புயல் இப்படி தான் இருக்குமா? சூறாவளியை வீடியோ எடுத்த அமெரிக்கா ராணுவம்..! | Melissa Cyclone
கரீபியன் தீவு நாடான ஜமைக்காவை புரட்டிப்போட்ட மெலிசா சூறாவளி புயலின் கண் பகுதிக்குள் அமெரிக்க விமானப்படையினர் பறந்து சென்று படம் பிடித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜமைக்காவில் 174 ஆண்டுகளில் இல்லாத இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் சூறாவளியாக பார்க்கப்படும் 5வது வகை புயலான மெலிசா புயல் கரையைக் கடந்தது. இந்த புயல் கரையை கடந்த போது மணிக்கு அதிகபட்சமாக 185 மைல் (295 கிமீ/மணி) வேகத்தில் காற்று வீசியதாக அமெரிக்க தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் காரணமாக பலத்த மழை மற்றும் சீற்றமான கடல் அலைகள் காரணமாக அப்பகுதி முழுவதும் வீடுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது.
புயல் எச்சரிக்கை மையத்திற்குத் தகவல்களை சேகரிப்பதற்காக, அமெரிக்க விமானப்படையின் ரிசர்வ் குழுவான "சூறாவளி வேட்டைக்காரர்கள்",மெலிசா' புயலின் கண் பகுதிக்குள் பறந்து சென்று படம் பிடித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.





















