Beat Songs: குத்துப்பாடல் கெத்து.. டாப் 5 நடிகைகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Beat Songs: குத்துப் பாடலில் ஆட கெத்து சம்பளம் பெற்ற நடிகைகளின் பட்டியல் தான் இது. குத்து சாங், பீட் சாங் இப்படி என்ன வேண்டுமானாலும் பெயர் வைத்துக் கொள்ளலாம். ஆனால், இந்திய சினிமாவில் காலம்காலமாகவே இப்படியான பாடல்களுக்கு பெரும் வரவேற்பு உண்டு. என்ன முன்பெல்லாம் இந்தப் பாடல்களுக்கு கிளாமர் கேர்ள், செக்ஸி கேர்ள் என்ற பெயரில் தனியாக நடிகைகள் வைத்திருப்பர். குறைந்த சம்பளத்தில் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டனர். காலப்போக்கில் கிளாமர் நடனக் கலைஞர்கள் அதிகரித்தனர். சில்க், டிஸ்கோ சாந்தி, அனுராதா போன்ற நடிகைகள் இப்படியான குத்துப் பாடல்களுக்குப் பயன்படுத்தப்பட்டனர். சில்க் இதில் உச்சம் தொட்டார். அவரைப் பற்றி எழுதினால் அது தனிக்கதை.





















