Ungaludan Stalin | உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் வைகை ஆற்றில் கிடந்த அவலம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் அனைத்தும் வைகை ஆற்றில் கிடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் அடிப்படை பிரச்சனைகளான முதியோர் ஓய்வூதியம், வீட்டு மனை பட்டா, மருத்துவ உதவி, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பிரச்சனைகள் சம்மந்தமான கோரிக்கைகளை இந்த முகாமில் கொடுத்தல் 45 நாட்களில் நிறைவேற்றித் தரப்படும் என்ற நம்பிக்கையில் தான் மனு கொடுக்கிறார்கள்.
அப்படி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியைச் சுற்றியுள்ள ஏனாதி, கீழடி, மடப்புரம், நெல் முடிக்கரை உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கடந்த 22 மற்றும் 22 ஆம் தேதி கொடுத்த 100க்கும் மேற்பாட்ட மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் கொட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. இச்சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்டோர் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.