Arvind Kejriwal Trails | தோல்வியை நோக்கி கெஜ்ரிவால் காலரை தூக்கும் பாஜக பழிவாங்கிய காங்கிரஸ்! | New Dehli
10 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியை பாஜகவிடம் இழந்திருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு, அதை விட பெரிய அதிர்ச்சியாக வந்துள்ளது, நியூ டெல்லி தொகுதியை தக்க வைக்க முன்னாள் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் போராடி வருவது தான்..
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் வந்த முடிவுகள் போன்றே, டெல்லியில் பாஜகவின் கை ஓங்கி இருக்கிறது. 8 சுற்று முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், 42 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது, 28 இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது, ஒரு இடத்தில் கூட காங்கிரஸால் முதல் இடத்தை பிடிக்க முடியாக சூழல் நிலவி வருகிறது.. இந்நிலையில் 2 முறை முதல்வராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் சிறைக்கு சென்று வந்த பின் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் இறங்கியதால், நியூ டெல்லி தொகுதி தொகுதி அனைவர் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது..
புதுடெல்லி தொகுதியில் பொறுத்த அளவில் 3 முறை வென்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு போட்டியாக, அவரை எதிர்த்து 2 முன்னாள் முதலமைச்சர்களின் மகன்கள் களமிறங்கினார்கள். இதனால் நிச்சயம் இந்த முறை கெஜ்ரிவாலுக்கு இது எளிதான வெற்றியாக இருக்கப்போவதில்லை என ஆரம்பம் முதலே அரசியல் பார்வையாளர்கள் சொல்லி வந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஜெஜ்ரிவால் மற்றும் பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாகிப் சிங் இடையே கடுமையான போட்டா போட்டி நிலவி வருகிறது..
முதல் இரண்டு சுற்றுகளில் பின்னடைவை சந்தித்த அர்விந்த் கெஜ்ரிவால், அதன் பின் நுழிலையில் முன்னிலை வகித்த நிலையில், மீண்டும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். 8 சுற்று முடிவுகளில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் சிங் சாகிப் 14464 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கும் நிலையில், 14226 வாக்குகளை பெற்றுள்ள அர்விந்த் ஜெஜ்ரிவால், 238 வாக்குகள் வித்யாசத்தில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாகிப் சிங்கை விட பிந்தங்கியுள்ளார். மேலே, கீழே என போகும் முடிவுகளால் எந்நேரம் வேண்டுமானாலும், இந்த வாக்கு வித்யாசங்கள் மாறலாம் என்பதால், பரபரப்பான சூழல் நிலவி வருகிறது..
மூன்றாவது இடத்தில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் திக்ஷித் 2393 வாக்குகள் பெற்றுள்ளார். காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஒண்றினைந்து தேர்தலை சந்திக்காமல், தனித்தனியாக நின்றதால், காங்கிரஸ் வாக்குகளை பிரித்ததே இந்த தோல்விக்கு காரணம் என்று சொல்லபடுகிறது.
கடந்த 2013, 2015, 2020 ஆண்டு தேர்தல்களில் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டு முறை முதலமைச்சரான அர்விந்த் கெஜ்ரிவால் தற்போது 4வது முறையாக அங்கே வெற்றி பெற போராடி வருகிறார்.
மதுபான முறைகேடு வழக்கில் கைதாகி பின்னர் ஜாமினில் வெளிவந்த பின்னர் நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன் . வரும் சட்டப்பேரவையில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பேன் என தொண்டர்கள் மத்தியில் அர்விந்த் கெஜ்ரிவால் சூளுரைத்தது குறிப்பிடதக்கது..
அதேபோல் அதிஷி, மணீஷ் சிசோடியா தாங்கள் போட்டிட்ட தொகுதியில் வெற்றி பேற திணறி வருவதும் ஆம் ஆத்மி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





















