”தவெகவில் இருந்ததே WASTE” திமுகவிற்கு தாவிய வைஷ்ணவி விஜய்க்கு GOOD BYE | Vaishnavi
சமீபத்தில் தவெகவில் இருந்து வெளியேறிய வைஷ்ணவி செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்து தவெகவும் பாஜகவும் ஒண்ணு என தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த வைஷ்ணவி விஜய் கட்சி தொடங்கிய பிறகு தவெகவில் தன்னை இணைத்து கொண்டார். அந்தப் பகுதியில் தவெக சார்பில் நலத்திட்டங்களை செய்து வந்தார். அதேபோல் சமூக வலைதளங்களிலும் தவெகவுக்கு ஆதரவாக ஆக்டிவ்வாக செயல்பட்டு வந்தார்.
இந்தநிலையில் தவெகவில் இருந்து விலகுவதாக பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் அதில் மனதை கல்லாக்கிக் கொண்டு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். கடந்த மூன்று மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். பொதுக்குழு கூட்டம், பூத் கமிட்டி மாநாடு, செயற்குழு கூட்டம் என எதற்கும் அனுமதி கொடுக்காமல் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டேன். உங்களுக்கு லைக் அதிகமாக வருகிறது எங்களுக்கு அது எரிச்சலைத் தருகிறது என வெளிப்படையாகவே மிரட்டியது என தொடர்ந்து பல இடங்களுக்கு, கூட்டத்திற்கு நிராகரிக்கப்பட்டுக் கொண்டே இருந்தேன். ஏன் என்னை நிராகரிக்கிறீர்கள்,நான் என்ன தவறு செய்தேன் என கண்ணீர் மல்க கேட்டபோது எனக்கு கிடைத்த பதில் நீ கட்சி ஆரம்பித்த பிறகு தானே வந்தாய் என்ன அவசரம் போ.. என்று சொல்லி நிராகரித்தார்கள்.
ஒரு பெண் சமூக பிரச்சினையை கையில் எடுத்து போராட வீதிக்கு வந்தால் நீயெல்லாம் ஒரு பொண்ணா? உனக்கெல்லாம் எதுக்கு அரசியல், ஒழுங்கா வீட்டுகுள்ளேயே இரு உனக்கு என்ன தெரியும் அரசியலை பற்றி என வசம்பு வார்த்தைகளால் நசுக்கப்பட்டேன். என்னுடைய மக்கள் பணிக்கு ஒரு சிலர் முற்றுப் புள்ளி வைக்க நினைக்கிறார்கள்.அது ஒரு போதும் நடக்காது மக்களுக்கான சேவையை எந்த தளத்தில் இருந்தாலும் நான் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன். இன்று முதல் நான் என்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து முழுமையாக விடுவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று மாலை கோவையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் வைஷ்ணவி இணைந்தார். அவருடன் மேலும் சில இளைஞர்களும் திமுகவில் இணைந்தனர். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் தவெகவும் பாஜகவும் ஒண்ணு என தெரிவித்துள்ளார்.





















