Allu Arjun son letter: ‘’அப்பா நீங்கதான் NO.1’’ மகன் எழுதிய CUTE LETTER! எமோஷனலான அல்லு அர்ஜுன்
அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 இன்று வெளியான நிலையில் அவரது மகன் அயன் எழுதியுள்ள க்யூட்டான கடிதம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா 2 இன்று வெளியாகி உள்ளது. இந்த நிலையில், அல்லு அர்ஜுன் தன் சோஷியல் மீடியா பக்கத்தில் எமோஷலான பதிவு ஒன்றை போட்டுள்ளார். தன் மகன் அயான் தனக்கு எழுதிய கடிதத்தை அல்லு அர்ஜுன் பகிர்ந்துள்ளார். அந்த கடித்ததில் அயான், உலகின் தலைசிறந்த நடிகர். புஷ்பா2: தி ரூல் வெறும் திரைப்படம் அல்ல அது அன்பின் பிரதிபலிப்பு.” என்று கூறியுள்ளார்.
மேலும், "நான் உங்களை நம்பர் ஒன் நடிகராக பார்க்கிறேன். இந்த உலகத்தின் தலைசிறந்த நடிகரின் திரைப்படம் வெளியாவதால் இன்றைய நாள் ஒரு சிறப்பான நாள். இந்த நாளில் உங்களது உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. புஷ்பா வெறும் திரப்படம் மட்டும் அல்ல காதல் உங்கள் நடிப்பின் ஆர்வத்தை பிரதிபலிக்கும் ஒன்று என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். முடிவு எப்படியாக இருந்தாலும் நீங்கள் எப்போதும் என்னுடைய ஹிரோவாக இருப்பீர்கள். உலகம் முழுவதும் உங்களுக்கு கோடிக்கனக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். நான் எப்போதும் உங்கள் நம்பர் ஒன் ரசிகனாகவும் நலன் விரும்பியாகவும் இருப்பேன். ”என்று கூறியுள்ளார்.
தன் தந்தைக்கு அன்பு பொங்க அயான் எழுதியுள்ள கடித்ததை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.