அதிமுகவில் காளியம்மாள்? நாகை MLA சீட் டிக் அடித்த EPS
நாம் தமிழர் கட்சியில் இருந்து விளகிய காளியம்மாள் அதிமுகவில் இணைய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமாக விளங்கியவர் காளியம்மாள். அவருக்கு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் கட்சியை விலகுவார் என சமீப காலமாக பேச்சுகள் அடிப்பட்டு வந்தன. அதனை மெய்ப்பிக்கும் வகையில், சில நாட்களுக்கு முன்பு, நாம் தமிழர் கட்சியை விட்டு விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டார், காளியம்மாள்.
இந்நிலையில்தான், காளியம்மாள் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான வண்ணம் இருந்தன. இந்த தருணத்தில், சரியாக தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவுக்கு ஓரிரு நாட்களுக்கு முன் அவர் நாதகவில் இருந்து விலகியது, இந்த கணிப்பை மேலும் வலுப்படுத்தியது. ஆனால், அவர் தவெகவில் இணையவில்லை. இதனையடுத்து நாம் தமிழர் கட்சியில் தனக்கான அங்கீகாரம் சரியாக கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இருந்த காளியம்மாளுக்கு, ஆளும் கட்சியான திமுகவில் இருந்து எம்பி சீட் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்தநிலையில் அடுத்ததாக எந்த கட்சியில் அவர் இணைவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தற்போது அவர் அதிமுகவை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காளியம்மாள். ஒரு செய்தியாளர் சந்திப்பில், எந்த கட்சியிலிருந்து என்னை அழைத்தாலும், அந்த கட்சியின் நோக்கம் சரியாக இருந்தால் அங்கு இணைவேன் என்று தெரிவித்து இருந்தார். மேலும், இந்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று காளியம்மாள் ஏற்கனவே கூறி இருந்தார்.
காளியம்மாள் தனிக்கட்சி தொடங்கப் போகிறாரா என்ற கேள்வி எழுந்தநிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் காளியம்மாள் அதிமுகவில் இணைய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக போன்ற பெரிய கட்சியில் காளியம்மாள் இணைவது மூலம் அவருக்கு சட்டமன்றத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்றும் வெற்றி பெறும் வாய்ப்பும் அதிகம் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிம்றன. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















