Tongue Splitting: நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!
ட்ரெண்டிங்கிற்காக நாக்கை பிளவுபடுத்தும் செய்முறை செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்து அதிரடி காட்டியுள்ளனர்.
திருச்சி அந்தோணியார் கோயில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ஹரிஹரன். கடந்த சில வருடங்களுக்கு முன்பு டாட்டுவின் மீது உள்ள மோகத்தால் மும்பைக்கு சென்று அங்கு டாட்டூ கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் ஹரிஹரன் அவரது நாக்கை பிளவுபடுத்தும் செய்முறை செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அண்ணா சாலையில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லும் பகுதியில் எஸ்பிஐ வங்கி எதிர்ப்புறம் ஏலியன் எமோ டாட்டூ கடையை நடத்தி வருகிறார். உடலில் வித்தியாசமாக டாட்டு வரைவதை செய்து வந்த அவர் ட்ரெண்டிங்கிற்காக பாம்பு, ஓனான் உள்ளிட்ட விலங்குகளுக்கு இருப்பது போல் மனிதர்களுக்கும் நாக்கை பிளவுபடுத்தும் செய் முறையை செய்வதாக கூறி அதை அவரே வீடியோ எடுத்து விளம்பரம் செய்து வந்துள்ளார்.
ஹரிகரன் அவரது பிளவுபடுத்திய நாக்கை அடிக்கடி வீடியோ எடுத்து அவருடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார். அதனைப் பார்த்த சிலர் அவரிடம் சென்று தங்களுக்கான நாக்கையும் பிளவுபடுத்திக் கொண்டு வந்துள்ளனர். அந்த வீடியோவையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார்.
இவது இன்ஸ்டாகிராமை திருச்சி மாநகர போலீசார் கண்காணித்து வந்த நிலையில் ஹரிஹரன் இன்ஸ்டாகிராமையும் ஆய்வு செய்துள்ளனர்.
திருச்சி மாநகர் பகுதியில் நாக்கை பிளவுபடுத்தும் முறை செய்து வருவதை அறிந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டதன் அடிப்படையில் திருச்சி கோட்டை போலீசார் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கடைக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அந்த கடையில் உரிய அனுமதியில்லாமல் நாக்கை பிளவுபடுத்தும் முறை செய்து வந்தது தெரிய வந்ததை அடுத்து கடையின் உரிமையாளரான ஹரிஹரன் மற்றும் அந்த கடையில் பணியாற்றி வந்த ஜெயராமன் ஆகிய இரண்டு இளைஞர்களையும் கைது செய்து விசாரணை செய்து வந்தனர். மருத்துவர்கள் போன்று உடை அணிந்து நாக்கை பிளவு படுத்தி தைப்பது போன்ற வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார் மேலும் உரிய அனுமதி இல்லாமல் கடையை நடத்தி வந்ததால் கிடைக்கும் சீல் வைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ஹரிஹரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மும்பையில் ஒரு டாட்டூ வரையும் இடத்தில் பணியாற்றியதாகவும் அங்கு இந்த செயல்முறையை கற்றுக் கொண்டுள்ளதாகும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கோட்டை போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.