் என்று தீவிரமான பயிற்சியில் நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார்.

இந்த சமயத்தில் தான் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த  நிதிஷ் குமார் ரெட்டிக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.  சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 லட்சம் ரூபாய்க்கு அவரை ஏலத்தில் எடுத்தது. அங்கு தன் திறமையை நிருபித்தார். இந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் அவரை 6 கோடிக்கு SRH தக்கவைத்தது. ஆனால் 15 கோடிவரை அவரை ஏலத்தில் எடுக்க எதிரணிகள் போட்டி போட வேறு அணிக்கு செல்லதா நிதிஷின் அவருடைய தந்தை நீ ஏன் வேறு அணியில் விளையாடக்கூடது என்று கேட்க எனக்கு வாழ்க்கை கொடுத்தது சன் ரைசர்ஸ் அணி தான் அதில் நான் விளையாடுவது தான் அந்த அணிக்கு நான் செய்யும் நன்றிக்கடனாக இருக்கும் என்று சொன்னார்.

2018 ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியின் போது விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் ஒன்றாக வந்திருப்பார்கள் அப்போது அங்கு இருந்த நிதிஷ் குமார் ரெட்டி ஒரு ஓரமாக நின்று போட்டோ எடுத்திருப்பார். இப்படி ஓரமாக நின்று போட்டி எடுத்த நிதிஷ் குமார் தான் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலியுடன் இணைந்து விளையாடி இருப்பார்.  

இந்த நிலையில் தான் தன்னுடைய கனவு மட்டும் இன்றி தன்னுடைய தந்தையின் கனவையும்  நிறைவேற்றி இருக்கிறார் நிதிஷ் குமார் ரெட்டி.  MCG மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்டில் 8வது வீரராக களம் இறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி இந்திய அணிக்கு ஃபாலோ ஆன் கொடுக்கலாம் என்ற ஆஸ்திரேலியாவின் கனவை தவிடு பொடியாக்கி இருக்கிறார்.  176 பந்துகளில் 105 ரன்களை விளாசி தன்னுடைய சர்வதேச சதத்தை பதிவு செய்து அனைவரையும் பெருமை அடைய செய்திருக்கிறார் நிதிஷ் குமார்.

கிரிக்கெட் வீடியோக்கள்

Nitish Kumar Reddy:
Nitish Kumar Reddy: "இவன்லாம் தேற மாட்டான்” GODFATHER-ஆக நின்ற தந்தை! நிதிஷ் குமார் ஜெயித்த கதை!
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

