”MUSLIM மட்டுமா ஹிஜாப் போடுறோம்?வடமாநில பெண்களும் போடுறாங்க”பெண் கவுன்சிலர் பதிலடி
நாங்க மட்டும் தான் ஹிஜாப் போடுறோமா, ஏன் வட மாநில பெண்கள் தலையில துப்பட்டா போடுறது இல்லையா என பதிலடி கொடுத்துள்ளார் கவுன்சிலர் சபா ஹரூன் கான்.
சமீபத்தில் மகாராஷ்டிராவில் மாநகராட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மும்பையின் வெர்சோவா பகுதியில் போட்டியிட்ட சபா ஹரூன் கான் 3,768 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா எம் எல் ஏ ஹரூன் கானின் மகள். இவர் ஹிஜாப் அணிவது தொடர்பான எதிர் தரப்பினர் விமர்சனங்களை வைத்தனர்.
இதுதொடர்பாக பேசிய சபா ஹரூன் கான் அது எங்களுடைய கௌரவம் என பதிலடி கொடுத்துள்ளார்.
ஹிஜாப் எங்களுடைய பெருமை மற்றும் கௌரவம்
வட மாநில பெண்களும் தலையில் துப்பட்டா போட்டு தானே இருக்கிறார்கள்
சிலர் முகத்தையும் பாதி மூடியிருப்பார்கள்
அவர்களிடம் இப்படி கேட்பீர்களா?
இது எங்களுடைய அடையாளம்
கடவுளுக்கு கொடுக்கும் மரியாதை
முஸ்லீம் என்பதை மக்களுக்கு காட்டுகிறோம்
நாங்கள் மட்டும் இதை அணிவதில்லை
வேறு சிலரும் தங்கள் தலையில் துப்பட்டாவை அணிந்துகொள்கிறார்கள்
இதுதொடர்பாக பேசிய அவரது தந்தை ஹரூன் கான், ”எனது மகள் எப்போதுமே ஹிஜாப்புடன் தான் இருக்கிறார். தேர்தலின் போதும் அப்படிதான் இருந்தார். மக்களுக்கும் அதில் எந்த பிரச்னையும் இல்லாததால் தான் வாக்களித்தார்கள். ஹிஜாப் தொடர்பான பிரச்னைகளை எழுப்பக் கூடாது” என தெரிவித்துள்ளார்.





















