Yashika anand Surgery : யாஷிகாவிற்கு இன்னும் பல surgery பண்ணனும்.. தங்கை சொன்ன தகவல்!
மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கினார். யாஷிகாவின் நண்பர்களில் ஒருவரான பவானி வாலிச்செட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். யாஷிகாவும் அவர்களுடன் வந்த இரண்டு நண்பர்களும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் யாஷிகா விரைவாக நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்த நிலையில், அவரது தங்கை ஓஷீன் ஆனந்த், யஷிகாவின் உடல்நிலை குறித்து தகவல் கூறியுள்ளார். யஷிகா இப்போது சுயநினைவாக உள்ளார் என்ற செய்தியைப் பகிர்ந்த ஓஷீன், ஒரு முக்கியமான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகவும் அறிவித்தார். அதே நேரத்தில் அடுத்த சில நாட்களில் எலும்பு முறிவுகளுக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்படும் என்றும் கூறினார்.





















