Annamalai vs EPS | ”இபிஎஸ் - ஐ சும்மா விட மாட்டேன் கூட்டணியை உடைப்பேன்..?”அண்ணாமலை பக்கா ப்ளான்!
அண்ணாமலை பதவில் விலக இபிஎஸ் தான் காரணம் என்று சொல்லப்படும் நிலையில், இபிஎஸ் தலைமையில் இருக்கும் அதிமுக - பாஜக கூட்டணியை தேர்தலுக்குள் எப்படியும் உடைத்து விட வேண்டும் என்றும் அதற்கான வேலைகளை அண்ணாமலை தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா அதிமுக - பாஜக கூட்டணியை அறிவித்தார். அப்போது பேசிய அவர் இந்த கூட்டணிக்கு தமிழ் நாட்டில் இபிஎஸ் தான் தலைமை தாங்குவார் என்றும் 2026-ல் தமிழ் நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று சொன்னார். மறுபுறம் இபிஎஸ், “கூட்டணி ஆட்சி அமையும் என்று யாரும் கூறவில்லை. டெல்லிக்கு பிரதமர் நரேந்திர மோடி என்றும் தமிழகத்துக்கு எடப்பாடி பழனிசாமி என்றுதான் அமித் ஷா கூறியிருந்தார்.
அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சியை அமைக்கும் என்றுதான் தெரிவிக்கப்பட்டது. அரசு அதிகாரத்தில் பங்கு என்று அமித் ஷா கூறவில்லை” என்று விளக்கம் கொடுத்தார். கூட்டணி ஆட்சி தொடர்பான விவகாரம் அதிமுக - பாஜக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த கூட்டணியை எப்படியாவது உடைத்து விட்டு 2026 சட்டமன்ற தேர்தலை பாஜக தலைமையில் சந்திக்க வேண்டும் எனவும் தனது தலைவர் பதவி பறிபோவதற்கு இபிஎஸ் தான் காரணம் என்று அண்ணாமலை நினைப்பதால் அதற்கான வேலைகளை அண்ணாமலை இப்போதே கையில் எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஏற்கனவே கட ந்த சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டது ஆனால் இந்த முறை 100 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்க வேண்டும் என்று பாஜக மேலிடத்திடம் சொன்னதாக தகவல் வெளியானது. அதேபோல், ஆட்சியிலும் பங்கு வேண்டும் என்பதிலும் அண்ணாமலை உறுதியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இச்சூழலில் தான் தான் தலைவராக பொறுப்பேற்றபின் பாஜக எல்லா பகுதிகளிலும் நல்ல வளர்ச்சி பெற்றது முன்பு இருந்து பாஜக இப்போது இல்லை என்று அண்ணாமலை டெல்லிக்கு தகவல் சொன்னதாக சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
அதேபோல், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை எல்லாம் மீண்டும் அதிமுக வில் இணைக்க இபிஎஸ் எக்காரணத்தை கொண்டும் சம்மதம் தெரிவிக்கமாட்டார். இதானால் இபிஎஸ்-ஐ ஒரு வழி செய்து விட வேண்டும் என்றும் அண்ணாமலை தனக்கு நெருக்கமானவர்களிடம் சொன்னதாகவும் நடப்பதை எல்லாம் தனக்கு சாதகமாக மாற்ற வேண்டும் என்றும் அண்ணாமலை பக்கா ஸ்கெட்ச் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.





