 ‘போராட்டம்லாம் இல்லை; புது ரூட் எடுப்போம்’ - அண்ணா பல்கலை விவகாரத்தில் டைம் கேட்கும் விஜய்! 
 ‘போராட்டம்லாம் இல்லை; புது ரூட் எடுப்போம்’ - அண்ணா பல்கலை விவகாரத்தில் டைம் கேட்கும் விஜய்! 
இனி மாதம் ரூ.1000 - புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்! யாருக்கெல்லாம்?
இனி மாதம் ரூ.1000 - புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்! யாருக்கெல்லாம்?
சில்வர் ஜுப்ளியில் திருவள்ளுவர் சிலை: கண்ணாடி இழை பாலம் டூ தோரணவாயில் அடிக்கல் வரை! அரசின் அசத்தல் ஏற்பாடு!
சில்வர் ஜுப்ளியில் திருவள்ளுவர் சிலை: கண்ணாடி இழை பாலம் டூ தோரணவாயில் அடிக்கல் வரை! அரசின் அசத்தல் ஏற்பாடு!
TVK Vijay: தங்கைகளுக்கு தவெக தலைவர் விஜய் கைப்பட கடிதம் - ”திமுகவால் எந்த பயனும் இல்லை” பாலியல் வன்கொடுமைகள்
TVK Vijay: தங்கைகளுக்கு தவெக தலைவர் விஜய் கைப்பட கடிதம் - ”திமுகவால் எந்த பயனும் இல்லை” பாலியல் வன்கொடுமைகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Varun Kumar And Vandita Pandey | கெத்து காட்டும் IPS COUPLE ஒரே நாளில் PROMOTION வருண்குமார் - வந்திதா பாண்டேNitish Kumar Reddy: Mugundhan PMK Profile: அக்கா மகனுக்கு பொறுப்பு! எதிர்க்கும் அன்புமணி.. யார் இந்த முகுந்தன்?Mukundan PMK : ’’தாத்தா மாமா அடிச்சுக்காதீங்கஎனக்கு பதவியே வேண்டாம்’’முகுந்தன் எடுத்த முக்கிய முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 ‘போராட்டம்லாம் இல்லை; புது ரூட் எடுப்போம்’ - அண்ணா பல்கலை விவகாரத்தில் டைம் கேட்கும் விஜய்! 
 ‘போராட்டம்லாம் இல்லை; புது ரூட் எடுப்போம்’ - அண்ணா பல்கலை விவகாரத்தில் டைம் கேட்கும் விஜய்! 
இனி மாதம் ரூ.1000 - புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்! யாருக்கெல்லாம்?
இனி மாதம் ரூ.1000 - புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்! யாருக்கெல்லாம்?
சில்வர் ஜுப்ளியில் திருவள்ளுவர் சிலை: கண்ணாடி இழை பாலம் டூ தோரணவாயில் அடிக்கல் வரை! அரசின் அசத்தல் ஏற்பாடு!
சில்வர் ஜுப்ளியில் திருவள்ளுவர் சிலை: கண்ணாடி இழை பாலம் டூ தோரணவாயில் அடிக்கல் வரை! அரசின் அசத்தல் ஏற்பாடு!
TVK Vijay: தங்கைகளுக்கு தவெக தலைவர் விஜய் கைப்பட கடிதம் - ”திமுகவால் எந்த பயனும் இல்லை” பாலியல் வன்கொடுமைகள்
TVK Vijay: தங்கைகளுக்கு தவெக தலைவர் விஜய் கைப்பட கடிதம் - ”திமுகவால் எந்த பயனும் இல்லை” பாலியல் வன்கொடுமைகள்
சாப்பாடு பரிமாற தாமதம்; கோபத்தில் மணமகன் எடுத்த முடிவு! ஷாக்கான மணப்பெண்! 
சாப்பாடு பரிமாற தாமதம்; கோபத்தில் மணமகன் எடுத்த முடிவு! ஷாக்கான மணப்பெண்! 
IND VS AUS BGT Test: கடைசி நாளில் சரித்திரம் படைக்குமா இந்தியா? ஆஸி., 234 ரன்களுக்கு ஆல்-அவுட் - ரோகித் படையின் இலக்கு?
IND VS AUS BGT Test: கடைசி நாளில் சரித்திரம் படைக்குமா இந்தியா? ஆஸி., 234 ரன்களுக்கு ஆல்-அவுட் - ரோகித் படையின் இலக்கு?
Year Ender 2024: ஊர் சுற்றலாமா..! அட்வென்ச்சர் பைக்னா இப்படி இருக்கனும், 2024ல் அறிமுகமான டாப் 5 மாடல்கள்
Year Ender 2024: ஊர் சுற்றலாமா..! அட்வென்ச்சர் பைக்னா இப்படி இருக்கனும், 2024ல் அறிமுகமான டாப் 5 மாடல்கள்
US president: பேரதிர்ச்சி..! நோபல் பரிசு வென்ற அமெரிக்காவின் முன்னாள் அதிபர் காலமானார் - குவியும் இரங்கல்
US president: பேரதிர்ச்சி..! நோபல் பரிசு வென்ற அமெரிக்காவின் முன்னாள் அதிபர் காலமானார் - குவியும் இரங்கல்
Embed widget