செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒன் டு ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விழுப்புரம் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் முதல்வரிடம் அடுக்கடுக்கான புகார்களை குவித்த நிலையில் தற்போது மாவட்ட செயலாளர் மாற்றும் அளவில் பூதாகரமாக வெடித்துள்ளது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். கை வசத்தில் இருந்து தவறிய திண்டிவனம் மற்றும் மயிலம் தொகுதியில் மீண்டும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். எஸ்ஐஆர் திருத்தப் பணிகள், பூத் கமிட்டி கூட்டங்களை சுணக்கமின்றி மேற்கொள்ள வேண்டும். தேர்தல் முடியும் வரை அனைவரும் ஒய்வின்றிஉழைக்க வேண்டும் உட்பட பல்வேறு அறிவுறுத்தல்களை நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் முதல்வர் ஸ்டாலினிடம் செஞ்சி மஸ்தான் மீது முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் என அனைவரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.
அதில் முக்கியமாக வரும் சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த பிரச்சினையை கையில் எடுப்பார்கள் எனவும் தற்போது வரை கள்ளச்சாராயம் விற்பனை செய்த மரூர் ராஜா உடன் செஞ்சி மஸ்தான் செயல்பட்டு வருகிறார் என்றும் அரசு ஒப்பந்த பணிகளை அதிமுக நிர்வாகிகளுக்கு மட்டுமே அதிக அளவில் ஒதுக்கீடு செய்து அதிமுகவுடன் பரஸ்பரமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திண்டிவனம் மயிலம் தோல்வியடைந்ததற்கு காரணம் சிவி சண்முத்துடன் மறைமுக தொடர்பில் செஞ்சி மஸ்தான் இருப்பதாக முதல்வரிடம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
இதனை எல்லாம் தனியாக குறிப்பு எடுத்துக் கொண்ட முதல்வர் தற்பொழுது விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருக்கும் செஞ்சி மஸ்தான் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறும் என்கின்ற நோக்கத்தோடு திமுக தலைமை செயல் பட்டு வரும் நிலையில் இது போன்ற உட்கட்சி பூசலால் தொகுதிகள் பறிபோகும் நிலை ஏற்படும் என்பதால் உடனடி நடவடிக்கையின் திமுக தலைமை இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் புதிய மாவட்ட செயலாளராக யாரை தேர்வு செய்யும் முடிவில் திமுக தலைமை அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அதே செஞ்சி பகுதியை சேர்ந்த மாநிலத் தீர்மானக் குழு உறுப்பினர் செஞ்சி சிவாவிற்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த மாற்றம் நிகழும் பட்சத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும் என நிர்வாகிகள் உத்திரவாதத்துடன் தெரிவிக்கின்றனர்.




















