India | பாகிஸ்தானுடன் குடும்ப வணிகம் இந்தியாவை ஒதுக்கிய டிரம்ப் Ex USA பாதுகாப்பு ஆலோசகர் பகீர்

பாகிஸ்தானுடனான தனது குடும்ப வணிகத்திற்காக இந்தியாவுடனான உறவை டிரம்ப் ஒதுக்கி தள்ளிவிட்டார் என்று அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறியிருப்பது சர்வதேச அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப்பிறகு இந்தியா - பாகிஸ்தான் மோதலை தீர்ப்பது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு விதமான சர்ச்சைக்குறிய கருத்துக்களை பேசினார். இதனை தொடர்ந்து அவரது கருத்துக்களை திட்டவட்டமாக மறுத்தது இந்தியா. இதனால் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இந்தியா தங்கள் நாட்டிற்கு அதிக வரி விதிப்பதாக கூறி இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 25% வரி விதித்தார் டிரம்ப். இச்சூழலில் அமெரிக்காவின் இந்த செயலுக்கு செக் வைக்கும் முனைப்பில் உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.மறுபுறம் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

 

இந்த நிலையில் தான் பாகிஸ்தானில் தனது குடும்பத்தின் வணிக ஒப்பந்தங்களை மேம்படுத்துவதற்காக இந்தியாவுடனான உறவுகளை டொனால்ட் டிரம்ப் தியாகம் செய்ததாக அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுடன் - தொழில்நுட்பம், திறமை, பொருளாதாரம் மற்றும் சீனாவின் அச்சுறத்தலை கையாள்வதில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட வேண்டும். இந்தியாவுடன் - பல ஆண்டுகளாக இரு கட்சி அடிப்படையில், அமெரிக்கா தனது உறவை வலுப்படுத்த உழைத்து வருகிறது. அதற்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது டிரம்ப் குடும்பத்துடன் வணிக ஒப்பந்தங்களில் ஈடுபட பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்ததன் காரணமாக, டிரம்ப் இந்திய உறவை ஓரங்கட்டிவிட்டார். இது அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஜேக் சல்லிவன் கூறியுள்ளார். தற்போது இவரது இந்த பேச்சு உலக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola