3 மில்லியன் வியூஸ் - இணையத்தை கலக்கும் தட்டான் தட்டான் வண்டிக்கட்டி.!
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் பட்டியலில் நிச்சயம் தனுஷ் அவர்களுக்கும் இடமொன்று உண்டு. அண்மையில் வெளியான அசுரன் திரைப்படம் அவருடைய ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது என்றால் மிகையல்ல.
மேலும் Netflix நிறுவனம் இயக்க, ஹாலிவுட்டில் பிரபலமான அவெஞ்சர்ஸ் "End Game" திரைப்படத்தின் இயக்குனர் இயக்கத்தில் வெளியாக உள்ள "The Gray Man" படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் Chirsh Evans நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 2018 ஆண்டு வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற "பரியேறும் பெருமாள்" திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராக இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் படத்தில் தனுஷ் நடித்துவருகின்றார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தற்போது Post Production பணிகள் நடந்து வருகின்றது.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படத்தில் இருந்து கடந்த மார்ச் 11ம் தேதி தனுஷ் குரலில் "தட்டான் தட்டான்" என்ற பாடல் வெளியானது. கடந்த 5 நாட்களில் இந்த பாடல் சுமார் 3 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அசத்தியுள்ளது.