‘’ஆளுநர் பதவி..MP சீட் !’’OFFER கொடுத்த பாஜகஓகே சொன்ன OPS?DEAL OVER!
டிடிவி தினகரன் அதிமுக கூட்டணிக்கு பச்சைக்கொடி காட்டிவிட்ட நிலையில், அடுத்ததாக ஓபிஎஸ் எந்த ரூட்டை எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்நிலையில் எண்டிஏ தரப்பில் ஓபிஎஸ்க்கு இரண்டு மெகா ஆஃபர் வழங்கப்பட்டதாகவும், ஓபிஎஸும் ஓகே சொல்ல தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல்
கட்சிகள் கூட்டணிகளை அறிவித்து களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. திமுகவோ தனது கூட்டணி கட்சிகளை இறுக்கிப்பிடித்து ஸ்ட்ராங்காக இருக்கும் நிலையில், ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் அதிமுக மெதுவாக தனது கூட்டணிகளை பலப்படுத்தி வருகிறது.
சசிகலா தினகரன் ஓபிஎஸ் என அதிமுக பிளவுபட்டு கிடந்த நிலையில், இன்று டிடிவி தினகரன் எண்டிஏ கூட்டணியில் இணைவதாக அறிவித்து ஹெட்லைனில் இடம்பெற்றார்.
இந்நிலையில் தற்போது பாஜகவின் அடுத்த ஃபோகஸாக ஓபிஎஸ் இருக்கிறார். தனிக்கட்சி தொடங்குவேன் என மும்முரமாக இருந்த ஓபிஎஸ் தற்போது பேக் அடித்துவிட்டார். இந்நிலையில் ஓபிஎஸ்ஸே கதி என இருந்த வைத்திலிங்கம் இனி இங்க இருந்தா எதிர்காலம் இல்லை என எண்ணி திமுகவில் தஞ்சமடைந்துள்ளார். ஆதரவாளர்களே கழட்டிவிட தற்போது தனிமரமாக நிற்கும் ஓபிஎஸுக்கு ஒன்று தவெக அல்லது எண்டிஏ தான் என்ற நிலை உள்ளது. எண்டிஏவுக்கு போக ஓபிஎஸ் ரெடியாக இருந்தாலு ஈபிஎஸ் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் பாஜக ஈபிஎஸுக்கும் சாதகமான வழியில் ஓபிஎஸுக்கு இரண்டு ஆஃபர்களை வழங்கி டீலை ஓகே பண்ணிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஓபிஎஸ் தேர்தல் அரசியலில் இறங்கினால் தானே ஈபிஎஸுக்கு பிரச்சனை ஆக ஆளுநர் பதவியை தர்றோம் ஆதரவு மட்டும் கொடுங்க போதும் என்கிறதாம் டெல்லி தலைமை. மேலும் மகன்களின் அரசியல் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு ராஜ்ய சபா எம்பி சீட் வழங்குவதாகவும் வாக்கு கொடுத்துள்ளதாம் பாஜக.
தவெக பக்கம் போனால் புரட்சி வேணா செய்யலாம் ஆனால் அமலாக்கத்துறை போன்ற வருங்கால பிரச்சனைகளில் இருந்து எஸ்கேப் ஆக எண்டிஏ தான் சேஃப் ஜோன் என முடிவு செய்த ஓபிஎஸ் பாஜக அதிமுக கூட்டணிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வரும் 23 அன்று பிரதமர் மோடி பிரச்சார பொதுக்கூட்டத்திற்காக தமிழகம் வரும் நிலையில், அதற்குள் கூட்டணி டீலிங்கை ஓகே செய்து மெகா கூட்டணியாக மேடையில் மோடியுடன் கைக்கோர்த்து நிற்க வைப்பது தான் தற்போதைய ப்ளான் என்கின்றனர். அத்ற்காக தான் மத்திய அமைச்சரும் தமிழக தேர்தல் மேலிட பொறுப்பாளருமான பியுஷ் கோயல் சென்னை வந்துள்ளார். அவரை சந்தித்த டிடிவி கூட்டணியை உறுதி செய்தார். அடுத்ததாக ஓபிஎஸ் மகனும் முன்னாள் தேனி எம்பியுமான ரவீந்திரநாத்தும் பியுஷ் கோயலை சந்தித்தார். ஆக எப்படியும் ஓபிஎஸ் பாஜகவின் டீலுக்கு ஓகே சொல்லிவிடுவார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்..
பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை அதிமுக பாஜகவின் எண்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிலையில் தற்போது ஓபிஎஸும் இணையப்போவதாக சொல்லப்படுகிறது. மேலும் சஸ்பென்ஸ் வைத்து வரும் தேமுதிகவும் கூடிய விரைவில் தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















