மேலும் அறிய

விருதுநகர் தேர்தல்: பறக்கும் படை அதிரடி.. புகார்களை உடனுக்குடன் கையாள அதிரடி உத்தரவு !

பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். தேர்தல் நியாயமாகவும், தூய்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதில் கண்காணிப்புக் குழுக்களின் பங்கு மிக முக்கியமானது.

விருதுநகர் மாவட்டம் தேர்தல் புகார்களை உடனுக்குடன் கையாளுதல் - பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களுக்கு அறிவுறுத்தல்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை நிலைநாட்டவும்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 -னை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை நிலைநாட்டவும், புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும், பறக்கும் படை (Flying Squads) மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களுக்கான (Static Surveillance Teams) cVIGIL செயலி  தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சியின் வகுப்பில் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்களை எவ்விதத் தாமதமுமின்றி கையாள்வது குறித்து இணை இயக்குநர், மாவட்ட தகவலியல் அலுவலர் வெ.பிரபாகரன் வழிகாட்டுதல்களை வழங்கினார்.

அதன்படி, cVIGIL செயலி புகார்கள்:

பறக்கும் படையினர் தங்களின் கள ஆய்வுகளை உடனுக்குடன் தேர்தல் ஆணையத்தின் ESMS (Election Seizure Management System) என்ற மென்பொருளில் பதிவேற்றம் செய்வது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.பொதுமக்களிடமிருந்து cVIGIL செயலி வழியாக வரும் புகார்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். புகார் பெறப்பட்ட 100 நிமிடங்களுக்குள் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி, அதன் முடிவை செயலியில் பதிவேற்ற வேண்டும்.

● தேர்தல் கட்டுப்பாட்டு அறை (Control Room): மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து பகிரப்படும் தகவல்கள் மற்றும் வாட்ஸ்அப் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

● தொலைபேசி வாயிலாக வரும் புகார்கள்: 1950 போன்ற கட்டணமில்லா எண்கள் மற்றும் இதர தொலைபேசி வாயிலாகப் பெறப்படும் புகார்களின் உண்மைத்தன்மையை விரைந்து ஆய்வு செய்ய வேண்டும்.

குழுக்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்கள்:

1. நேரடி ஆய்வு: புகார் வந்தவுடன் ஜி.பி.எஸ் (GPS) பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் விரைந்து செயல்பட்டு, சம்பவ இடத்திற்கு சென்றடைய வேண்டும்.
2. வீடியோ பதிவு: சோதனையின் போது நடைபெறும் நிகழ்வுகள், பறிமுதல் செய்யப்படும் பணம் அல்லது பொருட்கள் என அனைத்தையும் எவ்வித விடுபடலும் இன்றி வீடியோ பதிவு (Video Graphing) செய்ய வேண்டும்.
3. ஆவணப் பராமரிப்பு: பறிமுதல் செய்யப்படும் பொருட்களுக்கு உரிய படிவங்களை வழங்கி, அவற்றைக் கருவூலத்தில் ஒப்படைக்கும் வரை சட்டப்படியான நடைமுறைகளைத் துல்லியமாகப் பின்பற்ற வேண்டும்.
4. பொதுமக்களுடன் கனிவான அணுகுமுறை: வாகனச் சோதனையின் போது பொதுமக்களுக்கோ, நோயாளிகளுக்கோ அல்லது அத்தியாவசியப் பணிகளுக்குச் செல்வோருக்கோ தேவையற்ற சிரமங்கள் இருக்கக்கூடாது. அதே சமயம் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். தேர்தல் நியாயமாகவும், தூய்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதில் கண்காணிப்புக் குழுக்களின் பங்கு மிக முக்கியமானது.

தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்குப் பணம், மதுபானம், பரிசுப் பொருட்கள்  போன்றவற்றை விநியோகம் செய்வதைத் தடுப்பதில் இக்குழுக்களின் பங்கு குறித்து விரிவாக விளக்கப்பட்டது. வாகனச் சோதனையின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கண்ணியத்துடன் நடந்துகொள்ளவும், அதே சமயம் சோதனையைத் துல்லியமாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் பறக்கும் படை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

தலைப்பு செய்திகள்

பறவைகளின் பசிக்கு பழ மரங்கள்: ரூ.5000 நிதி அளித்த விவசாயி; முதல்வர், ரஜினிக்கு கோரிக்கை!
பறவைகளின் பசிக்கு பழ மரங்கள்: ரூ.5000 நிதி அளித்த விவசாயி; முதல்வர், ரஜினிக்கு கோரிக்கை!
தென் மாவட்ட மருத்துவ கழிவு முறைகேடு: மக்கள் உயிருக்கு ஆபத்து - மருத்துவர்கள் நூதன மனு !
தென் மாவட்ட மருத்துவ கழிவு முறைகேடு: மக்கள் உயிருக்கு ஆபத்து - மருத்துவர்கள் நூதன மனு !
வீரமங்கை வேலு நாச்சியார் அரண்மனை: மதுபானக் கூடமாக மாறியதா? மக்கள் கொந்தளிப்பு!
வீரமங்கை வேலு நாச்சியார் அரண்மனை: மதுபானக் கூடமாக மாறியதா? மக்கள் கொந்தளிப்பு!
Madurai Hc ; கரூர் கூட்ட நெரிசல்: கருணை அரசுப்பணி ரத்து - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Madurai Hc ; கரூர் கூட்ட நெரிசல்: கருணை அரசுப்பணி ரத்து - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
US Iran War: “நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
“நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
Maruti Safest Cars: 5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
Iran Vs Ukraine: இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
Embed widget