மேலும் அறிய

”உனக்கு மீசை இருக்கு.. கேலி, கிண்டல் அடித்த இணையவாசிகளை சம்பவம் செய்த இளம் பெண் - உளவியல் நிபுணர் பாராட்டு !

என்னை hurt பண்ண முயற்சித்தார்கள். நான் அதை வாய்ப்பாக மாற்றினேன். இந்த மனநிலை அரிதானது, ஆனால் கற்றுக்கொள்ளக்கூடியது.

கேலியை தன்னம்பிக்கையாக மாற்றும் கலை - ஒரு உளவியல் பார்வை மனநல ஆலோசகர் ப.ராஜசெளந்தர பாண்டியனின் முழு விளக்கம்.

ஒரு சின்ன சம்பவம், பெரிய பாடம்

சமீபத்தில் ஒரு பெண்ணின் வீடியோ சமூக வலைதளத்தில் கவனத்தை ஈர்த்தது. முகத்தில் சிறியளவு முடி இருந்தது. பெண்களுக்கு இயல்பாகவே இருக்கும் ஒன்று. ஆனால் யாரோ அதை கேலி செய்தார். அந்த பெண் அழவில்லை, ஒதுங்கவில்லை. அதையே வாய்ப்பாக மாற்றி வீடியோ போட்டாள். இது வெறும் தைரியமான செயல் மட்டுமல்ல. உளவியல் ரீதியாக மிக ஆழமான நடவடிக்கை.

Reframing என்றால் என்ன?

Cognitive Reframing என்பது எதிர்மறை சம்பவத்தை வேறொரு கோணத்தில் பார்க்கும் மனநிலை. பெரும்பாலானோர் கேலியை ஒரு அச்சுறுத்தலாக பார்த்து உள்ளே சுருங்கிவிடுகிறோம். ஆனால் அவள் அதை வாய்ப்பாக மாற்றினாள். என்னை hurt பண்ண முயற்சித்தார்கள். நான் அதை வாய்ப்பாக மாற்றினேன். இந்த மனநிலை அரிதானது, ஆனால் கற்றுக்கொள்ளக்கூடியது. நம்மில் பலருக்கும் யாரோ கேலி செய்யும்போது என்ன செய்வது என்று தெரிவதில்லை. அந்த தருணத்தில் நாம் எப்படி சிந்திக்கிறோம் என்பதுதான் நம் மனநிலையை தீர்மானிக்கிறது. ஒரு சின்ன மனமாற்றம் நம் வாழ்க்கையையே வேறுவிதமாக காட்டும்.

 நாம் ஏன் உடைந்துவிடுகிறோம்?

இப்படித்தான் இருக்கணும் என்ற எதிர்பார்ப்பு சமூகத்தில் ஆழமாக பதிந்திருக்கிறது. யாரோ வேறுபட்டால் கேலி வரும். அந்த கேலியை நாம் Personal Attack ஆக எடுக்கிறோம். ஏனென்றால் நம் Self-Identity எளிதில் காயப்படுகிறது. ஆனால் அவளுக்கோ அந்த கேலி தொடவே இல்லை. ஏனென்றால் அவள் தன்னை ஏற்கனவே ஏற்றுக்கொண்டிருந்தாள். அதுதான் Self-Acceptance.  

ஏற்றுக்கொள்ளாத சமூகம் ஒரு உண்மை

கருப்பா இருக்க, உடல் அளவு அதிகம் என்று சாதாரணமாக சொல்கிறோம். இதை வெறும் கேலி என்று நினைக்கிறோம். ஆனால் இது மனதில் ஆழமான காயம் ஏற்படுத்தும். இளைஞர்கள் தங்கள் தோற்றத்தை வெறுக்கிறார்கள், பொது இடங்களுக்கு செல்ல தயங்குகிறார்கள். இது Body Dysmorphia வரை வளரும். அந்த பெண்ணின் செயல் ஒரு தெளிவான செய்தி தருகிறது. என்னை நான் ஏற்றுக்கொள்கிறேன், நீங்கள் என்ன நினைத்தாலும் சரி என்று.

 நாமும் இப்படி இருக்கலாம், எப்படி? Self-Acceptance ஒரு நாளில் வராது. அது தினமும் நம்மை நாமே கவனிக்கும் பயிற்சி.

நான்கு எளிய வழிகள்:  1. எண்ணங்களை கவனியுங்கள். நான் சரியில்லை என்று தோன்றும்போது, அது உண்மையா என்று கேளுங்கள்.  2. ஒப்பீட்டை நிறுத்துங்கள். சமூக ஊடகங்களில் perfect தோற்றங்கள் filter செய்யப்பட்டவை.  3. Reframe செய்யுங்கள். இந்த கேலி என்னை பத்தி சொல்கிறதா, அவரை பத்தி சொல்கிறதா என்று யோசியுங்கள்.  4. உங்கள் பலத்தை கண்டுபிடியுங்கள். உடல் தோற்றம் மட்டுமே உங்கள் அடையாளமல்ல. உங்கள் எண்ணம், உங்கள் செயல்,  கேலி வந்தால் உடைந்துவிட வேண்டியதில்லை. அதை ஒரு உந்துசக்தியாக மாற்றலாம். சமூகம் ஏற்றுக்கொள்ளும் கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும். மற்றவரை கேலி செய்வதற்கு முன் ஒரு கணம் யோசியுங்கள். அந்த வார்த்தை யாரையாவது உள்ளே உடைக்கலாம். நாம் நம்மை நாமே ஏற்றுக்கொண்டால் எந்த கேலியும் நம்மை தொட முடியாது. அதுதான் உண்மையான மன வலிமை.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

தலைப்பு செய்திகள்

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: நவம்பர் 4 முதல் தமிழகத்தில் சேவை முடங்கும் அபாயம்!
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: நவம்பர் 4 முதல் தமிழகத்தில் சேவை முடங்கும் அபாயம்!
சிவகங்கை செவிலியர் காலிப்பணியிடம்: சான்றிதழ்களை சமர்ப்பிக்க நாளை அக்டோபர் 3 கடைசி நாள்!
சிவகங்கை செவிலியர் காலிப்பணியிடம்: சான்றிதழ்களை சமர்ப்பிக்க நாளை அக்டோபர் 3 கடைசி நாள்!
மதுரையில் NIRS-IVUS தொழில்நுட்பத்தில் 100 இதய சிகிச்சை மைல்கல்!
மதுரையில் NIRS-IVUS தொழில்நுட்பத்தில் 100 இதய சிகிச்சை மைல்கல்!
மாதர்னிட்டி கவர் கொண்ட ஹெல்த் இன்ஷூரன்ஸ்: எடுப்பதற்கு முன் பார்க்க வேண்டிய 'டாப் 5' விஷயங்கள்!
மாதர்னிட்டி கவர் கொண்ட ஹெல்த் இன்ஷூரன்ஸ்: எடுப்பதற்கு முன் பார்க்க வேண்டிய 'டாப் 5' விஷயங்கள்!

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget