Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
தங்கம் விலை கடந்த ஒரு மாதமாகவே ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போல இருந்து வருகிறது. ஜனவரி 2026-ல் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட தங்கம், பிப்ரவரி தொடக்கத்தில் சில சரிவுகளைக் கண்டு, மீண்டும் அதிரடியாக விலை ஏறத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வந்த நிலையில் திடீரென தங்கம் விலை ஏற காரணம் என்ன? இனிமேல் குறைய வாய்ப்புள்ளதா? எனப் பார்க்கலாம்
ஜனவரி இறுதி வாரத்தில் ஒரு சவரன் தங்கம் சுமார் 1,34,000 வரை உயர்ந்து உலகையே அதிர வைத்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான இறக்குமதிப் பொருட்களுக்கு 50% வரை வரி விதிக்கப்போவதாக அறிவித்தது உலகச் சந்தையில் பதற்றத்தை ஏற்படுத்தியது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது 1 டாலர் 92-ஐ தாண்டியது. டாலர் வலுவிழந்தால், முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கித் திரும்புவது வழக்கம் தான்.
இந்தநிலையில் பிப்ரவரி 1 பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி உயர்த்தப்படலாம் என்ற அச்சத்தில் பலரும் முன்கூட்டியே தங்கத்தை வாங்கிக் குவித்தனர். ஈரான் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாகப் பெரிய முதலீட்டாளர்கள் தங்கம் தான் பாதுகாப்பானது என முதலீடு செய்ததும் தங்கம் விலை ஏற காரணம் என சொல்லப்படுகிறது.
ஏறிய வேகத்திலேயே கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு சுமார் 22,000 வரை குறைந்ததைக் கண்டு மக்கள் ஆச்சரியமடைந்தனர். அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கிக்கு கெவின் வார்ஷ் என்பவரை புதிய தலைவராக ட்ரம்ப் அறிவித்தார். இவர் வட்டி விகிதங்களைக் குறைக்கக் கூடியவர் என சொல்லப்பட்டதால், முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்று லாபம் பார்க்கத் தொடங்கினர். அதிகப்படியான லாப நோக்கில் ஒரே நேரத்தில் பலர் தங்கத்தை விற்றதால், சந்தையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டது. பட்ஜெட்டில் தங்க இறக்குமதி வரி தொடர்பாக வெளியான செய்திகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கட்டுப்பாடுகள் விலையைக் குறைக்க உதவியது.
தற்போது நிபுணர்களின் கருத்துப்படி, தங்கம் விலையில் இனி ஒரு நிரந்தரமான பெரும் சரிவு என்பது கடினம் தான் என சொல்கின்றனர். பட்ஜெட் தாக்கங்கள் மற்றும் உலக அரசியல் சூழலால் சிறு சரிவுகள் இருக்கலாம் எனவும் சவரன் 1,00,000 - 1,15,000 வரை வர வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















