Arun IPS Transfer Order : 24 INSPECTOR-கள் TRANSFER..ஒரே நேரத்தில் பறந்த ஆர்டர்! அருண் IPS வார்னிங்!
ஒரே நேரத்தில் 24 இன்ஸ்பெக்டர்களை டிரான்ஸ்பர் செய்து சென்னை காவல் ஆணையர் அருண் IPS பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவரான ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலையை அடுத்து சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, சென்னை போலீஸ் கமிஷனராகப் அருண் IPS பொறுப்பேற்றார். அவரின் முதல் செய்தியாளர் சந்திப்பிலேயே அருண் ஐபிஎஸ் சொன்ன ஒரே வசனம் ”ரெளடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழிகளிலேயே நடவடிக்கை எடுக்கப்படும்” என்பது தான்.
சொன்னது மட்டுமின்றி, அதை தன்னுடைய நடவடிக்கையிலும் காட்ட தொடங்கிய அருண் IPS பதவி ஏற்றது தொடர்ந்து, ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடங்கினார். தொடர்ந்து சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும், வெளியே இருக்கும் ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று இரவு ரவுண்ட்ஸில் காவல்துறையினர் ஈடுபடுவது, அவர்களின் குடும்பத்தாருக்கு அறிவுரை வழங்குவது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வரும் ரவுடிகளை அடக்குவது என தொடர்ந்து காவல்துறை அதிரடி காட்டி வருகிறது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, ரவுடிகளுக்கு உச்சபட்ச நடுக்கத்தை ஏற்படுத்தியது கடந்த சில வாரங்களில் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நடந்த மூன்று என்கவுண்டர் சம்பவங்கள் தான். பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் , தொடர்புடைய ரவுடி திருவேங்கடம் ,தோப்பு பாலாஜி , மற்றும் பல்வேறு வழக்குகளின் தொடர்புடைய சீசிங் ராஜா ஆகிய மூன்று ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் அடுதடுத்து நடந்த இந்த 3 எண்கவுண்டர்களால், எங்கே லிஸ்டில் அடுத்தது நம்முடைய பேரும் வந்து விடுமோ என்ற பயத்தில் ரவுடிகள் கலங்கி போய் இருக்கிறார்கள்.
இதில் உட்சபட்சமாக ஐயா எண்கவுண்டரில் சுட்டுருவாங்களோனு பயமா இருக்கு, குண்டடி பட்டு சாவதை விட சிறையில் இருப்பதையே விரும்புகிறேன் என்று தேடப்பட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி பிகில் மணி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்நிலையில் தான் சென்னையில் காவல்துறையினரின் செயல்பாடுகளை லிஸ்ட் எடுத்து ஒரு ரிப்போர்ட்டை அருண் IPS தயார் செய்துள்ளதாக தெரிகிறது.. அதன் அடிப்படையில், நேற்றி ஒரே நாளில் 24 இன்ஸ்பெக்டர்களுக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் பிரபித்து அதிரடி காட்டியுள்ளார் அருண் IPS.
இது ஒரு நிர்வாக ரீதியிலான நடைமுறை என்று காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டாலும், ஒழுங்காக இல்லை என்றால் தூக்கி அடித்து விடுவேன் என்ற வார்னிங் சைன் தான் அருண் IPS-ன் இந்த நடவடிக்கை என்றூ சொல்லப்டுகிறது.
குறிப்பாக தென் சென்னை பகுதிகளில் பெரிதாக கைவைக்காத அருண் IPS, வடசென்னை, மத்திய சென்னை பகுதிகளில் மாற்றங்களை செய்துள்ளார். இதனால் காவல்துறை அதிகாரிகளும் சற்றே அதிர்ந்து போயுள்ளனர்.