(Source: Poll of Polls)
சினிமாவுக்கு GOOD BYE ரஜினி திடீர் முடிவு! இதுதான் கடைசி படமா? | Rajini Retirement Kollywood
நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாகவும் இந்தப் படம் தான் சூப்பர் ஸ்டாரின் கடைசி படம் என்றும் கோலிவுட்டில் காட்டுத்தீ போலப் பரவி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ரஜினி மற்றும் கமல் இருவரும் 46 ஆண்டுகள் கழித்து இணைந்து நடிக்க இருப்பதாக உறுதிபடுத்தினர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் படத்திற்கான கதையும் இயக்குநரும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினி தெரிவித்தார். முன்னதாக லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கப்போவதாக கூறப்பட்டது. ஆனால் ஜெயிலர் 2 வுக்குப் பிறகு நெல்சனே இந்தப்படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது. ரஜினிக்கு நெல்சன் சென்ன ஒன்லைன் ஸ்டோரி பிடித்து விட்டதாக கூறப்படுகிறது.
தற்போது ரஜினி நெல்சன் இயக்குத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மறுபக்கம் கமல்ஹாசனின் 237 ஆவது படத்தை இரட்டை ஸ்டண்ட் கலைஞர்களான அன்பறிவு இயக்க இருக்கிறார்கள். ஷியாம் புஷ்கரன் இப்படத்திற்கான திரைக்கதை எழுதவிருக்கிறார். ஜெயிலர் 2வுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் அடுத்த படம் குறித்துப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அது ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படம் என சொல்லப்பட்டது.
ஆனால் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அவர் அடுத்ததாக, இயக்குநர் சுந்தர் சி.யின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கப் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கும்படியாக திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ரஜினி - சுந்தர் சி படம் மற்றும் ரஜினி - கமல் - நெல்சன் படமே ரஜினிகாந்த் திரைப்பயணத்தில் கடைசி இரு படங்கள் என சொல்லப்படுகிறது. இதற்கு முன் பல முறை ரஜினிகாந்தின் கடைசி படம் என சில படங்கள் வதந்தியாக சொல்லப்பட்டது. ஆனால் இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ரஜினி, கமலுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே முக்கியமான படமாக இது அமையும். இந்த செய்தி ரஜினியின் ரசிகர்கள் மத்தியில் இந்தச் செய்தி ஒருபக்கம் உற்சாகத்தையும், மறுபக்கம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.





















