மேலும் அறிய

விருதுநகரில் சிறுதானிய புரட்சி.. ஏற்றுமதி வாய்ப்புகள், மதிப்புக்கூட்டல் & அரசின் சலுகைகள் - முழு விவரம் !

ஊட்டச்சத்து  காரணமாக, சந்தைகளில் இவற்றின் தேவை பெரிதும் அதிகரித்து வருகின்றது. சிறுதானிய உற்பத்தி மற்றும் மதிப்புக் கூட்டுதலில் முன்னோடி மாவட்டமாக விருதுநகர் மாவட்டம் திகழ்கிறது.

விருதுநகர் மாவட்டம் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான சிறுதானியங்கள் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த பணிமனை கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தொடங்கி வைத்தார்.

சிறுதானியங்கள் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல்

விருதுநகர் ஜெய் ரெசிடென்சியில் இன்று(24.02.2026) சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி,  விருதுநகர் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, சேலம் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரிய பயிற்சி மையம் சார்பில் நடைபெற்ற சிறுதானிய இயக்கம் - விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான சிறுதானியங்கள் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த பணிமனை கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, குத்துவிளக்குயேற்றி தொடங்கி வைத்தார்.

காலநிலை மாற்றத்திற்கேற்ற பயிராக உலகளவில் அங்கீகரிப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தாவது...,” சிறுதானியங்கள், காலநிலை மாற்றத்திற்கேற்ற பயிராக உலகளவில் அங்கீகரிப்பட்டுள்ளது. இச்சிறுதானியங்கள் இரசாயன உரங்கள் இன்றி, இயற்கை முறையில் விளைவிக்கப்படுவதால் ஏற்றுமதிக்கு உகந்த பயராகவும் உள்ளது. இந்தியாவிலிருந்து சிறுதானியங்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதிக ஊட்டச்சத்து  காரணமாக, சந்தைகளில் இவற்றின் தேவை பெரிதும் அதிகரித்து வருகின்றது. சிறுதானிய உற்பத்தி மற்றும் மதிப்புக் கூட்டுதலில் முன்னோடி மாவட்டமாக விருதுநகர் மாவட்டம் திகழ்கிறது.

ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்படவுள்ளன.

விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான சிறுதானியங்கள் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த கருத்தரங்கு இன்று நடைபெறுகிறது. சிறுதானிய பயிரிடும் பரப்பளவை அதிகரித்தல், மதிப்புக் கூட்டு மற்றும் தொழில் முனைவோர் உருவாக்கம், விற்பனை மற்றும் சந்தை இணைப்பு ஆகியவை இந்த கருத்தரங்கின் நோக்கமாகும். மேலும், விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு, செயல்விளக்கம் விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது. மேலும், அரசின் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்தும், தொழில்நுட்பங்கள், இயற்கை முறை உற்பத்தி சான்றிதழ், ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்படவுள்ளன. எனவே, விவசாயிகள், வணிகர்கள்  வணிகம் செய்வது, மதிப்பிக்கூட்டல், வங்கி கடனுதவிகள், ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளிட்டவைகளை நன்கு அறிந்து கொண்டு பயன் பெற  வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

நிகழ்வில் பங்கேற்பு

இந்நிகழ்ச்சியில் கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் நிலைய பண்ணை மேலாளர் ஜீவா அவர்கள் காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப சிறு தானியங்கள் ரகங்கள் தேர்வு, உற்பத்தி தொழில்நுட்பங்கள், பயிர் மேலாண்மை, அறுவடை மற்றும் அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், கோவிலாங்குளம் வேளாண்மை அறிவியல் நிலைய உணவு அறிவியல் துறை இணை பேராசிரியர் டாக்டர்.நல்லகுறும்பன் சிறுதானியங்களின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் ஆரோக்கிய நன்மைகள் குறித்தும், மதுரை சமுதாய அறிவியல் கல்லூரி உணவு அறிவியல் துறை பேராசிரியர் டாக்டர் கலைச்செல்வன் அவர்கள் சிறுதானியங்களுக்கான பதப்படுத்துதல் தொழில்நுட்பம் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்தும், விருதுநகர் மாவட்ட திட்ட மேலாளர் (தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்) பிலிப் மில்டன் அவர்கள் சிறுதானியங்களுக்கான வணிகம் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள், பேக்கிங், லேபிளின் தொழில்நுட்பங்கள், FSSAI உரிமம் பெறுதல் மற்றும் ஆன்லைன் யுக்திகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

 

தலைப்பு செய்திகள்

அன்புக்கரம் நீட்ட வயது தடையில்லை.. 82 வயதில் ராணுவத்திற்கு உயில் எழுத்திக் கொடுத்த நபருக்கு குவியும் பாராட்டு !
அன்புக்கரம் நீட்ட வயது தடையில்லை.. 82 வயதில் ராணுவத்திற்கு உயில் எழுத்திக் கொடுத்த நபருக்கு குவியும் பாராட்டு !
தவெக அரசின் 'மாற்றமா' இது? சட்டசபையில் அமைச்சர்கள் குழப்பம், முதல்வர் விஜய் மவுனம்! - ஆர்.பி.உதயகுமார் தாக்கு !
தவெக அரசின் 'மாற்றமா' இது? சட்டசபையில் அமைச்சர்கள் குழப்பம், முதல்வர் விஜய் மவுனம்! - ஆர்.பி.உதயகுமார் தாக்கு !
கரூர் கோவில் நிலங்கள்: பத்திரப்பதிவு தடை நீக்கம் குறித்து உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
கரூர் கோவில் நிலங்கள்: பத்திரப்பதிவு தடை நீக்கம் குறித்து உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
விருதுநகர்: பட்டாசு ஆலை, நீர்நிலை அருகே கல் குவாரி - உயர் நீதிமன்றம் அதிரடி!
விருதுநகர்: பட்டாசு ஆலை, நீர்நிலை அருகே கல் குவாரி - உயர் நீதிமன்றம் அதிரடி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
Embed widget